.
- தயான் ஜயதிலக
தமிழ் புலம் பெயர் சமூகத்தினர் மே 12 – 19 திகதிகளுக்கு இடைப்பட்ட வாரத்தில் மேற்கத்தைய தலைநகரங்களில் யுத்தத்தின் இறுதி வாரம் மற்றும் பிரபாகரனின் உயிர் அழிவுக்கு காரணமாகவும் அமைந்த கடைசி வாரத்தை துக்க அனுஷ்டிப்பாகவும் எதிர்ப்பாகவும் கருதி அரங்கேற்றிய ஆர்ப்பாட்ட பேரணிகளின் புகைப்படங்களை ஸ்ரீலங்கா ஊடகங்கள் காட்சிப் படுத்தாமல் போனது உண்மையில் மிகவும் பரிதாபகரமானது. பரீசில் நடைபெற்ற ஊhவலத்தையும் அதன் தொடர்ச்சியாக ஈபில் கோபுரத்துடன் ஒரே நேர்கோட்டில் வசதியான இடத்தில் இணையும் ரொகற்டோவில் இடம்பெற்ற ஒன்றுகூடலையும் என்னால் காணமுடிந்தது.
எனக்கு வந்த சில தொலைபேசி அழைப்புகள், நியுயோர்க், லண்டன், ஜெனிவா மற்றும் ரொரான்ரோ ஆகிய இடங்களில் நடைபெற்ற பேரணிகளும் ஒரேமாதிரியானவை என்றும் பரீஸ் அதற்கு விதிவிலக்கல்ல என்றும் என்னிடம் தெரிவித்தன. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் வெளிப்படையான காட்சியாகவும் மற்றும் யாராவது ஏதாவது காரணத்திற்காக மட்டும் அதைப்பார்க்க விரும்பாமலிருந்தால் காட்சியில், பயன்படுத்தப்பட்ட சாட்சிப் பொருள்தான் அதற்குக் காரணம் என சந்தேகப் படமுடியும்.
கறுப்புக் கொடிகளும், மரபுப்படி விருந்தோம்பும் நாடு அல்லது கண்டம் (உதாரணம்: ஐரோப்பிய ஒன்றியம்) இவற்றின் கொடிகளுக்கு புறமே மிகத் தனியான காட்சியாகத் தென்பட்டது, உறுமும் புலி, 33 ரவைகள் மற்றும் துப்பாக்கிமுனையில் செருகப்படும் குத்துவாள் இணைக்கப்பட்ட குறுக்காக வைக்கப்பட்ட துப்பாக்கிகள் என்பனவற்றைக் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (எல்.ரீ.ரீ.ஈ) கொடி மட்டுமே. அது மட்டுமே அங்கிருந்த ஒரு அரசியல் கொடி. நன்கு அறியப்பட்ட அரசியல் அல்லது இயக்க அடையாளத்தை அங்கீகரிக்கும் தன்மையான ஒரு கொடி.ஒரு திறந்த பாரஊர்தியில் கொண்டு செல்லப்பட்ட காலஞ்சென்ற திரு.பிரபாகரனைப்போல உடையணிந்த அல்லது பகுதி உடையணிந்த உடையணியாத ஒரு மனிதரும் அந்த ஊhவலத்தில் ஒரு அங்கமாக இருந்தது.
லண்டனில் சிகப்பும் மஞ்சளும் கலந்த கொடிகள் இருந்தன ஆனால் பெரும்பாலான நிகழ்ச்சித் திட்டமும் புலிகளின் வரையறுக்கப்பட்ட தரத்தை ஒத்த மட்டமான ஆர்ப்பாட்டக் காரர்களுடையதாக இருந்தது. ரபள்ஸ்கர் சதுக்கத்தை நோக்கியதாக இருக்கும் தேசிய காட்சியகத்தின் உயரமான மூலையில் கூட ஒரு புலிக்கொடி ஏற்றப்பட்டிருந்தது. புலிகளின் கொடியை ‘தமிழ் தேசியக் கொடி’(மற்றும் பிரபாகரனை தமிழ் தேசியத் தலைவர்) என்றும்; கோருபவர்கள் தமிழ் சமூகத்துக்கு அளப்பரிய தீங்கினை ஏற்படுத்துகிறார்கள். அந்த இனக் கூட்டுப் பெயர் மூலம் அடையாளம் காண்பிப்பது, பயங்கரவாத, பிரிவினைவாத பாசிச இயக்கம் ஒன்று தான் கொலை செய்த அநேகம் பேர்களிடையே நேருவின் பேரனையும் ஒரு தேர்தல் பிரச்சாரத்தின்போது, தற்கொலை குண்டுதாரி மூலம் கொலை செய்தது என்கிற பதாகையை ஏந்திக் கொண்டிருப்பது போலிருக்கும்.
அது உண்மையில் அந்தக் கோரிக்கை போலியானதாக இருந்தால் மட்டுமே இல்லாவிடில் பிரச்சனைகள் இன்னும் மோசமாக இருக்கும்.
நியுயோர்க் புகைப்படங்கள் காட்சி தருவது, வீசிக் காண்பிக்கப்படும் புலிக்கொடிகளுக்கு மத்தியில் காணக்கூடியதாக இருக்கும் “இன்று லிபியாவும், ஐவரி கோஸ்ட்டுமானால் நாளை ஏன் ஸ்ரீலங்காவாக இருக்கக் கூடாது” எனும் வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை.
கடந்த வாரம் ஐரோப்பாவில் நடந்தவை என்னைப் போலவே ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் பெரும்பான்மையான அதன் பிரஜைகளுக்கும் விடயங்களை வெகு தெளிவாகப் புரிய வைத்திருக்;கும். மீண்டும் ஒருமுறை விளையாட்டு பூச்சியத் தொகையிலிருந்து ஆரம்பமாகிறது.
இறந்தவர்களுக்காகவும் மற்றும் தமிழர்களின் நிலமைகளுக்கும் எதிர்ப்பு தெரிவித்து துக்கம் அனுஷ்டிக்கும் நாளாக தமிழர்களுக்கு எதிரான ஜூலை 83ல் வன்முறைகள் இடம்பெற்ற நாட்களான ஜூலை 23 அல்லது 29 தெரிவு செய்திருந்தால் என்னால் நிலமைகளை நன்கு விளங்கிக் கொள்ள முடிந்திருக்கும். மே 18 – 19 ஒரு யுத்தம் நிறைவடைந்த நாளை அடையாளப் படுத்துவது பெரும்பான்மையான பிரஜைகளை இம்சைப் படுத்துவதற்காக.
துக்கம் அனுஷ்டிப்பவர்கள் ஜூலை 23 – 29 தெரிவு செய்யாமல் மே 18 – 19 தெரிவு செய்திருப்பது ஏனென்றால் எல்லாவற்றுக்கும் மேலாக அவர்கள் துக்கம் அனுஷ்டிப்பது போரின் தோல்வியை, புலிகளின் ஆயுதப்படைகளின் அழிவையும் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணத்தையுமே.
அங்கு காட்சி தந்த பதாகைகள், வடபகுதி தமிழர்களின் பெரும்பான்மை அரசியற்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினதாகவோ அல்லது ஒட்டு மொத்த தமிழ் அரசியற்கட்சிகளின் கூட்டாகவோ இருந்திருக்கமானால் என்னால் நன்கு விளங்கிக் கொள்ள முடிந்திருக்கும். எப்படியாயினும் கலப்பற்றதாய் எங்கும் ஏகபோகமாய் வியாபித்திருந்த புலிக் கொடிகள் எங்களுக்குக் காட்டித் தருவது இந்த எதிர்ப்பாளர்கள் எங்கிருந்து வருகிறார்கள் அவர்களின் இலட்சியங்களும் நோக்கங்களும் என்ன என்பதனையே.
சில நாடுகளில் ஆhப்பாட்ட பேரணிகள் ரி.ஜி.ரி.ஈ என அழைக்கப்படும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால். பரீசில் அது தமிழ் இணைப்புக் குழு (ரி.சி.சி)வினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அது எல்லா எல்.ரீ.ரீ.ஈ பிரிவினைரையும் ஒருமித்து அழைத்து வந்திருந்தது. லண்டனில் ஏற்பாட்டாளர்கள் பிரித்தானியத் தமிழர் பேரவையினர் (பி.ரி.எப்), அந்த அமைப்பின் திரு.சுரேன் சுரேந்திரனை சமீபகாலங்களில் அங்கு காணமுடிவதில்லை, அத்திலாந்திக் ஊடான முக்கிய பிரசங்கங்களின் போதும் கூட.
புலிக்கொடியின் தெளிவான ஆளுமை எங்களுக்குத் தெரிவிப்பது, ரி.ஜி.ரி.ஈ மற்றும் பி.ரி.எப் என்பன புலிகளின் முன்னணி நிறுவனங்காகவும் மற்றும் சக பயணிகளாகவும் சேவையாற்றி வருவது அதிகரித்து வருகின்றன என்பதனையா?
சில நாடுகளில் உள்ள பல்வேறு கட்சிகளினதும் அரசியற் பிரமுகர்கள் புலிக்கொடிகளை வீசிக் காண்பிக்கும் பேரணியினர் மத்தியில் உரையாற்றுவதைக் காண்பிக்கும் படங்கள் வெளிப்படுத்துவது, மேற்கின் ஜனநாயக உலகில் உள்ள சில அரசியல் சக்திகள் ஒன்றில் அனுதாபமுடையவர்களாக இருக்கிறார்கள். அல்லது புலிகளின் குணாதிசயங்களை அவாகள் பொருட்படுத்துவதில்லை என்பதனையே.
அவர்கள் பொருட்படுத்தாதிருக்கலாம். ஆனால் ஸ்ரீலங்காவாசிகளாகிய நாங்கள் அப்படியிருக்க முடியாது.
ஒரு சில மேற்கத்தைய நாடுகள் அல்லது அநேகமானவை என்று கூடக் கூறலாம். சம்பவத்தின் உண்மையான அடையாளத்தையும் மற்றும் குணாதிசயங்களையும் குருட்டுக் கண்கொண்டு பார்க்கலாம். ஆனால் ஸ்ரீலங்கர்களாகிய எங்களால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. இது இறுதிநிலையில் உள்ள சிறுபான்மையோர் நீதியையும் தன்னாட்சியையும் தேடுவதற்கான ஒரு இயக்கமல்ல. இது நாங்கள் எதிர்கொண்டு தசாப்தங்களாகப் போராடிய அதே பழைய பாசிச பிரிவினைவாத எதிரியாகிய புலிகள் அமைப்பினர். எங்களுக்கு எதிராக துப்பாக்கிகளை ஏந்திப் போராடித் தோற்றுப்போன அதே பழைய பயங்கரவாத இயக்கம் மற்றும் அதன் ஆதரவாளர்கள், அனுதாபிகள், மற்றும் சகபயணிகள் ஆகியோர்.
அவர்கள் எங்களுக்கு எதிராக இப்போது ஒரு பனிப்போரைத் தொடர்ந்துள்ளார்கள். அதே பழைய விடயத்துக்காக. ஆனால் இப்போது அவர்களுடன் சில புதிய கூட்டாளிகளும்,அல்லது அலுமாரிக்குள்ளிருந்து எடுத்து வந்த தருஸ்மான் அறிக்கையை வைத்திருக்கும் கூட்டாளிகளும் உள்ளனர். லிபியா மற்றும் ஐவரி கோஸ்ட் பற்றி கடந்த வாரம் அவர்கள் வெளிப்படுத்திய சுலோகங்களின் மாதிரி இதற்குச் சாட்சியாகிறது. அதன் கருத்து என்னவெனில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளால் நாடுகளில் தங்களின் செல்வாக்குள்ளவர்களின் அரசாங்கத்தை அமைப்பது என்பதாகும். இலக்குகளை முற்றாக கைவிடவில்லை ஒரு தந்திரமான இடைநிறுத்தல் முயற்சி அல்லது அவர்கள் கைவிட்டது தங்களால் இயலாமற்போன காரணத்தால். தமிழ் புலம் பெயர்ந்தவர்களின் புலி முத்திரையிட்ட சந்தையில் சுய விமர்சனங்கள் கிடையாது.
ரபள்கர் சதுக்க மேடையில் சுற்றிலும் புலிக் கொடிகள் புடைசூழ, ஒரு பரிகாசமான சிறைக்கூண்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் ஆளுயுர உருவப்பொம்மை கம்பிகளுக்குப் பின்னால் ”யுத்தக் குற்றவாளி” என்கிற முத்திரையுடன், அதேவேளை கறுப்பு உடை தரித்த ஒரு இளம்பெண் தருஸ்மான் குழுவினரது அறிக்கையை வாசிக்கிறார். அந்த அறிக்கை குண்டுகள் நிறைக்கப்பட்ட ஆயுதத்தை புலிகள் சார்பான தமிழ் புலம் பெயர்ந்தவர்களிடம் வழங்குகிறது.
புலிகள் அந்தப் பக்கம் நிற்பார்களானால், நிச்யமாக நான் நிற்கவேண்டியது இந்தப் பக்கம். முடிந்தவரை மிகத் துல்லியமாக, ஏனென்றால் நாட்டுக்கு வெளியிலுள்ள ஸ்ரீலங்காவுக்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் புலிகளை ஆதரிக்கிறாhகள். நாட்டினுள்ளிருக்கும் மிகப் பெரும்பான்மையான ஸ்ரீலங்கா பிரஜைகள் நிச்சயம் அரசாங்கத்தை ஆதரிப்பார்கள்;. ஏனெனில் அது அவர்களின் அரசாங்கம்.
எப்படியாயினும் உறுதியான நிலைப்பாடு அத்தனை நல்லதுமல்ல ஆனால் இலட்சியத்திலிருந்து பின்வாங்குவது முற்றாக நல்லதல்ல. இந்தப் பனிப்போரை கடுமையான சக்திகளைக் கொண்டு வெற்றி காண முடியாது. ஆனால் அதற்காக பேராசிரியர் ஜோ நையின் பிரபலமான சாதுர்யமான சக்தி யைப் பயன்படுத்தலாம் அதாவது மென்மையான சக்தியினதும் கடுமையான சக்தியினதும் கூட்டான கலவை.
யதார்த்தவாதமும் நியாயமும் இணைந்த கலவையைப்பற்றி வெற்றிகரமான பதிலை எந்தவொரு நாட்டினாலோ அல்லது ஒரு தலைவராலோ ஒரு பாடப்புத்தகத்து உதாரணம்போல முழுப்பாடமும் நடத்த முடியாது. குறிப்பாக ரஷ்யப் புரட்சிக்குப் பின் லெனின் அனுபவித்த வெளியாட்களின் அச்சுறுத்தல்களைக் காட்டிலும் அதிக அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும்போது.
லெனின் குணாதிசயத்தின்படி என்ன செய்யவேண்டுமோ அதில் அவர் தெளிவாகவே இருப்பார். கஷ்டப்பட்டு போராடியதனால் கிடைத்த புரட்சியின் வெற்றியை பதனிட்டு, பாதுகாத்து, ஒருங்கிணைக்கும் விடயத்தில் அவர் உறுதியாக இருந்தார்.
பழமைவாத படிமுறைகளிலிருந்து பிரிந்து முதலாம் உலக யுத்தம் வழங்கிய ஆரம்பத்தை நன்கு பயன்படுத்தி மரபுவாத ஐரோப்பிய புத்தகப் பூச்சிகளான இடதுசாரிகளுக்கு எதிராக அதிகாரத்தைக் கைப்பற்றியது மூலம் வரலாற்று வெற்றியை விரோத மனப்பாங்கான வெளிச் சூழல்களுடன் ஒருங்கிணைபப்தில் அவர் மிகவும் தெளிவாக இருந்தார். விட்டுக்கொடுப்புகளும் சலுகைகளும் அவசியமானவை. இரண்டடி முன்னேறத் தேவைப்படின் ஒரு அடி பின்வைப்பது தவறில்லை.
டசினுக்கும் மேற்பட்ட சர்வாதிகார நாடுகளின் இடையூறான இராணுவத்துடன் போராடி வென்றதுடன் மோசமான உள்நாட்டு யுத்தம் ஒன்றையும் வென்றதின் பின்னர் 1920ல் படைகளின் சர்வதேச சமநிலை சரியற்றது மற்றும் குறிப்பிட்ட ஒரு காலத்துக்கு அப்படித்தான் இருக்க வேண்டுமென லெனின் அங்கீகரித்தார். அதனால் அவர் புரட்சியின் தீவிரத் திட்டங்களை தலைகீழாக மாற்றி புதிய பொருளாதாரக் கொள்கையை முன்வைத்தார். தீவிர இடதுசாரி கொள்கையின்படி புரட்சியினை வஞ்சித்து முதலாளித்துவதை திரும்பவும் அமைப்பது சாதாரண விடயமல்ல. ஆனால் முதலாம் உலக யுத்தத்தின் மற்றும் உள்நாட்டுப் போர்களின் பின்னர் மற்றுமோர் வன்முறைக் கிளர்ச்சி ரஷியாவின் பொருளாதாரத்தை நாசமாக்கி, புரட்சியால் பெற்ற வெற்றியின் நன்மைகளைப் பாழடித்துவிடும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
1920 – 1923 ல் லெனின் செய்த விசாலமான விட்டுக் கொடுப்புகளால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சக்திகளை துல்லியமாய் எதிர்கொண்டு முக்கிய பொருட்களைப் பாதுகாத்ததோடு அதன் காரணமாக ரஷ்யப் புரட்சியிலிருந்தும் வெற்றி பெற முடிந்தது. நேரத்தையும் இடைவெளியையும் ஒருங்கிணைத்தபடியால் அதன் வரலாற்று அரசியல் - இராணுவ வெற்றியானது பாதகமான சர்வதேசக் கட்டத்தில் கூட அதன்மீது எந்தக் கட்டுப்பாட்டையும் மேற்கொள்ள முடியாமற்போயிற்று.
யதார்த்தத்தை விடத் தீவிரமானது எதுவுமில்லை என்று சொல்வதை லெனின் மிகவும் விரும்பினார். பொய்யான மனச்சாட்சியோ அல்லது பழைய மரபுகளோ மற்றும் யோசனை செய்யும் பழக்கமோ யதார்த்தமாக வெளியாகியிருக்கும் சவால்களை தடை செய்யும் விதத்தில் அவரைக் குருடாக்க அவர் அனுமதித்ததில்லை. மறுசீரமைப்புக்கான துணிவை அவர் ஒருபோதும் தவற விட்டதில்லை. திருத்தங்கள் மாற்றங்கள் செய்யவேண்டிய விடயத்தில் எடுக்க வேண்டிய துணிவும் தெளிவும் அவரிடமிருந்தது.
நாங்கள் எப்படி?
தமிழில்: எஸ்.குமார்