tamil.samayam.com - பஹன்யா ராமமூர்த்தி : மோசமாகும் மன்னர் சார்லஸின் உடல்நிலை.. தயாராகும் 'ஆபரேஷன் மெனாய் பாலம்' இறுதிச்சடங்கு திட்டங்கள்!
இங்கிலாந்து மன்னர் இரண்டாம் சார்லஸின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருவதால் அவருடைய இறுதிச்சடங்கு குறித்த திட்டங்கள் நாளுக்கு நாள் புதுப்பிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மன்னரின் இறுதிச்சடங்கு ஏற்பாடுகள் ஆபரேஷன மெனாய் பாலம் என்ற மறைமுக பெயரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சனி, 27 ஏப்ரல், 2024
British மன்னர் சார்லஸின் உடல்நிலை கவலைக்கிடம்! .. தயாராகும் இறுதிச்சடங்கு திட்டங்கள்!
இலங்கை Chirch குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் (RAW) – விமல் வீரவன்ச
Ajith doval |
wimal weerawansa |
வீரகேசரி: இலங்கை சேர்ச் குண்டுத்தாக்குதலின் பின்னணியில் மோடியின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் – விமல் வீரவன்ச
உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்மை தன்மை என்ன,
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதா,? இந்த தாக்குதலால் இலங்கை தேர்தலில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை,இந்திய தேர்தலிலேயே பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன .
எதிர்காலத்தில் தாக்குதல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரசன்ச தெரிவித்தார்.
நடிகை ருக்மணி தேவி - சிங்கள திரையுலகின் டெய்சி ராசம்மா டேனியல்ஸ் (ருக்மணி தேவி) நுவரெலியா,
Pathmanathan Mahadevah : டெய்சி ராசம்மா டேனியல்ஸ் (ருக்மணி தேவி) நுவரெலியா, ரம்பொட கிராமத்தில் 1923 ஜனவரி 15 அன்று கொழும்புச் செட்டி கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தார். ஐந்து பெண்களில் இரண்டாவது பெண், டெய்சியின் தந்தை ஜான் டேனியல் ஒரு தோட்டக்காரர், மற்றும் அவரது தாயார் பெலன் ரோஸ் ஒரு ஆசிரியராக இருந்தார்.
அவர் நடித்த படங்களின் எண்ணிக்கை எண்பத்து நான்கு. ருக்மணி தனது கணவர் எடி ஜெயமான்னவுடன் இணைந்து நடித்த படங்களில் “கெளஹ ஹண்ட” ரசிகர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற படமாக அறியலாம். சீரியலதா (குஸ்டினா அல்லது ஸ்ரீலதா), தெய்வ யோகா (ஷீலா தாஸ்கோன், பெமிலா பிசாவா), கணவன் மனைவி தெய்வம் (சந்திரா), ஸ்பிரிட் அபோவ் (எமிலி) மற்றும் காட் வேர் ஆர் யூ (மரியா) ஆகியவை வேறு சில பிரபலமான படங்கள். மேலும் அவர் பிரேமாவாக நடித்த “நலகனன” திரைப்படம் இலங்கை கலாசாரத்திற்கு ஏற்றாற்போல் அவரது உடை கவர்ச்சியாக இருப்பதாகக் கருதி, தணிக்கை செய்யப்பட்டது.
யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது
ilakkiyainfo.com : தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.
வெள்ளி, 26 ஏப்ரல், 2024
3 இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு - (ஈரான் ராணுவத்துடன் வர்த்தகம்)
nakkheeran.in : இந்திய நிறுவனங்களுக்கு பொருளாதாரத் தடை; அமெரிக்கா அதிரடி அறிவிப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரியங்காவை எதிர்த்து போட்டியிட வருண் காந்தி மறுப்பு
மாலைமலர் : புதுடெல்லி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக கருதப்படும் தொகுதியாகும்.
காங்கிரஸ் தலைவர் சோனியா அந்த தொகுதியில் இருந்துதான் பாராளுமன்றத்துக்கு தேர்வானார். இந்த தடவை அந்த தொகுதியில் பிரியங்காவை போட்டியிட வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காகவே சோனியா அங்கு போட்டியிடுவதை தவிர்த்து மேல்சபை எம்.பி.யாகி இருக்கிறார்.
முதன் முதலாக தேர்தல் களத்துக்கு வரும் பிரியங்காவுக்கு முதல் தேர்தலிலேயே நெருக்கடி கொடுத்து தோல்வியை பெரியதாக கொடுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதாவும் தீவிரமாகி உள்ளது. பா.ஜ.க. மூத்த தலைவர்கள் இது தொடர்பாக பல தடவை ஆய்வு செய்தனர்.
யாழ்ப்பாண தேசவழமைச் சட்டமும் , வெள்ளாளியமும்! அருண் சித்தார்த்
Arun Siddharth : தேசவழமைச் சட்டமும் , வெள்ளாளியமும்!
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா, மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்துக்கு மட்டும் செல்லுபடியாகும் பிராந்தியச் சட்டமான தேசவழமைச்சட்டம் 12 வெள்ளாள முதலியார்களின் பரிந்துரையின் பேரில் இலங்கையின் அன்றைய ஆட்சியாளர்களான ஒல்லாந்தர்களினால் 1707 ஆம் ஆண்டு சட்டமாக்கப்பட்டது.
இந்தச் சட்டம் அன்று 9 சரத்துகளாக வகுக்கப்பட்டது. அதில் 8 ஆவது சரத்து அடிமைகள் பற்றிய சட்டமாக இருந்தது. அந்த 8 ஆவது சரத்து மேலும் 8 பிரிவுகளாக அடிமை என்பவர்கள் யார் யார் ? என்னென்ன சாதியினர் அடிமைகளாக வரையறுக்கப்பட்டவர்கள் ? அவர்களுடைய கடமைகள் என்ன? அவர்கள் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என உபசட்டங்களை விரிவாக வியாக்கியானம் செய்கின்றது.
அந்த 8 ஆவது பிரிவு ஆங்கிலத்தில் இவ்வாறு ஆரம்பிக்கின்றது.
The Thesawalamai or The Laws And Customs Of The Malabar Of Jaffna.
Section VIII Of The Male And Female Slaves.
1. Different classes of Slaves
மோடிக்கு எத்தனை சீட் கிடைக்கும்? – ஸ்டாலின் கணிப்பு! (100 to 150)
மின்னம்பலம் Aara தமிழ்நாடு, புதுச்சேரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் அனைவரும் தமிழக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையோடு முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த க்ரூப் போட்டோ இன்பாக்ஸில் வந்து விழுந்தது. அதை பார்த்துக்கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது.
“ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், திமுக வேட்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள், பொறுப்பு அமைச்சர்கள் உள்ளிட்டோர் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினை சந்தித்து வருகிறார்கள்.
தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி! மனைவி நேகா மீது போலீஸில் புகார்!
tamil.oneindia.com - Vishnupriya R : சென்னை: தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் வீட்டு பணிப்பெண், அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஞானவேல்ராஜா , சூர்யா, கார்த்தியின் படங்களை தயாரித்து வந்தார். அவர் ஸ்டூடியோ கிரீன், ஆத்னா ஆர்ட்ஸ் என்ற இரு ஸ்டூடியோக்களை வைத்துள்ளார். இவருக்கு மனைவி நேகா.
Producer Gnanavel Raja s house maid commits suicidal attempt
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா!:விசேட அறிக்கை வெளியீடு
ilakkiyainfo.com : பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் கோட்டா!:விசேட அறிக்கை வெளியீடு
-ஆணைக்குழுஅறிக்கை வெளியான பின்னர் அவரை தொலைபேசியில் தொடர்புகொள்ளவில்லை என தெரிவிப்பு
1. பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டஇரு தரப்புகள் குறித்த உண்மைகளை கர்தினால் மறைக்கின்றார் அல்லது வெளிப்படையாக தவிர்க்கின்றார்
2. சிஐடி அதிகாரியை விசாரணைகளை சீர் குலைப்பதற்காக நான் பதவி நீக்கவில்லை
3. உயிர்த்த ஞாயிறு தாக்குதலை இஸ்லாமிய தீவிரவாதிகளே மேற்கொண்டனர்
வியாழன், 25 ஏப்ரல், 2024
திமுகவில் இணையும் பெங்களூரு புகழேந்தி?
மின்னம்பலம் - Aara :அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்து ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தினகரன், இபிஎஸ் – ஓபிஎஸ், ஓபிஎஸ் என்று தொடர்ந்து முகாம் மாறிய பெங்களூரு புகழேந்தி விரைவில் திமுகவில் இணைய இருக்கிறார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கிறார்கள்.
அதிமுகவின் கர்நாடக மாநில செயலாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. பெங்களூரு தனி நீதிமன்றத்தில் நடந்த சொத்துக் குவிப்பு வழக்கு விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்தார். இதன் மூலம் சசிகலாவிடமும் ஜெயலலிதாவிடம் நல்ல நெருக்கத்தை பெற்றிருந்தார்.
இளையராஜாவுக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்!
Ada derana : : ”பாடல் கேசட்டுகள், சிடி-க்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசைத்தட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.
ஆனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசைத்தட்டு நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி சரமாரி பதிலடி!
nakkheeran.in : ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி,
''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ்.
இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.
நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா?
இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா?
பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது.
ஈரான் ஜனாதிபதி இலங்கை வந்தார்!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி சற்று முன்னர் இலங்கையை வந்தடைந்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட அழைப்பின் பேரில், உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்படி, 2008ஆம் ஆண்டுக்கு பின்னர் ஈரான் ஜனாதிபதி ஒருவர் இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதல் தடவையாகும்.
புதன், 24 ஏப்ரல், 2024
திரைப்பாடல்களுக்கு கவிஞர்களும் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜாவிற்கு நீதிமன்றம் கேள்வி!
மின்னம்பலம் - Kavi : திரைப்பாடல்களுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும்? இளையராஜா பாடல்கள் வழக்கில் நீதிமன்றம் கேள்வி!
இளையராஜாவின் பாடல்கள் தொடர்பான வழக்கில் பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில் படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஸ்டாலின் “சூறாவளி”.. வட இந்திய மாநிலங்களில் ரெடி ஆகிறது dmk ஷெட்யூல்! பலே பிளான்!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : மீண்டும் ஸ்டாலின் “சூறாவளி”.. வடக்கிலும் கால் பதிக்கும் திமுக.. ரெடி ஆகிறது ஷெட்யூல்! பலே பிளான்!
சென்னை: தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவடைந்த நிலையில்,'இந்தியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வட மாநிலங்களுக்குச் செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
லோக்சபா தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல மாநிலங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவில் 64 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
மோடி: கர்நாடகாவை போல் இந்தியா முழுவதும் முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் இடஒதுக்கீடு கொடுக்கும்!
மாலை மலர் : கர்நாடகாவில் ஓபிசி ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படும் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இட ஒதுக்கீட்டை கடந்தாண்டு அம்மாநில பாஜக அரசு ரத்து செய்தது.
வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் ஓபிசி ஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட 4 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு, அந்த ஒதுக்கீடு தலா 2 சதவீதம் என்ற வகையில் வொக்கலிகாக்கள் மற்றும் லிங்காயத்துகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், கர்நாடகாவில், முஸ்லிம் மதத்தில் உள்ள அனைத்து சாதிகளையும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் அம்மாநில காங்கிரஸ் அரசு சேர்த்துள்ளது.
அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மின்னம்பலம் - indhu : அனைத்து பேருந்துகளில் தானியங்கி கதவுகள் : உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் எத்தனை பேருந்துகளில் தானியங்கி கதவுகள் பொருத்தப்பட்டுள்ளன? என பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று (ஏப்ரல் 23) உத்தரவிட்டுள்ளது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படிக்கட்டுகளில் தொங்கியபடியும் தங்களது கால்களை தரையில் தேய்த்தபடியும் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பொதுமக்கள் மற்றும் பெற்றோரை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
செவ்வாய், 23 ஏப்ரல், 2024
திமுகவின் மத்திய அமைச்சர்கள் யார் யார்? ஸ்டாலின் நடத்திய முக்கிய ஆலோசனை!
மின்னம்பலம் - Aara : அதிமுக அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக் கூட்டம், திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை கூட்டணிக் கட்சியினர், திமுக அமைச்சர்கள், வேட்பாளர்கள் சந்தித்த படங்கள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“19ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், அதன் பிறகு திமுகவின் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் முதலமைச்சரை சந்தித்து கடுமையான தொடர் தேர்தல் பிரச்சாரம் செய்ததற்கு நன்றி தெரிவித்தார்கள்.
சூரத்தில் நடந்தது பேரமா? போட்டியில்லாமல் பாஜக வென்றது எப்படி?
அப்படிப்பட்ட முக்கியமான சூரத் மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
இது நாடு முழுக்க பரபரப்பான விவாதத்தை உருவாக்கியிருக்கிறது.
காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரை வேட்பாளராக முன்மொழிந்தவர்களின் கையெழுத்துகளில் குளறுபடி இருக்கிறது என்று சொல்லி தேர்தல் அலுவலர் அவரின் வேட்புமனுவை தள்ளுபடி செய்தார்.
நிலேஷ் கும்பானியின் வேட்புமனுவில் முன்மொழிந்துள்ள மூன்று பேரும் மனு பரிசீலனையின்போது, நாங்கள் இந்த கையெழுத்தை போடவில்லை என்று மறுத்துவிட்டதாகச் சொல்லி தேர்தல் அலுவலர் வேட்புமனுவை ரத்து செய்திருக்கிறார்.
PM மோடியின் வெறுப்பு பேச்சுக்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை! ஒரே நாளில் 17,400 பேர்
Vasu Sumathi : நேற்று ராஜஸ்தானில், இஸ்லாமியர்கள் பற்றி அவதூறு கருத்துகளை பரப்பிய மோடியை சமூக வலைத்தளங்களிலும், பத்திரிக்கைகளிலும் மக்கள் வச்சு வெளுத்து விட்டார்கள்…!
ஒரே நாளில் 17,400 பேர், மோடியின் வெறுப்பு பேச்சுக்கு தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார்கள்.
காங்கிரஸ் தரப்பில் அபிஷேக் சிங்வி உட்பட ஒரு குழு நேரில் சென்று 16 விதிமீறல்கள் அடங்கிய புகாரை இன்று சமர்ப்பித்தனர்.
மோடியின் வெறுப்பு பேச்சு, பாஜகவின் தேர்தல் வெற்றியை வெகுவாக பாதிக்கும் என்று பல கருத்து கணிப்பாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் உண்மையிலேயே பயந்த மோடி, இன்று துளியும் வெட்கமில்லாமல் உத்தரபிரதேச மாநிலம் அலிகாரில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் அப்படியே ஒரு அந்தர்பல்டி அடித்தார்.
நேற்று இஸ்லாமியர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அழைத்துவிட்டு இன்று இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்காக தான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று வாய் கூசாமல் சொல்லுகிறார்.
பெண்கள், இளைஞர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஓட்டு யாருக்கு அதிகம்? மெகா சர்வே ரிசல்ட்!
minnambalam.com - vivekanandhan : மின்னம்பலம் மெகா சர்வே முடிவுகளின்படி, 40 நாடாளுமன்றத் தொகுதிகளில் தமிழ்நாடு முழுக்க திமுக கூட்டணி 45.3% வாக்குகளைப் பெற்று முதலிடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணி 28.3% வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடமும், பாஜக கூட்டணி19.9% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடமும், நாம் தமிழர் கட்சி 5.5% வாக்குகளைப் பெற்று நான்காம் இடமும் பெறுகின்றன.
தமிழ்நாட்டில் பெண்களின் வாக்கு யாருக்கு செல்கிறது, இளைஞர்களின் வாக்கு யாருக்கு செல்கிறது, அரசு ஊழியர்களின் வாக்குகள் யாருக்குச் செல்கிறது, கிராம மக்களின் வாக்குகள் யாருக்கு, நகர்ப்புற மக்களின் வாக்குகள் யாருக்கு என்று கருத்துக்கணிப்பில் கிடைத்த பல்வேறு முடிவுகளைப் பார்ப்போம்.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்குகள்
வழக்கமாக திமுகவிற்கு நகர்ப்புற வாக்குகள் அதிகமாகக் கிடைக்கும். இந்த முறை திமுகவிற்கு கிராமப் புற வாக்குகளிலும் முன்னேற்றம் இருக்கிறது.
இயக்குநர் (பசி) துரை காலமானார்! பல மொழிகளிலும் 46 படங்களை இயக்கியுள்ளார்.
இயக்குநர் துரை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் 46 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய 'பசி' திரைப்படத்திற்கு 1979-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
திங்கள், 22 ஏப்ரல், 2024
கோவை வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் ஜாக்கியின் ஈஷா மையம்தான்
பாலகணேசன் அருணாசலம் : கோயம்பத்தூர் வெப்பம் அதிகமானதுக்கு திமுக ஆட்சி காரணம் ன்னு மக்குமலை ஒரு அபூர்வ கண்டுபிடிப்பை சொன்னான்.
அவன் தரப்பு அநியாத்தால் விளைந்த ஒரு உண்மையை மறைக்கனும்னா அதற்கு சம்மந்தமில்லாத ஒரு பொய்யை பரப்புவது பாஜக பித்தலாட்டகாரர்களின் தந்திரம்..
அதாவது, கோவை க்கு அருகில் உள்ள காடுகளை கஞ்சா சாமியார் ஜக்கி மோதி ஆசியுடன் அழித்து அங்கே ஒரு கார்ப்பரேட் ஆசிரமத்தை ஏற்படுத்தினான்...அத்தனையும் கடந்த 2011 -2021 வரையிலான அதிமுக ஆட்சியில் நடந்தவைகள்..
கோவை வெப்பம் அதிகரிக்க முக்கிய காரணம் இந்த கார்ப்பரேட் சாமியாரின் காடு அழிப்பு செயல்கள்
போகட்டும்,
அவன் பொய் சொல்வதில் திறமைசாலியா அல்லது அதை கேட்கும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் ஏமாளிகளா...
இப்படித்தான் நாட்டு நிலை உள்ளது
அழகர் ஆற்றிலிறங்கும் திருவிழா. - அசல் குஜராத் வைஷ்ணவ சமாஜ் ஆட்களாய்டுவா...!?
Seetha Ravi Suresh : வைஷ்ணவ அழகரு
பதினோராம் நூற்றாண்டில் மதுரை பாண்டியர்களுக்கும், நெல்லை பாண்டியர்களுக்கும் நடந்த அரசுரிமைப்போரில், நெல்லை பாண்டியர்கள் முதன்முதலாக கள்ளர்களை அரசுப்படைகளில் சேர்த்துக்கொண்டனர்.
வேள்விக்குடி செப்பேட்டில் கூறுகிறபடி இலங்கை படைகள் பாண்டிய சோழ பகுதிகளை தீக்கிரையாக்கியபோது, நெல்லைப்பாண்டியர்கள் சோழர்களுடன் இணைந்து இலங்கை படைகளை தோற்கடித்தனர். இதன் விளைவாக கள்ளர்களுக்கு அரசாங்க அங்கீகாரம் சிறிது கிடைத்தது.
அந்த அங்கீகாரத்தால்தான், மீனாட்சி திருக்கல்யாண கொண்டாட்டங்களில் கள்ளர்களின் சீர்கொண்டுவரும் நிகழ்ச்சிக்கு பகிரங்கமாக கள்ளர்கள் பெருங்கூட்டமாய் கலந்துகொள்ளும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.
10 இடங்களில் அதிமுகவிற்கு 3ம் இடம்?
tamil.oneindia.com - Shyamsundar :சென்னை: கிட்டத்தட்ட 10 அல்லது 10க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அதிமுக 3ம் இடம் செல்வதற்கான சூழ்நிலைகள் இருப்பதாக தெரிகிறது என்று மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார். அதிமுக சரியாக வேட்பாளர் போடவில்லை, என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை நாடு முழுக்க லோக்சபா தேர்தல் திருவிழா பிரம்மாண்டமாக தொடங்கியது. கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை 2024 மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 950 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 லோக்சபா தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடந்தது.
Huge problem for AIADMK in 10 seats in Tamil nadu Lok Sabha Elections 2024
மோடியின் மதவெறி பேச்சு : நாட்டின் தங்கத்தை எல்லாம் முஸ்லீம்களுக்கு தருவோம் என்கிறது காங்கிரஸ்!
tamil.oneindia.com - Vigneshkumar : டெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் தீயாகப் பரவி வரும் நிலையில், இதை திமுகவின் சரவணன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
நமது நாட்டில் இந்த முறை ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது.
தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் மொத்தம் 102 தொகுதிகளில் ஏப்ரல் 19ஆம் தேதி ஏற்கனவே வாக்குப்பதிவு முடிந்துவிட்டது.
DMK and Congress targets Modi for his Speech on Muslims in Rajasthan Rally
நாகாலாந்து, மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை அரங்கேறிய நிலையில், அதைத் தவிர பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.
இலங்கை “Foxhill” கார் பந்தய விபத்து- 8 பேர் உயிரிழப்பு . தியத்தலாவ என்ற இடத்தில்
வீரகேசரி தியத்தலாவ நரியகந்த, “Foxhill” கார் மற்றும் மோட்டார் சைக்கிள் பந்தயம் இன்று (21) இடம்பெற்றதுடன், பந்தயத்தின் போது கார் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பந்தயத்தை பார்த்துக்கொண்டிருந்த 7போ் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் மேலும் 21 பேர் காயமடைந்து தியத்தலாவ ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தியத்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
கார் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதனைப் பார்க்க முன்வந்த சிலர் மீது பின்னால் சென்ற மற்றுமொரு கார் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஞாயிறு, 21 ஏப்ரல், 2024
கர்நாடக பல்கலைகழகத்தில் Congress அரசியல்வாதியின் மகள் கொலை- லவ்ஜிகாத்! – மாணவிகள் போராட்டம்
வீரகேசரி : பெங்களூரு: கர்நாடக மாநிலம் ஹுப்ளியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகி நிரஞ்சன்ஹிரேமத். தார்வாட் மாநகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராக உள்ளார். இவரது மகள் நேஹா ஹிரேமத் (24) கே.எல்.இ. தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் எம்சிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
அவருடன் படித்த ஃபயாஸ் (25) பல்கலைக்கழக வளாகத்தில் நேஹாவை கத்தியால் குத்தி கொலை செய்தார். இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையடுத்து ஹுப்ளி போலீஸார் ஃபயாஸை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில் நேஹா முதலில் என்னை காதலித்தார்.
ஜார்கண்ட்டில் அணிதிரண்ட எதிர்க்கட்சி தலைவர்கள்!
தினமணி : (ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் ஆதரவாளர்கள்படம் | பிடிஐ
ஜார்கண்ட்டில் ஆளும் ’ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா’ கட்சி சார்பில் ராஞ்சியில் இன்று(ஏப். 21) 'புரட்சிப் பேரணி’ என்ற பெயரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதில், ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின்(தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளார்) மனைவி கல்பனா சோரன், ஜார்கண்ட் முதல்வர் சம்பாயி சோரன், பஞ்சாப் முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவருமான பகவந்த் மான், பிகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ், காஷ்மீரின் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் இந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
பட்டப்பகலில் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரிப்பு!. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு
nakkheeran.in : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பட்டப்பகலில் சித்தப்பா மீது மகனே பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்து உள்ள சவரக்கோட்டை பிரிவு பகுதியில் வசித்து வருபவர் வடமலை. அவருடைய மகன்கள் சின்னவன் மற்றும் மணி. மணியின் மகன் செந்தில். கடந்த நான்கு நாட்களுக்கு முன்னதாக செந்தில் அவருடைய விவசாய நிலத்தில் அறுவடை பணிக்காக டிராக்டரில் சென்றுள்ளார்.
அப்பொழுது சித்தப்பா சின்னவன் மற்றும் செந்தில் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
யாழ்தேச வெறுப்பு அரசியலும் - ஜாதி அரசியலும்!
ராதா மனோகர் யாழ்ப்பாண மக்கள் கண்ணுக்கு தெரியாத ஒரு invisible Segregation வெறுப்பு முள் வேலிக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள்!
யாழ்ப்பாணத்தில் உண்மையான சமூகவியல் ஆய்வாளர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்று உருப்பெருக்கி கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டி உள்ளது!
இந்த கேள்வியை வெறும் கேலியாகவோ அல்லது கோபமாகவோ நான் எழுப்பவில்லை.
நம் சமூகத்தின் பொதுப்புத்தி பற்றிய எனது பார்வையை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.
எனது பார்வை சரியா தவறா என்பதை காலம்தான் கூறவேண்டும்
கடந்த நூற்றாண்டுகளாக மெதுவாக ஆனால் ஆழமாக திட்டமிட்டு அடிப்படை மனித விழுமியங்களுக்கு எதிரான கோட்பாடுகள் யாழ்ப்பாணத்தில் புகுத்த பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்
ஜாதிய கட்டுமானத்தை தக்க வைப்பதற்காகவே மனித விழுமியங்களுக்கு பொருந்தாத பல கோட்பாடுகள் யாழ்ப்பாணத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது.
வட மாநிலங்களில் வலுக்கும் எதிர்ப்புகள்: ஒரே நாளில் பாஜக வேட்பாளர்களை துரத்திய மக்கள்!
கலைஞர் செய்தி KL Reshma : வட மாநிலங்களில் வலுக்கும் எதிர்ப்புகள்: ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் பாஜக வேட்பாளர்களை துரத்திய மக்கள்!
ஹரியானா மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை மக்கள் துரத்தியடித்த சம்பவம் தற்போது பாஜகவுக்கு வட மாநிலங்களில் உள்ள எதிர்ப்புகளை வெளிச்சம்போட்டு காட்டுகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று (ஏப் 19) முதற்கட்ட தேர்தல் தொடங்கியுள்ள நிலையில், பாஜகவின் NDA கூட்டணிக்கு மக்கள் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி அதிகரிப்பு, விவசாயிகள் பிரச்னை உள்ளிட்டவைக்கு மக்கள் பாஜகவுக்கு தங்கள் எதிர்ப்புகளை இந்த தேர்தலின் மூலம் வெளிப்படுத்தி வருகின்றனர்.