சனி, 7 மே, 2011

மீசாலை விக்னேஸ்வரா, ஆசிரியர்களின் வன்முறைப்போதனை இன்னும் ஓயவில்லை

newsஅடி வாங்கிய மாணவி மயக்கம் அடித்த ஆசிரியருக்கு மாற்றம்  

ஆசிரியரிடம் அடி வாங்கிய மாணவி மயக்கமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, தண்டனை வழங்கிய ஆசிரியருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டது.மீசாலை விக்னேஸ்வரா மகாவித்தியாலயத்தில் இந்தச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.

தரம் 8 இல் கற்கும் மாணவி ஒருவர் வீட்டுப் பாடம் செய்யாமல் வந்ததன் காரணமாக ஆசிரியரால் தண்டிக்கப்பட்டார்.  சம்பவத்தைத் தொடர்ந்து அழுது கொண்டிருந்த மாணவி திடீரென மயங்கி வீழ்ந்தார் என்றும் பின்னர் அவர் அவசரமாக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார் என்றும் பாடசாலைத் தகவல்கள் கூறின.சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட மாணவி, அவசர முதலுதவியின் பின்னர் வீடு திரும்பினார்."மாணவிக்கு முட்டு வியாதி இருந்துள்ளது. ஆசிரியரிடம் அடி வாங்கிய பின் தொடர்ந்து அவர் அழுததால் திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டார். நாம் அவரை உடனடியாக வைத்திய சாலையில் சேர்ப்பித்தோம்'' என்று தெரிவித்தார் பாடசாலை அதிபர்.சம்பவம் குறித்து வலயக் கல்வித் திணைக்களத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆசிரியரை எதிர்.
 ஆசிரியர்களின் வன்முறைப்போதனை இன்னும் ஓயவில்லை 

கருத்துக்களை கருத்துக்களாலேயே எதிர்கொள்ள தாம் தயார்.அமைச்சர் டக்ளஸ் தேவானந்த

பொய்யான தகவல்களையும் திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் ஊடகங்கள் தொடர்ந்தும் வெளியிட்டு வருவதாக ஈபிடிபியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த குற்றம் சுதத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

ஈபிடிபின் கொள்கையை சரியாக விளங்கிக் கொள்ளமல் சில ஊடங்கள் தம்மீது சேறு பூசுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். குடாநாட்டில் இனந்தெரியாதவர்கள் செய்யும் தவறுகள் அனைத்தும் ஈபிடிபியினரித் தலையிலேயே வந்து விடிவதாக தெரிவித்த அமைச்சர், தீவுப் பகுதி என்றால் பல மடங்கு குற்றச்சாட்டுக்கள் தம்மீது விழும் எனவும் கூறினார்.

கருத்துக்களை கருத்துக்களாலேயே எதிர்கொள்ள தாம் தயார் என நீண்டகாலம் கூறி வந்துள்ளதாகவும் வம்புப் பண்ண வந்தால் அது வேறு எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Credit Card Fraud சிங்கப்பூரில் கணினித்துறையில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள அவர் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜே்ாமன்

கணினி விளையாட்டு: கள்ளக் கடனட்டையில் பண மோசடி ஐவருக்கு சிறை

"கடனட்டையில் பண மோசடி ஐவருக்கு சிறை
கள்ளக் கடன் அட்டைகள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டு வந்த 5 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கல்கிஸ்ஸை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 13ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, கைது செய்யப்பட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவின் தலைவராக மட்டக்களப்பைச் சோ்ந்த தரன் எனும் பொறியியலாளர் செயற்பட்டுள்ளார்.

சிங்கப்பூரில் கணினித்துறையில் பொறியியல் பட்டம் பெற்றுள்ள அவர் கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா, ஜே்ாமன் உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கும் தன் நண்பர்களுடன் கூட்டு வலையமைப்பொன்றை மேற்கொண்டு கள்ளக் கடனட்டைகள் மூலமாக பெருந்தொகையான பணத்தை மோசடி செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.

வெளிநாட்டவர்களின் கடனட்டைத் தகவல்களைப் பெறுவதற்காக இணையத்தளம் ஒன்றுக்கும், உள்நாட்டவர்களின் கடனட்டைத்தகவல்களுக்காக எரிபொருள் நிரப்பும் நிலைய ஊழியர்கள் பலருக்கும் அவர்கள் பெரும் தொகைப் பணத்தை மாதாமாதம் கொடுத்து வந்துள்ளமை பொலிஸாரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கள்ளத்தனமாகப் பெறப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடனட்டைகளின் தகவல்களைக் கொண்டு கள்ளக் கடனட்டைகளை உருவாக்குவதற்காக கனடா மற்றும் இந்தியாவிலிருந்து இரண்டு இயந்திரங்களையும் இவர்கள் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவருக்கு உதவியாகச் செயற்பட்ட ஒரு தமிழர், மூன்று முஸ்லிம்களும் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடிக்கும்பலுக்கு கடனட்டைகளின் தகவல்களைத் திருடி வழங்கிய எரிபொருள் நிலையங்களின் ஊழியர்களைக் கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

Osama உயிருடன் பிடிபட்ட பின்னரே சுட்டுக்கொல்லப்பட்டார்

அமெரிக்க படைகளால் அப்டோபாத் வளாகத்தில் தாக்குதல் நடத்த தொடங்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில், ஒசாமா உயிரோடு பிடிபட்டு விட்டதாகவும், பின்னரே அவர் தலையில் சுட்டுக்கொல்லப்பட்டார் எனவும் ஒசாமாவின் மகள் தெரிவித்துள்ளதாக பாகிஸ்த்தான் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அல் அரபியா செய்தி சேவைக்கு பாகிஸ்த்தான் படையினர் கூறுகையில்.
குறித்த தாக்குதல் நடைபெற்ற போது, ஒசாமவின் குடும்பத்தினர் என நம்பப்படும், 2 பெண்களும், 2 ௧2 வயதுக்குட்பட்ட 6 சிறார்களும் பிடிபட்டனர். இவர்கள் சிகிச்சைக்காக ஹெலிகாப்டர் மூலம் ராவல் பிண்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவரான பின் லாடனின் 12 வயது மகளே, பின் லாடன் அமெரிக்க படைகளால் கொல்லப்பட்ட செய்தியை எம்மிடம் உறுதிப்படுத்தியுள்ளார். ஒசாமாவை உயிரோடு பிடிக்க முயன்றும் குடும்பத்தினரின் கண்ணெதிரேயே அமெரிக்க படைகள் சுட்டுக்கொன்றதாக அவர் கூறியுள்ளார். என தெரிவித்துள்ளனர்.

புலம்பெயர் புலம்பல்கள் எல்லாம் குறுகிய சுயநல நோக்கம் கொண்டவை

சுயலாபத்தை அடிப்படைக் கொண்டு புலம்பெயர் தமிழ் மக்கள், இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து வருவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற எண்ணமே முட்டாள்தனமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்குச் சென்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தக் கூடிய தைரியம் யாருக்கு காணப்படுகின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கீழ்த்தரமான பிரபலத்தைப் பெற்றுக் கொள்வதற்கும், நிதி திரட்டுவதற்காகவும் புலம்பெயர் தமிழர்கள் இவ்வாறு நடந்து கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நிபுணர் அறிக்கைக்கு பதிலளிக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குற்றச்சாட்டுக்களுக் வெற்றிகரமாக முகம்கொடுத்து அவற்றை தெளிவுபடுத்த வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பதவி மிகவும் கௌரவமிக்கது எனவும், அவருக்கு எதிராக சேறு பூசும் செயற்பாடுகள் ஆரோக்கியமானதல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பிரச்சினைகளின் போது அரசாங்கம் மற்றும் பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் மட்டுமே பதிலளிக்க வேண்டும் எனவும், துரதிஸ்டவசமாக அனைவரும் நாடு தழுவிய ரீதியில் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான நடவடிக்கைகளின் மூலம் இலங்கைக்கு பாதகமான சூழ்நிலையே ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். கிளிநொச்சியை அரசாங்கம் கைப்பற்றிய போது அப்பாவி பொதுமக்களையும், எஞ்சிய போராளிகளையும் பாதுகாக்குமாறு தாம் பிரபாகரனிடம் கோரியதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் ண்;காரிக்கைக்குப் பிரபாகரன் செவிசாய்க்கவில்லை எனவும், அப்பாவி பொதுமக்களை பாதுகாக்குமாறு தமிழ் அரசியல்வாதிகளிடமும் தாம் கோரியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துமாறு புலிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மாறாக அநேகர் நிதி உதவிகளை வழங்கி யுத்தத்தை ஊக்கப்படுத்தியதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்த முனைப்பினால் அப்பாவிபொதுமக்களின் உயிர்கள்காவு கொள்ளப்படுவதாக தாம் வலியுறுத்திய காரணத்தினால் தம்மை தமிழ்த் துரோகி என பலர் அடையாளப்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். தமிழ் நாட்டில் நாள் தோறும் ஜனாதிபதியை கைது செய்யுமாறு கோரி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், எதைச் செய்ய முடியும் எதைச் செய்ய முடியாது என்பதனை தமிழக அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவளித்த அனைவரும் தற்போதைய நிலைமைகளுக்கு பொறுப்பாளிகளாக கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள இராணுவத்தை முழுமையாக அகற்றிக்கொள்ளுமாறு அரசாங்கத்திற்கு சர்வதேச நாடுகள் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
 தமிழீழ விடுதலைப் புலிகள் மீள இயங்குவதற்கான சந்தர்ப்பம் கிடையாது எனவும் இதனால் இராணுவத்தினரை அரசாங்கம் அகற்றிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ஐக்கிய இலங்கைக்குள் அனைவரினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

பின்லேடன் கொல்லப்பட்டதை அடுத்து சவுதிக்கு தாவூத் தப்பியோட்டம்

: மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம், பாகிஸ்தானில் இருந்து சவுதி அரேபியாவுக்கு தப்பியோடி விட்டான். அல் கய்தா தீவிரவாத இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தாவூத்தை பாதுகாப்பாக அனுப்பி வைத்த தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் பல இடங்களில் கடந்த 1993ம் ஆண்டு பயங்கர வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி தாவூத் இப்ராகிம். மும்பையில் சதி திட்டத்தை நிறைவேற்றிய பின், இவன் தனது குடும்பத்துடன் பாகிஸ்தானுக்கு தப்பி விட்டான்.

அங்கு கராச்சி நகரில் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் பாதுகாப்பில் வசித்து வந்தான். ‘பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் குற்றவாளியான தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க வேண்டும்‘ என்று மத்திய அரசு பலமுறை பாகிஸ்தானிடம் வலியுறுத்தியுள்ளது. அதற்கான ஆதாரங்களையும் அந்நாட்டுக்கு மத்திய அரசு அளித்தது. ஆனால், தாவூத் தங்களது நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் அரசு  மறுத்து வருகிறது.

போதைப் பொருள் கடத்தல், கூலிக்கு கொலை செய்தல் போன்ற வழக்குகளில் சர்வதேச போலீசாராலும் தாவூத் தேடப்பட்டு வருகிறான். இவன் தனது குடும்பத்துடன் கராச்சி நகரில் கிளிப்டன் பகுதியில் சவுதி மசூதி அருகே சொகுசு மாளிகையில் வசித்து வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில், சர்வதேச தீவிரவாதி பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து சவூதி அரேபியாவுக்கு  மே 1ம் தேதி இரவு தாவூத் தனது நெருங்கிய கூட்டாளி சோட்டா ஷகீலுடன் தப்பிவிட்டதாகவும், அதற்கு ஐ.எஸ்.ஐ. முழு ஏற்பாடு செய்ததாகவும்  புலனாய்வுத் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

தேடப்படும் 2வது குற்றவாளி

சர்வதேச அளவில் இரண்டாவது முக்கிய தீவிரவாதி  தாவூத் இப்ராகிம்.  2ம் இடத்துக்கு முன்னேறியுள்ளான். இதுவரை பின்லேடன், மெக்சிகோ போதைக் கடத்தல் மன்னன் சினாலோ ஆகியோருக்கு அடுத்ததாக 3ம் இடத்தில் தாவூத் பெயர் இருந்தது. பின்லேடன் பலியாகி விட்ட நிலையில், தாவூத் 2வது இடத்துக்கு வந்துள்ளான்.

25 பேர் பட்டியல்

இந்தியாவில் நாசவேலைகளில் ஈடுபட்ட டைகர் மேமன், ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதி மசூத் அசார், ஜமாத் உத் தவா தலைவன் ஹபிஸ் சயீத் ஆகியோர் உட்பட 25 தீவிரவாதிகளை ஒப்படைக்க வேண்டுமென்று கடந்த 4ம் தேதி பாகிஸ்தானுக்கு இந்தியா கடிதம் அனுப்பியது.  அந்த கடிதத்தில் தாவூத் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கனிமொழிக்காக திகார், ரோஹினி சிறைகளை தயார் செய்த அதிகாரிகள்!!

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி கைதாவார் என்று சிபிஐ தரப்பில் கூறப்பட்டதால், திகார் மற்றும் ரோஹினி சிறைச்சாலைகளை கனிமொழிக்காக தயார் செய்தனர் சிறை அதிகாரிகள்.

இன்றைய விசாரணை முடிந்ததும் கனிமொழி எந்நேரமும் கைதாகக் கூடும் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது.

இதையடுத்து டெல்லியில் உள்ள திகார் மற்றும் ரோஹின் சிறைச்சாலைகளில் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

கனிமொழி கைது செய்யப்பட்டால் அவரை முதலில் திகாருக்கு கொண்டு செல்வதென்றும், பின்னர் அங்கிருந்து டெல்லி ரோஹினி சிறைச்சாலையின் மகளிர் பிரிவுக்கு மாற்றுவதென்றும் முடிவு செய்யப்பட்டதாக திகார் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனிமொழி கைது செய்யப்பட்டால், அவரை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டமேதும் இல்லை என்றும், அவரிடம் போதுமான அளவு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டதால், நேரடியாக அவர் நீதிமன்றக் காவலில்தான் வைக்கப்படுவார் என்றும் சிபிஐ மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

ஆனால் அந்த வேலையை வைக்கவில்லை சிபிஐ சிறப்பு நீதிமன்றம். கனிமொழி ஜாமீன் மனு மீதான தீர்ப்பை மே 14ம் தேதிக்கு ஒத்தி வைத்துவிட்டது.
English summary
While DMK MP Kanimozhi on Friday moved a Delhi court for bail against arrest in the 2G case, the officials of the Delhi’s Tihar Jail have started their preparations for her arrival. Sources have pointed out that Ms Kanimozhi might be shifted to Rohini Jail’s women wing soon after her arrival at Tihar.

போர்க்குற்ற விசாரணை நடத்திய நிபுணர் குழுவைக் கலைத்தார் பான் கி மூன்!

கொழும்பு: இறுதிப் போரில் இலங்கையில் நிகழ்ந்த போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிபுணர் குழுவை கலைக்க நேற்று உத்தரவிட்டார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூன்.

விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மனித இனமே பார்த்திராக கொடூரங்கள் அரங்கேறின, இந்த போரில். இந்த தமிழ் இன அழிப்பைஉலகமே வேடிக்கைப் பார்த்தது.

இந்த நிலையில் போர் முடிந்ததும், வன்னிப் பகுதியில் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக தருஸ்மான் தலைமையிலான மூவர் குழுவை கடந்த வருடம் ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூன் நியமித்தார்.

இந்தக் குழுவின் அறிக்கை கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் ஐ.நா.பொதுச்செயலரால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஆனால் இந்த அறிக்கையை இலங்கை ஏற்கவில்லை. அத்துடன் நில்லாது அறிக்கையைக் கண்டித்து இலங்கையில் மே 1-ம் தேதி பேரணியும் நடத்தியது இலங்கை அரசு.

இந்நிலையில் நிபுணர்குழுவின் செயல்பாடுகள் அனைத்தும் முற்று பெற்றுவிட்டதால் அக் குழுவினை கலைப்பதாக நேற்று அறிவித்தார் பான் கி மூன்.

இந்த விசாரணையின் போது இலங்கையின் போர்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளுக்குரிய தகவல்கள் அளித்தவர் பற்றிய விவரங்களை இருபது வருடங்களுக்கு வெளியிடக்கூடாது என்றும் நிபுணர் குழு உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டுள்ளார் பான் கி மூன்.

கனிமொழி கைது இல்லை... தீர்ப்பு மே 14க்கு ஒத்திவைப்பு!!

டெல்லி: 2ஜி வழக்கில் கனிமொழிக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வரும் மே 14ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதுவரை கனிமொழி தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

2ஜி முறைகேட்டில் முன்னாள் தொலைத் தொடர்புதுறை அமைச்சர் ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளது என்று குற்றம்சாட்டிய சிபிஐ, கனிமொழி மற்றும் கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் பெயர்களை இரண்டாவது குற்றப் பத்திரிகையில் சேர்த்தது.

இதைத் தொடர்ந்து இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனிமொழியும் சரத்குமாரும் சிபிஐ கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

நேற்றும் இன்றும் இந்த வழக்கு விசாரணை நடந்தது. கனிமொழி சார்பில் மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் கனிமொழிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என வாதாடினார். சரத்குமார் தரப்பில் அப்துல் அஜீஸ் ஆஜராகி வாதாடினார்.

இன்றும் விசாரணை தொடர்ந்தது. சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் யு.யு. லலித், கலைஞர் டிவியி்ன் மூளையாக கனிமொழி செயல்பட்டார் என்றும், 2ஜி விவகாரத்தில் கலைஞர் டிவிக்கு கைமாறிய ரூ.214 கோடி உள்பட அனைத்து பண விவகாரங்களும் அவருக்குத் தெரியும் என்றும் கூறினார்.

2ஜி விவகாரத்தில் ஆ.ராசாவுக்கு இணையான பங்கு கனிமொழிக்கும் உள்ளதென்று அவர் வாதாடினார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓபி ஷைனி, இந்த வழக்கின் தீர்ப்பை வரும் மே 14ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதன் மூலம் கனிமொழி இப்போதைக்கு கைதாக மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. அவருக்கு இது தற்காலிக நிம்மதியைத் தந்துள்ளது.
  Read:  In English 
அதே நேரத்தில் 14ம் தேதி வரை கனிமொழியும் சரத்குமாரும் தினமும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

வரும் மே 13ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. அடுத்த நாள் கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா இல்லையா என்ற சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பு வெளியாவது குறிப்பிடத்தக்கது.
English summary
A special Central Bureau of Investigation (CBI) court on Saturday reserved for a week its decision on the bail plea by DMK MP Kanimozhi, named a co-conspirator in the 2G spectrum allocation case. A special CBI judge OP Saini said the case will be taken up on May 14.

இந்நாள் உலகத் தமிழர்களின் பொன் நாள்: முதல்வர் கருணாநிதி

சென்னை: "ஜனாதிபதி மாளிகையில் தமிழறிஞர்கள் முதல்முறையாகச் சென்று விருதுகள் பெறும் இந்நாள், உலகத் தமிழர் அனைவருக்கும் பொன் நாள்' என, முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

முதல்வர் கருணாநிதி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின் சார்பில், சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் வழங்கிடும் செம்மொழி விருதுகளைப் பெறுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழறிஞர்கள், டில்லிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சமஸ்கிருதம், பாலி, ப்ராக்ருதம், அராபிக், பாரசீகம் ஆகிய மொழிகளில் விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அறிஞர்கள் மட்டுமே ஜனாதிபதி மாளிகைக்கு அழைக்கப்பட்டு ஜனாதிபதியால் கவுரவிக்கப்பட்டு வந்த பாரம்பரியத்தின் தொடர்ச்சியாக, முதல் முறையாக இன்று (நேற்று) காலை 11.30 மணிக்கு, ஜனாதிபதி மாளிகையில் நமது தமிழறிஞர்கள் செவிகளில் இன்பத்தேனாகப் பாய்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த 2005, 2006ம் ஆண்டுக்கான தொல்காப்பியர் விருது, 100 வயதைக் கடந்தவரும், 65 நூல்களை எழுதியவரும், பல்வேறு நிறுவனங்களின் பரிசுகளையும், விருதுகளையும் பெற்றவருமான பேராசிரியர் அடிகளாசிரியருக்கு வழங்கப்படுகிறது. விருது பெறுவதற்காக சென்னையிலிருந்து டில்லிக்கு ஏர்-இந்தியா விமானத்தில் சென்றிருக்கிறார். அவரது வாழ்நாளிலேயே இதுதான் முதல் விமானப் பயணம். கடந்த 2006, 2007ம் ஆண்டுக்கான குறள்பீடம் விருது, அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவரும், கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் பல்லாண்டு காலம் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவருமான பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட்க்கு வழங்கப்படுகிறது. உடல்நிலை காரணமாக அவர் கலந்து கொள்ளவில்லை.

கடந்த 2006, 2007ம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுகள், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்தன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன், கலைமகன், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முத்துராமலிங்க ஆண்டவர், புதுச்சேரியைச் சேர்ந்த பழனிவேலு ஆகியோருக்கும், 2007, 2008ம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதுகள், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த செல்வராஜ், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த மணவழகன், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சைமன் ஜான் ஆகியோருக்கும் ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்படுகின்றன. ஜனாதிபதி மாளிகையில் தமிழறிஞர்கள் முதல்முறையாகச் சென்று விருதுகள் பெறும் நிகழ்ச்சியை எண்ணி, குவலயத் தமிழர்கள் அனைவருமே வாழ்த்துகின்றனர். நீண்ட நாள் கனவு நிறைவேறுகிறது. இந்நாள் உனக்கும் எனக்கும் உலகத் தமிழர் அனைவருக்கும் பொன் நாள். இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

Sun Pictures ரசிகர்களை ஏமாற்றிய எங்கேயும் காதல்!!

ரஜினியின் எந்திரனுக்குப் பின் சன் பிக்ஸர்ஸ் வெளியிட்ட இரு படங்கள் அடுத்தடுத்து தோல்வியைத் தழுவியுள்ளன.

ஒரு தொலைக்காட்சி நிறுவனமாக பெரும் வெற்றியைப் பெற்றுள்ள சன் குழுமம், திரைப்படத் தயாரிப்பைப் பொறுத்தவரை தரமான படங்களைத் தருவதில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் வெளியிட்ட அல்லது தயாரித்த படங்களில் நல்ல வெற்றிப் படங்கள் என்றால் அவை இரண்டுதான். ஒன்று ரஜினியின் எந்திரன், இரண்டாவது கேவி ஆனந்தின் அயன்.

மற்றவை வெறும் விளம்பரங்களில் மட்டுமே வெற்றியாக சித்தரிக்கப்பட்டன என்பது விமர்சகர்களின் கருத்து.

இந்த நிலையில் எந்திரன் என்ற மெகா வெற்றிக்குப் பிறகு, மாப்பிள்ளை மற்றும் எங்கேயும் காதல் என இரு படங்களை அடுத்தடுத்து வெளியிட்டது சன்.

இரண்டு படங்களுமே மோசமான விமர்சனங்களைச் சந்தித்துள்ளன. பாக்ஸ் ஆபீஸிலும் தோல்வியைத் தழுவியுள்ளன. இன்று வெளியான எங்கேயும் காதல் இரண்டாவது ஷோவிலேயே படுத்துவிட, 'உலகெங்கும் அரங்கு நிறைந்த காட்சிகள்' என விளம்பரப்படுத்தி வருகிறது சன் பிக்ஸர்ஸ்.
English summary
Sun pictures met its second defeat in Prabhu Deva's Engeyum Kadhal after their colossal failure in Danush's Mappillai. This consecutive failure raises questions on its film selection and distribution skills.

SLMC கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை

மு.கா.வின் இறங்கு முகம்!
•   மப்றூக்
muslimcongress-1rauff-1எப்படிக் கூட்டிக் கழித்துப் பார்த்தாலும் - அந்தக் கணக்கு சரியென்றே வருகிறது. கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், சரிவாகவே இருக்கிறது. இப்படியே போனால் - கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைக்கு இது நல்லதொரு உதாரணமாகப் போய்விடும்! ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் அரசியல் கட்சியின் தேய்மானம் அல்லது அந்தக் கட்சி கண்டுவரும் வீழ்ச்சி பற்றிய கதைகள்தான் இவை!
மு.கா. தன்வசம் வைத்திருந்த பல சபைகளையும், உறுப்பினர் எண்ணிக்கையினையும் கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின் போது இழந்திருக்கின்றது. குறிப்பாக, மு.கா.வின் இருதயம் என்று கருதப்படுகின்ற அம்பாறை மாவட்டத்தில் அந்தக் கட்சியின் பிடியில் இருந்த சம்மாந்துறைப் பிரதேச சபை ஐ.ம.சு. முன்னணியிடம் பறிபோயிருக்கிறது. இவை தவிர – மட்டக்களப்பில் கிட்டத்தட்ட மு.கா. வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது. அங்கு மு.கா.வின் வசமிருந்த காத்தான்குடி மற்றும் ஏறாவூர் சபைகள் பறிபோயிருக்கின்றன.
மு.கா.வுக்கு கடந்த காலங்களிலும் சரிவுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனாலும் அதை வெளிப்படையாக அந்தக் கட்சி ஏற்றுக் கொண்டதில்லை. 'எமக்கு கடந்த முறையை விடவும் வாக்குகளின் எண்ணிக்கை குறைவாகக் கிடைந்துள்ள போதும், வாக்குவீதம் அதிகரித்திருக்கிறது' என்பது போன்ற தலை கிறுகிறுக்கும் வரைவிலக்கணங்களினூடாக தமது சரிவினை அந்தக் கட்சியின் தலைமைத்துவம் பூசி மெழுக முயற்சிக்கும்!
ஆனால், இம்முறை மு.கா. ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது. அதாவது, தமது தோல்வி மற்றும் சரிவுகள் குறித்து ஆராய்வதற்காக பிரதிநிதிகள் சந்திப்பொன்றை நடத்துவதென்பதே அந்த முடிவாகும். அதற்கிணங்க மு.கா.வின் பிரதேச அமைப்பாளர்கள், உள்ளூராட்சிமன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்டவர்கள் மற்றும் கட்சியின் பிரதேச முக்கியஸ்தர்களை அழைத்து இது தொடர்பில் கருத்தறிவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
மேற்சொன்ன சந்திப்பினை கடந்த மாதம் கொழும்பில் நடத்தினார்கள். ஆனாலும், அது முழுமையான வெற்றியைத் தராமையினால், ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மு.கா. தலைவர் சென்று அந்தந்த மாவட்டத்தின் பிரச்சினைகள் குறித்து அங்கேயே பேசுவது எனத் தீர்மானிக்கப்பட்டது. இதன்படி, கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி அம்பாறை மாவட்டத்துக்கு மு.கா. தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வருகை தந்திருந்தார்.
துறைமுக அதிகாரசபையின் ஒலுவில் சுற்றுலா விடுதியில் தங்கியிருந்த மு.கா. தலைவரை அம்பாறை மாவட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த மு.காங்கிரஸினர் சந்தித்துப் பேசினார்கள். இதன்போது கட்சியின் பின்னடைவுக்குப் பிரதான காரணமாக மு.கா. தலைவரிடம் சில விடயங்கள் முன்வைக்கப்பட்டன. அவை:
  • மக்களுக்குத் தேவையான அபிவிருத்தி நடவடிக்கைகளில் மு.காங்கிரஸ் ஈடுபடுவதில்லை.                
  • மு.கா. இளைஞர்கள் பலர் மிக நீண்டகாலமாக தொழில் வாய்ப்புகளின்றி இருந்து வருகின்ற போதும் அவை குறித்து கட்சி கரிசனை எடுப்பதில்லை.
  • தேர்தல் காலங்களில் தலைவருக்கும் - ஆதரவாளர்களுக்குமிடையிலான உறவு பேணப்படவில்லை.
  • கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்கு உதவு நிதிகள் வழங்கப்படவில்லை.

இப்படி, கட்சியின் வீழ்ச்சிக்கான காரணங்களாகச் சொல்லப்பட்டவைகளைக் கூறிக் கொண்டு போனால் நீண்ட பட்டியலொன்று வரும்.
மேற்சொல்லப்பட்ட காரணங்கள் அனைத்தும் உண்மையாகும். மு.கா.வின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபின் மறைவுக்குப் பிறகு அல்லது ரவூப் ஹக்கீம் மு.கா.வின் தலைமையினைப் பொறுப்பெடுத்துக் கொண்டதன் பின்னர், மு.கா. ஆதரவாளர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட எந்தப் பிரதேசத்திலும் அந்தக் கட்சி சொல்லிக் கொள்ளத்தக்க அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. தவிரவும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதிலும் ஹக்கீம் சிரத்தை காட்டவில்லை.
இதேவேளை, மு.கா.வின் அரசியல் எதிராளிகளான அமைச்சர்கள் அதாவுல்லா, ஹிஸ்புல்லா போன்றோர் அவர்களின் பகுதிகளில் அசுரத்தனமான அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, தமது ஆதரவாளர்களில் கிட்டத்தட்ட பெருமளவான இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்துள்ளனர் என்பது மு.கா. ஆதரவாளர்களின் ஆதங்கமாகும்!
இவை தவிர, ஒவ்வொரு பிரதேசத்திலும் மு.கா. தலைவர் ஹக்கீம் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை கட்சியின் முக்கியஸ்தர்களாக நியமித்து அல்லது போஷித்து, அவர்களுக்கிடையில் தலைமைத்துவப் போட்டியினை உருவாக்கி விட்டுள்ளதாகவும், கட்சி - பிரதேச ரீதியாகப் பின்னடைவு கண்டு வருவதற்கு இது முக்கியமான காரணமென்றும் – ஆதரவாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.
மேலும், மறைந்த தலைவர் அஷ்ரப் ஒவ்வொரு பகுதியிலும் கட்சியின் மத்திய குழுக்களை அமைத்து – அந்தக் குழுக்களின் முடிவுகளுக்கிணங்கவே அந்தந்தப் பிரதேசத்துக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து வந்தார். ஆனால், மு.கா.வின் தலைமைப் பதவியினை ஹக்கீம் பொறுப்பெடுத்துக் கொண்டதன் பிறகு – கட்சியின் மத்திய குழுக்கள் இதுவரை மறுசீரமைக்கப்படாமல், செயலிழந்து விட்டன. இதுவும் - கட்சி வீழ்ச்சியடைவதற்கானதொரு காரணம் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மு.கா.வின் கிழக்கு மாகாணசபை உறுப்பினரொருவர்!
மு.கா.வின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கேட்டறிந்து கொண்ட தலைவர் ஹக்கீம் சில உறுதி மொழிகளையும், தீர்மானங்களையும் வெளியிட்டதாக அறியக் கிடைக்கிறது. அவைகளில் சில:
  • வேலை வாய்ப்புகளை இளைஞர்களுக்குப் பெற்றுக் கொடுப்பதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.
  • அபிவிருத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ஓவ்வொரு பிரதேசத்திலும் இடைக்காலக் குழுவொன்று அமைக்கப்படும். (இதில் கட்சியின் உள்ளூராட்சிமன்றத் தலைவர்,
  • உறுப்பினர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பிரசாரக்குழு அங்கத்தவர்கள் அடங்குவர்). இந்தக் குழுவினூடாகவே கட்சி சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இப்படி – தலைவரின் உறுதி மொழிகளும், தீர்மானங்களும் நீள்கின்றன.
உண்மையாகவே, ஒரு கட்சியின் தலைவரிடம் அழுது, புரண்டு கேட்கும் விடயங்களல்ல இவை! தனது கட்சியின் வளர்ச்சியில் அக்கறையுள்ள ஒரு தலைமைத்துவம் இவைகளைச் செய்து கொண்டேயிருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக ஹக்கீம் இவற்றினைச் செய்வதில் பின்னடித்தே வருகின்றார். மிகச் சரியாகச் சொன்னால்ளூ மு.கா.வின் மறைந்த தலைவர் அஷ்ரப் - ஊற்றி வைத்த எரிபொருளில்தான் மு.கா. எனும் வண்டி இன்னும் ஓடிக் கொண்டிருப்பதாக மக்கள் நம்புகின்றார்கள்.
இன்னொரு புறம், தேர்தல் காலங்களில் மட்டும் மக்களிடம் செல்லும் ஒருவராக மு.கா. தலைவரை அரசியல் எதிராளிகள் விமர்சிப்பதுண்டு. இதில் ஏதோவொரு வீதத்தில் உண்மையும் இருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது. கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்காக அம்பாறை மாவட்டத்துக்கு வந்து போன மு.கா. தலைவர் - மீண்டும் பொதுத் தேர்தல் விடயமாகத்தான் அந்த மாவட்டத்துக்கு வந்திருந்தார். தலைவரின் இவ்வாறான நடவடிக்கை மக்கள் மத்தியிலும் கசப்புணர்வினை ஏற்படுத்தியிருக்கிறது.
மு.காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரப் அவர்களையும், தற்போதைய அமைச்சர் ஹக்கீமையும் மக்கள் ஆதரிப்பதற்கிடையில்; பாரிய வித்தியாசத்தைக் காண முடிகிறது. அஷ்ரப்புக்காகவும், அவரின் கொள்கைகளுக்காகவும் மக்கள் அப்போது மு.கா.வை ஆதரித்தனர். ஆனால், இப்போது – மு.கா.வுக்காகவும், மு.கா.வின் இருப்புக்காகவும் ஹக்கீமை மக்கள் ஆதரிக்கின்றார்கள்! அஷ்ரப் காலத்தில் மு.கா. தொண்டர்களோ, ஆதரவாளர்களோ தமது தலைவரை பெரும்பாலும் கசப்புணர்வோடு விமர்சித்தது கிடையாது. ஆனால், இன்று ஹக்கீம் மீது மு.கா. தொண்டர்களே கடுமையான கசப்பையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்துவதைக் காண முடிகிறது.
இவ்வாறான காரணங்களால் மு.கா.வுக்கும் அதன் தலைவர் ஹக்கீமுக்கும் இப்போது கடுமையானதொரு இறங்குமுகம் உருவாகத் தொடங்கியுள்ளது. கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் அமைச்சர் றிசாத் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (முன்பு அ.இ.முஸ்லிம் காங்கிரஸ்) பல உள்ளூராட்சி சபைகளைக் கைப்பற்றியதோடு, அதிகளவு உறுப்பினர்களையும் வென்றிருக்கிறது. மக்கள் காங்கிரஸுக்கு இது நல்லதொரு ஏறுமுகமாகும். மு.கா. மீதான கசப்புணர்வு அதன் எதிராளிகளை இவ்வாறு வளர்த்து விட்டுக் கொண்டிருக்கிறது. இன்னொருபுறம், றிசாத் கட்சியினர் - மு.கா. போல் தமது சின்னத்தில் தனித்துப் போட்டியிட்டிருந்தால் இந்த வெற்றி கிடைத்திருக்குமா என்கிற கேள்வியுமுள்ளது.
எவ்வாறிருந்தபோதும் - மு.கா. தலைமையின் பலவீனம், அல்லது அசிரத்தைப் போக்குக் காரணமாக அந்தக் கட்சி வீழ்ச்சியடைந்து வருவதாக கட்சியின் ஆதரவாளர்கள் முன்வைக்கும் குற்றச் சாட்டு கவனிக்கத் தக்கது. இம்முறை இடம்பெற்ற உள்ளூராட்சிமன்றத் தேர்தலின் போது அம்பாறை மாவட்டத்தில் வாக்களிப்பு வீதம் மிக உயர்வாக இருந்தபோதும், கடந்த மு.கா.வின் வாக்குகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது. இப்படியே போனால் - கட்சி கடையில் கட்டெறும்பாகி விடும் என்று மு.கா.வின் உயர்மட்டத்து ஆட்களே கவலைப்படுவதைப் பிழையென்று சொல்லிவிட முடியாது!
இவைதவிர, மு.கா. தலைவர் ஹக்கீம் பொறுப்பெடுத்துள்ள நீதி அமைச்சில் அண்மையில் சில முக்கிய நியமனங்கள் வழங்கப்பட்டதாகவும் அவற்றில் - அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் உள்வாங்கப்படவில்லை என்றும் அம்பாறை மாவட்டத்து முக்கியஸ்தர்கள் மற்றும் தொண்டர்களால் குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு மிக அதிகமான வாக்குகளை வழங்கும் மாவட்டத்திலுள்ளவர்கள் புறக்கணிக்கப்படுவது நியாமற்றதொரு நடவடிக்கையாகும் என்கிறார் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் வடக்கு – கிழக்கு மாகாணசபை உறுப்பினரொருவர்!
ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் திருப்திப்படுத்தும் போதுதான் - கட்சி கட்டிக் காக்கப்படும். கட்சி இருந்தால்தான் - தலைவர், செயலாளர், எம்.பி.கள் எல்லோரும்...!
நாம் முன்பொரு கட்டுரையில் குறிப்பிட்டது போல், பொல்லாப்புகள் வந்துவிடும் என்பதற்காக 'ஆமை சுடுவது மல்லாத்தி' என்கிற உண்மையினைச் சொல்லாமலிருக்க முடியாது!!
நன்றி: தமிழ்மிரர் 

பின் லேடன் வசித்த வீடு தரைமட்டமாக்கப்படும்


binladen hausஇஸ்லாமாபாத், மே 6: அல் காய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின் லேடன் பாகிஸ்தானின் அபட்டாபாத் நகரில் கடைசியாகக் வசித்த வீடு தரைமட்டமாக இடித்துத் தள்ளப்படும் என்று பாதுகாப்புப் படையைச் சேர்ந்த அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஒசாமா பின் லேடனுக்கு ஏராளமான ஆதரவாளர்கள் பாகிஸ்தானில் இருக்கின்றனர். அவர்கள் அவர் வசித்த வீட்டை புனித இடமாகக் கருதி அந்தப் பகுதிக்கு இதே நாளில் ஆண்டுதோறும் யாத்திரை வந்தாலும் வருவார்கள் என்பதால் கட்டடத்தையே இடித்துத் தரைமட்டமாக்கிவிடுவது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதனால் தீவிரவாதம் மேலும் வளரும் என்ற அச்சம்கூட இந்த முடிவுக்குக் காரணமாக இருக்கலாம். ஆனால் அதைவிட இது பாகிஸ்தானிய அரசுக்கு பெரியதொரு அவமானச் சின்னமாக இருக்கிறது. உலகையே ஆட்டிப்படைத்த பயங்கரவாதிக்கு அடைக்கலம் கொடுத்துவிட்டு பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் அமெரிக்காவுடன் சேர்ந்து போரிடுவதாகக் கூறுவது ஏன் என்று எல்லா நாடுகளின் தலைவர்களும் பாகிஸ்தானைக் கேட்கக்கூடும். இதற்கு எந்தப் பதிலைக் கூறினாலும் அது பாகிஸ்தானுக்கு மேலும் அவமானத்தைத்தான் தேடித்தரும்.
பயங்கரவாதி தன்னுடைய குடும்பத்துடன் வசித்ததே தனக்குத் தெரியாது என்றால் பாகிஸ்தானின் போலீஸன்ம் உளவுப்பிரிவும் எதற்கும் தகுதியற்றவர்கள் என்ற கெட்ட பெயர் சர்வதேச அளவில் நிலைபெற்றுவிடும்.
இந்தக் கட்டடத்தில் நுழைந்து அமெரிக்கக் கடற்படை கமாண்டோக்கள் (சீல்) தாக்குதல் நடத்திவிட்டனர் என்ற போதிலும் பாகிஸ்தானிய ராணுவத்தினரைத் தவிர வேறு யாரையும் இன்னமும் இந்த வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.
இந்த வீட்டைச் சுற்றிக் காவல் பார்க்க வேண்டும் என்று கடந்த திங்கள்கிழமை முதல் உத்தரவிட்டார்களே தவிர அந்த வீட்டுக்கு உள்ளே எப்படி இருக்கிறது என்று பார்க்கக்கூட எங்களுக்கு அனுமதி தரவில்லை என்று அந்தப் பகுதி போலீஸ் நிலைய அதிகாரி நாசிர் கான் வருத்தம் தோயக் குறிப்பிட்டார்.
இந்த இடத்தை அர்ஷத்கான் என்பவர்தான் விலைக்கு வாங்கியிருக்கிறார். அந்த வீட்டுக்கான மின்சார நுகர்வு அட்டை, கேஸ் கார்டு ஆகியவை அவருடைய பெயரில் தான் வாங்கப்பட்டிருக்கிறது.
அர்ஷத் கானும் அவருடைய தம்பி தாரிக் கானும் அந்த வீட்டில் குடியிருந்தனர். அவர்களுடைய தேசிய அடையாள அட்டையானது கைபர் - பக்டூன் பிரதேசத்திலிருந்து பெறப்பட்டிருக்கிறது.
அக்கம்பக்கத்தார் ""நீங்கள் யார், ஏன் இங்கு குடி வந்தீர்கள்?'' என்று கேட்டபோது ""நாங்கள் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தைச் சேர்ந்தவர்கள், வேறு பழங்குடிகளுக்கும் எங்களுக்கும் சண்டை மூண்டதால் அங்கு இருக்க முடியாமல் இங்கே குடிவந்துவிட்டோம்'' என்று சொல்லியிருக்கிறார்கள்.
அந்த வீட்டை நூர் முகம்மத் என்ற ஒப்பந்ததாரர்தான் கட்டித் தந்திருக்கிறார். அதற்காக அவருக்கு 7.5 லட்சம் ரூபாய் தந்திருக்கின்றனர். அந்த வீட்டில் இருந்தவர்கள் யாருடனும் அதிகம் பேசியதில்லை. அந்த வீட்டில் எத்தனை பேர் இருந்தனர், அந்த வீட்டுப் பெண்கள் எப்படி இருப்பார்கள் என்றுகூட யாருக்கும் தெரியாமலே இருந்திருக்கிறது.
பக்கத்து வீட்டில் இருந்த காசிம் ஆலம் மட்டும் அர்ஷத் கானிடம் விடாமல் பேச்சு கொடுத்து, ""எப்போதும் வீட்டிலேயே இருக்கிறீர்களே சாப்பாட்டுக்கு என்ன செய்கிறீர்கள், செலவுக்கு எப்படிப் பணம் வருகிறது?'' என்று கேட்டிருக்கிறார்.
ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டில் தாங்கள் வியாபாரம் செய்வதாகவும் அவ்வப்போது அங்கு சென்று திரும்புவதாகவும் பணம் ஒரு பிரச்னையே அல்ல என்றும் பதில் அளித்திருக்கிறார்.அந்த வீட்டின் சுற்றுச்சுவர் மற்ற வீடுகளைக் காட்டிலும் மிக உயரமாக இருந்ததால் உள்ளே என்ன நடக்கிறது என்று வெளியிலிருந்து பார்க்கிறவர்களால் தெரிந்துகொள்ள முடிந்ததில்லை.
அந்த ஊரில் பெரும்பாலான வீடுகளில் அப்படித்தான் சுற்றுச்சுவரை உயரமாக எழுப்பியிருந்தார்கள். ஆனால் இந்தக் கட்டடத்தில்தான் சுவர் ரொம்ப உயரமாக இருந்திருக்கிறது. மற்ற வீடுகளில் சுவரின் உயரத்தைக் குறைத்துவிட்டு அதன் மேல் முள்கம்பி வேலி போட்டிருக்கின்றனர்.
இப்போதும்கூட அந்த வீட்டை ஏராளமானோர் வந்து பார்த்துவிட்டுச் செல்கின்றனர்.
பின் லேடனும் குடும்பமும் அங்கே எப்படி வசித்திருக்கும், அமெரிக்க கமாண்டோக்கள் வந்தபோது என்ன நடந்திருக்கும், எப்படிச் சுட்டிருப்பார்கள் என்றெல்லாம் அவரவர் கற்பனை வளத்துக்கு ஏற்ப பேசிச் செல்கின்றனர். ராணுவம், போலீஸ் இரண்டும் அந்த வீட்டை இப்போது காவல்காக்கின்றன. வீட்டிலிருந்து சேகரிக்க வேண்டிய தடயம் ஏதும் இல்லை, எனவே வீட்டை இடித்துவிடலாம் என்று போலீஸப்ர் தெரிவித்துள்ளனர்.
உலகின் பெரும்பாலான செய்திப்பத்திரிகைகளில் இந்த வீடும் வீட்டைப்பற்றிய வர்ணனையும் இடம் பெற்றுவிட்டன

ஒபாமாவின் செல்வாக்கு அதிகரிப்பு

வாஷிங்டன்,மே.6 - வாக்குறுதி அளித்தபடி வரிகளை குறைக்கவில்லை, வசதியை பெருக்கவில்லை. வேலைவாய்ப்பை அதிகப்படுத்தவில்லை. பொருளாதார சரிவில் இருந்து நாட்டை காப்பாற்றவில்லை என்றெல்லாம் அதிபர் ஒபாமா மீது அதிருப்தியில் இருந்த அமெரிக்கர்கள் பின்லேடனை கொன்றதன் மூலம் தற்போது ஒபாமாவுக்கு தங்களது ஆதரவை அள்ளித்தர ஆரம்பித்துள்ளனர். இது நீடிக்குமா, அடுத்த முறையும் அதிபராக இது போதுமா என்றெல்லாம் இப்போது ஆராய வேண்டும். இந்த நாளில் அவர் செல்வாக்கு அதிகரித்திருக்கிறது என்பதுதான் உண்மை. யு.எஸ்.ஏ. டுடே நடத்திய கருத்துக் கணிப்பின்படி பின்லேடனை அமெரிக்க ராணுவம் கொன்றது. சரியான செயல் என்று 90 சதவீத அமெரிக்கர்கள் கூறுகின்றனர். இது மிக முக்கியமான நடவடிக்கை என்று 79 சதவீத அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். பின்லேடன் கொல்லப்பட்டதை தாங்கள் அங்கீகரித்திருப்பதாக 98 சதவீத அமெரிக்கர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை எடுத்த போது கடந்த 2001 ல் நடத்திய இதே போன்ற கருத்து கணிப்பினஅ போது 90 சதவீத அமெரிக்கர்கள் அதை ஆதரித்துள்ளனர். 1991 ல் வளைகுடா போரில் அமெரிக்கா இறங்கிய போதும், 2001 ல் ஈராக் மீது படையெடுத்த போதும் கூட சுமார் 70 சதவீத அமெரிக்கர்கள்தான் ஆதரவு தெரிவித்தனர். இந்த முறை இது 90 சதவீதத்திற்கு மேல் இருப்பது குறிப்பிடத்தக்கது. பின்லேடனை கண்டுபிடித்து கொலை செய்ததில் முக்கிய பங்கு அமெரிக்க ராணுவத்துக்கும், சி.ஏஐவுக்கும் தான் அதிகம் என்று பலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதாவது அதிபரை விட அந்த இரு அமைப்புகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த விஷயத்தில் பெரும் பங்கு ஒபாமாவுக்குத்தான் என்கிறவர்கள் 35 சதவீதம் பேர்தான். ஓரளவுக்கு அவருக்கு பங்கு என்கிறவர்கள் 36 சதவீதம். பங்கு அதிகமில்லை என்கிறவர்கள் 25 சதவீதம்பேர்தான்.

வெள்ளி, 6 மே, 2011

நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர் அட்டூழியம்,250க்கு மேற்பட்ட அதிவேக விசைப்படகுகள்

யாழ். நெடுந்தீவுப் ஆழ்கடற்பகுதியில் இந்திய மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை 250க்கு மேற்பட்ட அதிவேக விசைப்படகுகள் மூலம் ஊடறுத்து உள்நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டு வருவதாக நெடுந்தீவு கடற் தொழிலாளர்களினால் நெடுந்தீவுக்கு பொறுப்பாக இருக்கும் கடற்படையினரிடம் முறையிட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை சுமார் 200 முதல் 250 மேற்பட்ட இந்திய அதிவேக விசைப்படகுகளின் உதவியுடம் இந்திய மீனவர்கள் பலர் நெடுந்தீவுக் கடற்பகுதியில் மீன் பிடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தங்கள் தொழில் செய்யமுடியாதவாறு கரைதிரும்பியுள்ளதாக நெடுந்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்திய மீனவர்களது அத்துமீறிய ஊடுரூவல் காரணமாக தங்களது கடற் தொழில் உபகரணங்களுடன் தாங்கள் கரைதிரும்பியுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒருமாதமாக இந்திய மீனவர்களது கடல் நடமாட்டம் இல்லாதிருந்த வேளையில் தற்போது இன்று அதிகரித்து இருப்பது கவலை தரும் விடயம் என நெடுந்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம் செல்ல புதிய நடைமுறை

கொழும்பு, மே.6:  வெளிநாடுகளில் குடியுரிமை பெற்றுள்ள இலங்கைத் தமிழர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் செய்வதற்குப் பாஸ் நடைமுறை மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.அதன்படி வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாட்டின் பாஸ்போர்ட்டுடன் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு செல்வதானால் பாதுகாப்பு அமைச்சகத்தின் அனுமதியை அல்லது வதிவிட விசாவை ஓமந்தை ராணுவ சோதனைச் சாவடியில் காண்பிக்க வேண்டும்.எந்தவித முன் அறிவிப்பும் இன்றி திடீரென அமுல்படுத்தப்பட்டுள்ள இந்த நடைமுறை காரணமாக வெளிநாடுகளில் இருந்து தமது உறவினர்களைப் பார்க்க யாழ்ப்பாணம் செல்வோர் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.கொழும்பிலுள்ள செய்தியாளர் ஒருவர் வெளிநாட்டில் வசிக்கும் தமது உறவினர்களுடன் யாழ்ப்பாணம் சென்றபோது, ஓமந்தை ராணுவச் சோதனைச் சாவடியில் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி இல்லாத காரணத்தால் மீண்டும் கொழும்பு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டதாக இலங்கை இணையதளச் செய்திகள் தெரிவிக்கின்றன.

கனிமொழிக்கு ஜாமீன் தர வேண்டும்-ஜேத்மலானி வாதம்

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் நேற்று வரை ஜாமீன் கோர மாட்டேன் என்று கூறி வந்த திமுக எம்பி கனிமொழி இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரானபோது அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி அவருக்கு ஜாமீன் கோரி வாதாடினார்.

கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர் என்ற வகையில் அந்தத் தொலைக்காட்சிக்கு ரூ. 124 கோடியை ஸ்வான் டெலிகாம் தந்த வழக்கில் கனிமொழி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் இன்று ஆஜரானார்.

கனிமொழி சார்பாக பிரபல கிரிமினல் வழக்ககறிஞர் ராம் ஜெத்மலானி ஆஜராகி வாதாடி வருகிறார். அவர் கூறுகையில், கனிமொழி தற்போது எம்.பியாக இருக்கிறார். மேலும் அவர் ஒரு பெண். இது மட்டுமல்ல, கலைஞர் டிவியில் அவருக்கு 20 சதவீதம் பங்குகள் தான் உள்ளன.

இவர் பங்குதாரராக இருந்தாலும் கலைஞர் டிவி நிர்வாகத்தை கவனிப்பதில்லை. நிர்வாகத்தின் முழு பொருப்பையும் சரத் குமாரே கவனித்து வருகிறார். கலைஞர் டிவியின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றிருந்த கனிமொழி 2 மாதத்திலேயே அந்த பொறுப்பில் இருந்து விலகிவிட்டார். இப்போது அவர் வெறும் பங்குதாரர் மட்டுமே.

கனிமொழி கலைஞர் டிவி நிறுவனத்தில் பங்குதாரராக இருக்கிறார் என்பதற்காகவே அவரை குற்றவாளி என்று கூறி விட முடியாது. மேலும் அவர் எந்த ஆவணத்திலும் கையெழுத்திடவில்லை, எதையும் அமல்படுத்தவில்லை.

ஸ்பெக்ட்ரம் வழக்கிலும் அவருக்கு எந்த சம்பந்தமும் இல்லை. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கியது எல்லாம் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாதான். அவர் தான் அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பு. அதில் கனிமொழி தலையிடவே இல்லை.

கருணாநிதி மகள் என்பதால் கனிமொழி பழிவாங்கப்படுகிறார். அவர் நீதித்துறையை மதிப்பவர். எங்கும் ஓடி விட மாட்டார். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.

அதே போல சரத்குமாரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

Swiss Bank கள்ளத்தனமாக, சட்டத்திற்கு விரோதமாகப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை

30 லட்சம் வருமானம் தாக்கல் செய்யும் ஒருவரின் வரி எவ்வளவாக இருக்கும்? எவ்வளவு இருந்தாலும், 30 லட்சத்திற்குமேல் இருக்க முடியாது இல்லையா. ஆனால் ரூ.50,00,00,00,00,000 (ரூ.50,000 கோடி) என்று வருமான வரி நோட்டீஸ் அனுப்பினால் எப்படி இருக்கும்?
ஹசன் ஹலி கான். இந்தக் கதையின் முதல் கதாநாயகன். பூனேயின் குதிரைப் பந்தய மைதானங்களில் எல்லோராலும் பார்க்க முடிந்த இவரைத் தான் 2006லிருந்து வருமான வரித் துறை ‘தேடிக் கொண்டிருந்தது’.
‘அப்பாவி’ ஹசன் ஹலி செய்த குற்றம், சுவிஸ் வங்கிகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து $8 பில்லியனுக்கும்மேல் வைத்திருந்ததாகச் சொல்கிறார்கள். காரணம் – வருமான வரி ஏய்ப்பு, கருப்புப் பணம், ஆயுத பேரங்கள், சிக்கலான, உலகளாவிய நெட்வொர்க் – மற்றும் அது சார்ந்த டீல்கள். இது ஒரு பக்கம்.

கறுப்புப் பணத்தினை பட்டுவாடா செய்த முறை.
ஜனவரி 20, 2011. பாராளுமன்றமே அமளி துமளியானது. எல்லா பிரதான எதிர்க்கட்சிகளும் கேட்ட ஒரே கேள்வி: சுவிஸ் வங்கியில் கள்ளத்தனமாக, சட்டத்திற்கு விரோதமாகப் பணம் வைத்திருப்பவர்களின் பட்டியலை, பொதுவெளியில் சொல்லுங்கள் பிரதமரே! நாட்டுக்கு நேர்மையாக சேரவேண்டிய பணத்தினை வெளிநாட்டு வங்கிகளில் ஒளித்து வைத்திருக்கும் கயவர்களின் முகமூடியினைக் கிழிப்பதில் உங்களுக்கு என்ன தயக்கம்!
பிரதமரான மன்மோகன்சிங் சொன்ன பதில்: நாம் சுவிஸ் வங்கியுடன் ரகசியப் பரிவர்த்தனை (confidentiality agreement) செய்துள்ளதால்தான் அவர்கள் பெயர்களைத் தந்திருக்கிறார்கள். சரியான சமயத்தில் விசாரணைக்குப் பிறகு பெயர்களை வெளியிடுவோம்.
இவ்வளவு கூச்சல், குழப்பத்துக்கும் காரணம் இந்த எண். சுவிஸ் வங்கியில் இந்தியர்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் சேர்த்துவைத்துள்ளதாக நம்பப்படும் கறுப்புப்பணம்: $462 பில்லியன் – சுமார் 2,07,90,00,00,00,000 (இருபது இலட்சத்து எழுபத்தி ஒன்பதாயிரம் கோடிகள் – தகவல்: Global Corruption Barometer by Transperancy International.)
அமர்சிங் இந்தியாவின் மிக முக்கியமான தடாலடி அரசியல்வாதி. ஒரு பக்கம் அனில் அம்பானி. இன்னொரு பக்கம் அமிதாப் பச்சன் என்று போஸ் கொடுக்கும் அசாத்திய விளம்பரப் பிரியர். திடீரென அவர் மீது ரூ.400 கோடிக்கு சட்டத்துக்குப் புறம்பான வகையில் பணம் கைமாற்றியதாகக் குற்றச்சாட்டு. 600 நிறுவனங்கள். எக்கச்சக்க பினாமி இயக்குநர்கள். உ.பி காவல்துறை அமர்சிங்குக்காகத் தனியாக டிவிஷன் தொடங்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தியாவில் லாரி டிரைவர்கள் வருடத்திற்கு ரூ.22,500 கோடிகள் போலீஸ்காரர்களுக்கும் எக்செஸ் ஊழியர்களும் கப்பம் கட்டுகிறார்கள் என்கிறது ஒரு தகவல். லாரி டிரைவர்கள் மட்டுமே இவ்வளவு பணம் தருகிறார்கள் என்றால், மற்றத் துறைகள், அதில் புழங்கும் ஊழல்கள், லஞ்ச லாவண்யங்கள், அதிகாரிகள் – முதலாளிகள் உறவுகள் என விரியும் நெட்வொர்க்கில், இந்தியாவில் இரண்டு பொருளாதார சூழல்கள் இருக்கின்றன. நிதியமைச்சர் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் சொல்லப்படும் பணம். இன்னொன்று எந்த பேப்பரிலும் பதியாமல் புழங்கும் கருப்புப் பணம்.
பணம். வரி கட்டாத பணம். சட்டத்தினை ஏமாற்றிய பணம். லஞ்சப் பணம். கட்டிங். முதலாளிகள் கணக்கில் காட்டாமல் ஏமாற்றும் பணம். ட்ராபிக் போலீஸ்காரர்கள் வாங்கும் ரூ.50லிருந்து, ஹசன் அலியின் ரூ.50,000 கோடி வரை எவ்விதமான நேர்மையுமில்லாமல், வரி கட்டாமல், ஏய்த்து, மிரட்டி, ஏமாற்றிப் புழங்கும் பணம்.
அன்னியனில் விக்ரம் “ஐஞ்சு பைசா, ஐந்து கோடி பேரு, தினமும் அஞ்சஞ்சு தடவை திருடினா தப்பா” என்று கேட்டதின் பின்னிருக்கும் சுவாரஸ்யமான, அபாயமான, அசாதாரணமான கதையின் ஹீரோ – கருப்புப்பணம்.
என்னதான் இருக்கிறது கருப்புப் பணத்தில்? எப்படி உருவாகிறது? யார் தருகிறார்கள்? எவ்வாறு கைமாறுகிறது? எவ்வளவு பணம் இந்தியாவில் இந்த ரீதியில் இருக்கும்? இதற்கெல்லாம் ரஜினி ‘சிவாஜி’ பின்னணி இசையுடன் பென்ஸில் வந்து இறங்கிக் கற்றுக்கொடுக்க மாட்டார்.
ஒரு விஷயம். கருப்புப்பணத்தின் அடிப்படை புரியாமல், வெற்று கூச்சல் எழுப்புவதில் அர்த்தமில்லை. அது ஒரு தனி மேட்டர். சற்றே பெரிய மேட்டர். தனி மால். தனியே, ஆழமாக அலசியெடுத்துப் பிழிந்து பார்க்கவேண்டிய சமாசாரம்.
பார்த்துவிடலாம்.
(தொடரும்)

தமன்னாவை தெலுங்கு தேசத்துக்குப் போக வைத்த காதல் தோல்வி!

தமிழில் நம்பர் ஒன் ஹீரோயின் என்று கூறப்பட்டு வந்த தமன்னாவுக்கு தமிழில் இப்போது ஒரேயொரு தமிழ்ப் படம்தான் உள்ளது. அது வேங்கை!

தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் தமன்னா. 2009-ல் 5 படங்களில் அவர்தான்ஹீரோயின். 2010-ல் தமிழ், தெலுங்கில் 9 படங்கள் நடித்திருந்தார் தமன்னா.

ஆனால் 2011-ல் இதுவரை அவர் நடித்து 1 படம்தான் வந்துள்ளது. இன்னும் வரவேண்டியிருப்பது தனுஷுடன் அவர் நடித்துள்ள வேங்கைதான்.

வேறு தமிழ்ப் படங்களே அவர் கைவசம் இல்லை. அமலா பால் போன்ற புதிய நடிகைகள் வரவால் இந்த நிலை என்று கூறப்பட்டாலும், உண்மையான காரணம் வேறாம்.

தமிழ் சினிமா ஹீரோ ஒருவருடன் அவருக்கிருந்த நெருக்கமான காதல் முறிந்து போனதுதான் இதற்குக் காரணம் என்கிறார்கள். இந்த மனக் காயத்தை மறக்கவே தமிழ் சினிமா வாய்ப்புகளை உதறிவிட்டு, தெலுங்குப் பக்கம் ஒதுங்கிவிட்டாராம்!

ராகுலை நம்பி இளைஞர்கள் போகலாமா?

இளைஞர்களே... அரசியலுக்கு வாருங்கள்! எந்த ஊருக்கு போனாலும், ராகுல் இந்த அழைப்பை சொல்லத் தவறுவதில்லை. அவர் உண்மையிலேயே அழைக்கிறாரா? இவரை நம்பி இளைஞர்கள் போகலாமா? இப்படி நம் மனதில் கேள்விகள் எழுவது இயற்கைதான்!

மத்திய பிரதேசத்தில், மீனாட்சி நடராஜன் என்ற தமிழரை, எம்.பி., ஆக்கவில்லையா... தமிழகத்தில், இளைஞர் காங்கிரசுக்கு, 10 சீட் பெற்றுத் தரவில்லையா... ராகுலை நம்ப, இதற்கு மேல் ஆதாரம் வேண்டுமா? இது எந்த அளவுக்கு உண்மை? ராகுலே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம், விடிவெள்ளி, எதிர்காலம் என ஊடகங்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டு, மாறி மாறி, "ஏற்றி விட்ட உசுப்புகளுக்கு' இவர் உகர்ந்தவர்தானா, தகுந்தவர்தானா? வறண்ட இந்தியாவை, வளர்ந்த இந்தியாவாக மாற்ற, பல நீர் மேலாண்மை ஜாம்பவான்கள், நதிகள் இணைப்பு என்ற திட்டம் தீட்டி கொடுத்ததை, வல்லவர் வாஜ்பாய் அமல் செய்ய நினைத்தபோது, ஆட்சி மாறியது. ஒரே வீச்சில், ஒரே பேச்சில், நதிகள் இணைப்புக்கு, ராகுல் தடை சொன்னபோது, அவரது முதிர்ச்சியின்மையின் முதல் வெளிப்பாடு. ஏழை இந்தியா, பணக்கார இந்தியா என இந்தியா இரண்டாக உள்ளது என்றார் ராகுல். இதற்கு யார் காரணம்? 50 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்ட உங்கள் குடும்பமா என்றபோது, பதில் சொல்ல வார்த்தையின்றி தவித்தது இரண்டாம் வெளிப்பாடு.

கேரள முதல்வர், "அச்சுவை' வயதை காரணம் காட்டி இகழ்ந்தார். தனது கூட்டணியில், 86 வயது கருணாநிதியை வைத்துக் கொண்டு... இது, மூன்றாம் வெளிப்பாடு. இது ஒருபுறமிருக்க, அழைக்கும் இளைஞர்கள் உழைக்க, இவரால் உகந்த இடம் தர முடிந்ததா? கடந்த, 2009 லோக்சபா தேர்தலில் மத்திய அமைச்சரவையை தீர்மானிக்கும் இடத்தில் இவர் இருந்தார். இந்த வல்லமையை இவர் எப்படி பயன்படுத்தினார்? யார் யாருக்கெல்லாம் சீட்டு கொடுத்தார்... அமைச்சர் பதவி கொடுத்தார்... பார்த்தோமென்றால், இவர் மீது இருக்கும் பரவசங்கள் பறந்து போகும். காங்கிரஸ் சார்பில் வெற்றிபெற்ற, 208 பேரில், 78 பேர் பரம்பரை குடும்ப அரசியல்வாதிகள். இதில், 19 பேர், குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அமைச்சர் எம்.எல்.ஏ., எம்.பி.,யாக உள்ளனர். இவர் டிக்கெட் கொடுத்த இளைஞர் காங்கிரசை சேர்ந்த, 30 வயதிற்குட்பட்ட, 33 எம்.பி.,க்களுக்கும், முழு அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். மன்னராட்சி மறைந்தது உண்மைதான். ஆனால், மன்னராட்சியில் இருந்த வாரிசு அரசியல், ஜனநாயகத்திலும் தொடர்கிறது. இப்பிரிவிற்கு காங்கிரஸ் தலைமை வகிக்கிறது. இந்திராவிற்கு பேரனாகவும், ராஜிவுக்கு மகனாகவும் பிறக்காமல் போயிருந்தால், காங்கிரசில் இவர் இருக்கும் இடம் யாருக்கு தெரிந்திருக்கும்?

- எஸ்.ஆர்.சேகர் -
Sureshkumar Mani - paramakkudi malaysia,இந்தியா
2011-05-06 05:51:51 IST Report Abuse
இதுநாள் வரைக்கும் இந்திய உருப்பட உருப்படியா ஒரு திட்டமும் இந்த காங்கிரசிடம் இல்லை. பி ஜே பி ஆட்சியிலாவது இந்தியா உலக நாடுகளில் பிரபலமானது. இவன் என்னமோ அரசியல கரைச்சு குடிச்சா மாதிரியும்... இளைங்கர்களா வைச்சு பெரிய புரட்சி செய்ய போறா மாதிரி பில்டப்பு வேற... முதல்ல நல்ல பையனா பார்த்து sorry நல்ல பொண்ணா பார்த்து கட்டி கொடுங்க.
Krish - India,சிங்கப்பூர்
2011-05-06 05:49:35 IST Report Abuse
ராகுல் ஒரு அரசியல் அரவேக்காடு. இவருக்கு பின்னால் இளைஞர்கள், போக கூடாது, ஆனால் கலைஞர்கள் [DMK Family] போவார்கள். நதிகளை இணைக்க கூடாது - இது ஒன்று போதும். இளைஞர்கள் இவர் பின்னால் போக மாட்டார்கள், ஆனால் இவர் பின்னால போயிடுவார். 63 வருடம் இந்தியா வுக்குள் இருக்கும் சாப கேடு.
Anbalagan M - sembawang,சிங்கப்பூர்
2011-05-06 04:38:30 IST Report Abuse
முதலில் ராகுலுக்கு நாட்டிற்கு எது வேண்டும் எது தேவை இல்லை என்பதே தெரியவில்லை. இளைஞராக இருப்பதை தவிர இவருக்கு வேறு எந்த தகுதியும் இல்லை.கிட்டத்தட்ட ஐம்பது வருடங்கள் ஆண்ட உங்களால் வறுமையை ஒழிக்க முடியவில்லை இதற்கு யார் காரணம். நேருவா,இந்திரா காந்தியா,ராஜீவ் காந்தியா சொல்லுங்கள் ராகுல். நீங்கள் என்று நதிகள் இணைப்பை சாத்தியமில்லை என்று கூறினீர்களோ அன்றே உங்களது எண்ணங்கள் புரிந்து விட்டது நீங்கள் வருங்கால பிரதமாரக தகுதில்லைஎன்று. மக்களோட ஒன்னா சாப்பிட்டாலோ மண் சுமந்தாலோ மாற்றம் வந்து விடாது .இத்தனை வருடங்கள் அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாத உங்களால் இனி வரும் காலங்களில் உங்களால் என்ன செய்துவிட முடியும். உங்களுக்கு இருக்கும் ஒரே தகுதி இந்திராவின் பேரன் என்பதை தவிர வேறு ஒன்று இல்லை .
rama1955 lingam - chennai,இந்தியா
2011-05-06 05:03:47 IST Report Abuse
நேருவின் மகள் இந்திராகாந்தி. இந்திராகாந்தியின் மகன் ராஜீவ்காந்தி, ராஜிவ்காந்தியின் மனைவி சோனியாகாந்தி, சொனியா காந்தியின் மகன் ராகுல்காந்தி, இப்படி குடும்ப வாரிசுகளாக வரும் எந்த தலைமையும் சரிவர அமையவில்லை. குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அவர்களை கட்சி தொண்டர்கள் தலைமையாக பார்கிறார்கள். அப்படி ஒரு பார்வை தேவையற்றது. உண்மையில் நாட்டுக்காக இதுவரை என்ன செய்தார்கள் என்று பார்த்து தலைவரை தேர்ந்து எடுக்கவேண்டும். சும்மா குடும்ப வாரிசுகள் என்ற காரணத்தை வைத்து அவர்கள் நாட்டுக்கு மற்றும் கட்சிக்கு தலைவராக பார்ப்பது சரி இல்லை.

ரஜினி மீண்டும் உடல்நிலை பாதிப்பு-மீண்டும் மருத்துவமனையில்

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஜினி நடிக்கும் `ராணா' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஏவி.எம். ஸ்டூடியோவில் கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதில் கலந்து கொண்ட ரஜினிகாந்த்துக்கு மூச்சுத்திணறல் ஏற்படவே, உடனே இசபெல்லா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவருக்கு அஜீரணக் கோளாறு தான் ஏற்பட்டதாக அவரது வீட்டில் தெரிவித்தனர்.

ரஜினிக்கு ஜீரண கோளாறு ஏற்பட்டு, இதனால் வாந்தி எடுத்தார் என்று கூறினர். சிகிச்சை முடிந்து அன்றைய தினம் மாலையில் அவர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினார்.
  Read:  In English 
இந் நிலையில், ரஜினிகாந்துக்கு நேற்றிரவு 8.30 மணி அளவில் மீண்டும் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் உடனடியாக மீண்டும் இசபெல்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளதாகவும், லேசான காய்ச்சல் காரணமாகவும் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக அவரது வீட்டினர் தெரிவித்துள்ளனர்.
English summary
Rajinikanth was admitted back at St Isabel’s Hospital in Chennai on Wednesday, May 4th, 2011. Only last week the Superstar had to be admitted in this hospital. He has been admitted again yesterday after he complained of breathlessness and fever.

30 வருடகாலம் பயங்கரவாதத்தினுள் சிக்கியிருந்த மக்களை மீட்டது குற்றமா?

mahinda-rajapaksa-050511அழுத்தங்கள் எந்த வடிவில் வந்தாலும் தளரமாட்டோம்
* மனிதாபிமான நடவடிக்கையை ஒழிவு மறைவின்றியே முன்னேடுத்தோம்

-  ஜனாதிபதி
மனித உரிமைகளைப் பாதுகாத்தவாறு முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கைகளுக்கு எதிரான, உலகின் அழுத்தங்களைக் கண்டு நாம் ஒருபோதும் தளர்வடைய மாட்டோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று தெரிவித்தார்.

முப்பது வருடங்கள் நீடித்த பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து, அழிவுகளை நிறுத்தி, அங்கு சிக்கியிருந்த அப்பாவி மக்களை மனிதாபிமான அடிப்படையில் விடுவித்து, நாட்டில் அச்சம், பீதியின்றி சுதந்திரமாகக் வாழக்கூடிய சூழல் எம்மால் ஏற்படுத்தப்பட்டிருப்பதை குற்றமாக்கிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறதென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கூறினார்.

சர்வதேச குடும்ப சுகாதார தின ஞாபகார்த்த வைபவம் அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் மேற் கண்டவாறு தெரிவித்தார்.

பாதுகாப்பான தாய்மைக்காக செயற்திறன்மிக்க குடும்ப சுகாதார சேவை என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உரையாற்று கையில், பொதுவாக இன்று முழு நாடும் உலகின் பல விதமான அழுத்தங்களுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் நேரமிது. நாம் 30 வருட கால யுத்தத்தை முழுமையாக ஒழித்துக் காட்டியுள்ளோம். இன்று சுதந்திரமாக நடமாட முடிகின்றது. அச்சம், பீதியின்றி வடக்கு, கிழக்கு உட்பட முழு நாட்டிலும் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கின்றது.

யுத்தம் லட்சக்கணக்கான இளைஞர், யுவதிகளின் உயிர்களை காவு கொண்டுள்ளது. வடக்கென்றாலும், தெற்கென்றாலும் நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பெடுக்கவிருந்த இந்நாட்டுப் பிரஜைகளையே நாம் இழந்துள்ளோம். இப்படியான அழிவையே நாம் நிறுத்தியுள்ளோம். முப்பது வருடங்களாக இடம்பெற்ற யுத்தத்தை நாம் பதவிக்கு வந்ததும் குறுகிய காலத்தில் அதனை முழுமையாக முடித்தோம். நாம் நாட்டுக்கும், மக்களுக்கும் சுதந்திரத்தைப் பெற்றுக் கொடுத்துள்ளோம்.

இது நாட்டை அபிவிருத்திப் பாதை யில் நகர்த்திக்கொண்டிருக்கும் சந்தர்ப்பம். முப்பது வருடங்கள் பின்தங்கியுள்ள நாட்டை துரிதமாக முன்னேற்ற வேண்டிய தேவை எம்முன்னால் உள்ளது. அந்த அபிவிருத்தி பாதையில் பயணிக்க வேண்டியது எமது பொறுப்பாகும். அபிவிருத்தி அடையாத பிரதேசங்களையும், யுத்தம் காரணமாக அழிவுற்றுள்ள உட்கட்டமைப்பு வசதிகளையும் துரிதமாக மீளக்கட்டியெழுப்புவதற்காக கோடிக்கணக்கான ரூபாவை ஒதுக்கி செலவிட்டு வருகின்றோம்.

பாதை தவறிய இளைஞர், யுவதிகளுக்கு புனர்வாழ்வு அளித்து வருகின்றோம். இப்படியான நிலையில் எமக்கு சாட்சியமில்லாமல் குற்றப்பத்திரிகையொன்று முன்வைக்கப்படுகின்றது. அதில் எம்மை போர்க்குற்றவாளிகளாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டை விடுவிக்க முன்னெடுக்கப்பட்ட மனிதாபிமான நடவடிக்கையை குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்க சிலர் துணை புரிகின்றனர். 1987-1990 காலப்பகுதியில் தென் பகுதியில் நகரத்திற்கு நகரம், கிராமத்திற்குக் கிராமம், வீதிக்கு வீதி டயர்களில் இளைஞர்கள் எரிக்கப்பட்டார்கள்.

வரலாற்றில் இப்படியான நிலமை ஒரு போதுமே ஏற்படவில்லை. நாம் குரூர பயங்கரவாதத்தை ஒழிக்கும் போது இப்படியான நிலமை ஏற்படவில்லை. நேருக்கு நேர் போராடி பெரிய பயங்கரவாதியை ஒழிப்பதற்கு எமது படையினர் மேற்கொண்ட போராட்டம் இன்று தவறாக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாதிகளிடம் சிக்குண்டிருந்த லட்சக்கணக்கான மக்களை விடுவித்தமை மற்றும் பயங்கரவாத அழிவுகளை நிறுத்தியமை என்பவற்றை குற்றமாக்கி விட இன்று முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது. இன்று சிலர் அற்பத்தனமாக சிந்தித்து அற்ப அரசியல் லாபம் பெற்றுக் கொள்ளும் வகையில் வெவ்வேறு விதமான அறிக்கைகளை அனுப்புகிறார்கள். இன்னும் சிலர் டொலர்களுக்காகவும், அரசியல் நலன்களுக்காகவும் அறிக்கைகள் அனுப்புகிறார்கள். இவற்றின் விளைவுகளுக்கே நாம் இன்று முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

என்றாலும் இவற்றுக்காக நாம் தளர்வடைய மாட்டேம். எமக்குப் பொறுப்புள்ளது. இச்சந்தர்ப்பத்தில் எல்லா பேதங்களையும் மறந்து நாட்டுக்காக ஒன்றாகக் குரல் கொடுக்க எல்லோரும் ஒன்றுபட்டுள்ளார்கள்.

அதனை நாம் பாராட்டுகின்றோம். அதனால் இப்பிரச்சினைக்கு நாம் முகம் கொடுப்போம். எம்மிடம் கூறுவதற்கு விடயங்கள் உள்ளது. இதனை நாம் இரகசியமாக செய்யவில்லை. நாம் மனித உரிமையைப் பாதுகாத்தபடியே மனிதாபிமான இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தோம். இல்லாவிட்டால் எவ்வளவு வெள்ளைக்கொடிகளை எம்மால் பார்த்திருக்க முடியும்.

ஆகவே, நீங்கள் நாட்டின் மீது பற்றுக் கொண்டு செயற்படுபவர்கள். உங்களால் பிரசவிக்கப்படுகின்ற குழந்தைகள் நல்ல போஷாக்குமிக்கவர்களாகவும், நாட்டுக்குப் பங்களிப்பு செய்யக் கூடியவர்களாகவும் திகழ பணியாற்றுங்கள்.

எமது நாட்டில் குடும்ப சுகாதார சேவை 1929ம் ஆண்டில் ஆரம்பமானது. அந்த வகையில், மருத்துவ மாதுகள் சேவைகளுக்கு இந்நாட்டில் நீண்ட வரலாறு உள்ளது.

அன்று பெண்மணியொரு வர் கர்ப்பம் தரித்தால் அப்பெண் குழந் தையை பிரசவிக்கும் வரையும் அவருக்குரிய சகல சேவைகளையும் செய்து கொடுப்பதை மருத்துவ மாதுகள் தமது பொறுப்பாகக் கருதி செயற்பட்டனர். இதனடிப்படையில் கர்ப்பிணிகளை மருத்துவ மாதுகள் அடிக்கடி கண்காணித்து வந்தனர். அவர் களது வீடுகளுக்கு இவர்கள் ஒவ்வொரு நாளும் செல்லக்கூடியவர்களாக இருந்தனர்.

அன்றைய காலத்தில் கர்ப்பிணி பெண்களின் விடயத்தில் டொக்டர்களை விடவும் மருத்துவ மாதுகளே அதிக கரிசனை காட்டினர். குழந்தைகளை ஆரோக்கியமானவர்களாகப் பிரசவிக்கச் செய்வதில் இவர்கள் தீவிர கரிசனை காட்டினர். நான் மாத்தறை, பாலட்டுவவில் தான் பிறந்தேன். எமது கிராமத்திற்கு அருகிலுள்ள கிராமத்தில் தான் டொக்டர் விக்கிரமசிங்க இருந்தார். என்றாலும் எமக்கும் டொக்டரை விடவும் மருத்துவமாது தான் அதிக சேவை செய்துள்ளார்.

மருத்துவ மாதுகளின் சேவை மிகவும் கெளரவமானது. பெறுமதிமிக்கது. அன்று உங்களுக்கு கிராமத்துடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. நீங்கள் பொற்றுக் கொண்ட அனுபவம் எமது குழந்தைகளைப் பாதுகாப்பதற்குப் பெரிதும் உதவியது.

எமது குடும்ப சுகாதார உத்தியோகத்தர் ஒருவர் ஆசிய, பசுபிக் பிராந்தியத்தில் சிறந்த சேவையாளர்களில் ஒருவருக்கான விருதைப் பெற்றுள்ளார். இன்று நாம் அந்த நிலைக்கு வளர்ந்துள்ளோம்.

எமது நாட்டில் தாய் சேய் உயிரிழப்பு பெரிதும் குறைந்துள்ளது. இவை அனைத்தும் உங்களது சேவையின் பலனாக இந்நாடு பெற்றிருக்கும் நன்மைகள் கிராமத்திலுள்ள ஒவ்வொரு வீடுகள் தொடர்பாகவும் உங்களுக்குப் புரிந்துணர்வுள்ளது. உங்களது சேவை குறித்து மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கை இருக்கின்றது. அதனால் நாமும் சமூகமும் உங்களது சேவையைப் பாராட்டுகின்றோம்.

இதே வேளை குழந்தைகள் குறித்து பேசுகின்ற நாம் மந்த போஷாக்கு குறித்தும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம். மந்த போஷாக்கை ஒழிப்பது எமது பொறுப்பாகும். இதன்படி குழந்தைகளுக்குப் போஷாக்கான உணவைப் பெற்றுக் கொடுப்பதும எமது கடமையாகும்.

இந்நாட்டில் மந்த போஷாக்கு குறித்து பேசப்படுவதற்கு தவறான உணவுப் பழக்க வழங்கங்கள் தான் காரணம். என்றாலும் எமது நாட்டில் மந்த போஷாக்கு நிலையை போக்குவதற்கு பயிரிடுவோம். நாட்டைக் கட்டியெழுப்புவோம், திவிநெகும குடும்ப பொருளாதார அலகுத் திட்டம் என்பன பெரிதும் உதவும். இத்திட்டங்களை ஊக்குவிப்பதற்கு நீங்களும் பங்களிப்பு செய்யுங்கள். உங்களது ஆலோசனைகளை கிராம மக்கள் பெரிதும கேட்பார்கள். அது குழந்தைகளுக்கு போஷாக்குமிக்க உணவுகள் கிடைக்க பெரிதும் உதவும் என்றார்.

இந்நிகழ்வில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, மேல் மாகாண ஆளுனர் அலவி மெளலானா உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டார்கள்
.

உலகின் முதல்நிலை பயங்கரவாதியை தோற்கடித்த நாடு அமெரிக்கா அல்ல, இலங்கையே'

உலகின் முதல்நிலை பயங்கரவாதியை தோற்கடித்த நாடு அமெரிக்கா அல்ல, இலங்கையே'
'உலகத்தில் முதலாம் இடத்தைப் பெற்ற பயங்கரவாதி அமெரிக்காவினால் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று ஒரு ஊடகத்தில் வெளியாகியிருந்தது. அது எப்படி? அவர் செய்தது மிகப் பெரிய இரண்டு தாக்குதல் மட்டுமே தான். ஆனாலும் இலங்கையில் இருந்த பயங்கரவாதி தற்கொலை குண்டு வைத்து 300 இற்கு மேற்பட்டோர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு வான், கடல், தரைப் படையணிகள் இருந்தன. நிலைமை அப்படியாயிருந்தும் பின் லேடன் எப்படி முதலாம் இடத்தைப் பெற்றார்? எனவே நம் நாட்டில் இருந்த பயங்கரவாதி தான் உலகில் முதலாம் இடத்தைப் பெற்ற பயங்கரவாதி ஆகும். ஆந்த பயங்கரவாதத்தை வெற்றிகொண்ட நாம் நம்மை ஏன் இரண்டாம் இடத்தில் வைக்க நினைக்க வேண்டும்?' என அவர் கேள்வி எழுப்பினார். கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் மனிதவள அபிவிருத்தி நிறுவனம் சேர்ந்து ஆரம்பித்த டிஜிட்டல் வீடியோ தொழில்நுட்பம் மற்றும் ஊடகத் தொழில்நுட்ப சான்றிதழ் பாடநெறியை ஆரம்பிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு  இளைஞர் விவகார மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு கூறிள்ளார்.

வியாழன், 5 மே, 2011

Kanimozhi: சுலபமாக வீழ்த்திவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம்

புதுதில்லி, மே.5: 2ஜி ஊழல் வழக்கை சட்டரீதியாக சந்தித்து தவறு செய்யவில்லை என நிரூபிப்பேன் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.இது மிக, மிக கடுமையான குற்றச்சாட்டு. இதில் இருந்து வெளியில் வருவோம். தவறு செய்யவில்லை என நிரூபித்து இந்த வழக்கில் இருந்து வெளியில் வருவேன் என கனிமொழி தெரிவித்தார்.2ஜி ஊழல் வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த 2-வது குற்றப்பத்திரிகையில் கனிமொழியின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நாளை ஆஜராகுமாறு அவருக்கு சிபிஐ நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.சட்டரீதியாக அந்த வழக்கை எதிர்ப்போம். நானும் கூட்டு சேர்ந்து சதிசெய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது தொடர்பாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. சட்டரீதியாக அதை எதிர்ப்போம் என கனிமொழி தெரிவித்தார்.இந்திய நீதி அமைப்பில் நம்பிக்கை உள்ளது. நீதிமன்றம் என்ன முடிவுசெய்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன் என்றார் அவர்.இந்த விவகாரத்தால் திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் எதுவும் இல்லை என அவர் மறுத்தார். இந்த விவகாரத்தால் எனது குடும்பம் பிளவுபடவில்லை. திமுகவும், அதன் தலைவர் கருணாநிதியும் என்ன முடிவு எடுத்தாலும் அதன்பக்கம் எனது குடும்பத்தினர் இருப்பார்கள் என்றார் அவர்
.முன்ஜாமீன் கேட்க மாட்டேன்: இதனிடையே சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சிபிஐ தன்னை கைது செய்ய விரும்பினால் அதை சட்டரீதியாக எதிர்த்துப் போராடவிருப்பதாகவும், முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்ய மாட்டேன் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும் தன்னை சுலபமாக வீழ்த்திவிடலாம் என யாரும் நினைக்க வேண்டாம் என அவர் குறிப்பிட்டார்,
NEW DELHI:
DMK MP Kanimozhi, set to appear before a CBI court on Friday in connection with the 2G spectrum scam, on Thursday said nobody should think she is an "easy target" and asserted that she will fight the case legally.

"I don't believe in speculation. Lets wait and see what happens tomorrow and the court has to decide. I cannot tell you what court should decide or what the court would decide," she told television channels when asked about speculation that she might be arrested.

43-year-old Kanimozhi, daughter of DMK chief M Karunanidhi, said, "If people think I'm an easy target, they are highly mistaken".

Kanimozhi, who has been named in the second charge sheet filed by the CBI in the 2G case, said "It is a very, very serious charge and that I am very clear and I am very sure that we will come out of it and I will come out of it clean". She was replying to a question on CBI naming her as a co-conspirator in the case.

Asked whether she was prepared for the eventuality of her arrest, she said "if that is what the legal system wants, if that is what the CBI wants then we have to wait and see. We have to fight it whatever it is. We have to fight it legally".

"So we have to stand up and fight in the court. But lets wait and see", the Rajya Sabha MP said.

"We have to face everything legally. We cannot run away from things. We have to respect the court. We have to face it. We cannot keep running away", Kanimozhi said when asked whether appearance before the court worries her as other chargesheeted persons in the case were in jail.

She has also been asked by the Enforcement Directorate to appear before it in connection with the 2G case under the Prevention of Money Laundering Act.

Observing that she believed in the legal system of the country and that she will abide by it, she said "whatever the court decides, I will accept... I have complete faith in the Indian judicial system and there will be justice one day".

In its supplementary charge sheet filed in a special court on April 25, the CBI has accused Kanimozhi of entering into a criminal conspiracy with former telecom minister A Raja for allegedly accepting illegal gratification through Kalaignar TV -- a channel run by the ruling DMK in Tamil Nadu, in which Rs.200 crore related to the 2G scam was said to have been routed.

எந்த கூட்டணி ஆட்சி அமைக்கப்போகிறது?

பரம்பரை பரம்பரையாக திமுகமீதும் கலைஞர் மீது வெறுப்பின் உச்சியில் நின்று கொண்டு விஷம் கக்கி வரும் உயர் ஜாதி அரசியல்வாதிகள் அலைக்கற்று வரிசை விவகாரத்தை பயன் படுத்தி சேறு வாரி தூற்றி வருகின்றனர். இந்த ஒன்றை வைத்து கனிமொழியை கைது செய்து அவமானப்படுத்தி விடலாம் என்று மனப்பால் குடிக்கின்றனர்.
சுப்பனும் குப்பனும் வாழ்வில் முன்னேறுவதை சகிக்க முடியாதவாள் எல்லாம் ஒண்ணு சேந்துட்டா பாருங்கோ. குடிசை வீட்டிலும் கம்பியுட்டர் டிவி மற்றும் உயர் கல்வியை காண பொறுக்காதவர்கள் எல்லாரும் ஒண்ணா பஜனை பாட ஆரம்பிச்சிட்டா. ராஜாவின் நிர்வாகத்தில் முறைகேடு நடந்ததாக கூறப்படுவதும் அதை தமிழக தேர்தல் நேரம் பார்த்து கையில் எடுத்ததும் சந்தேகம் வரத்தானே செயும்? யார் மீது ? ஆதிக்க சக்திகள் என்று கலைஞர் அடிக்கடி குறிப்பிடுவது யார் என்று அவா எல்லோருக்கும் புரியும்.
தேர்தல் கமிஷன் வேறு மாநிலங்களுக்கு ஒரு நீதி தமிழ்நாட்டுக்கு ஒரு நீதி என்பது ஏற்புடையதா?
தேர்தல் நடைபெற்று ஒரு மாதம் கழித்துதான் எண்ணுவோம் என்பது எதற்காக?
விஜயகாந்த், அதிமுக, காங்கிரஸ், சி பி ஐ மற்றும் தேர்தல் கமிசன் போன்றவர்களை சற்று ஒரே வரிசையில் வைத்து பாருங்கள் ஒரு கண்ணுக்கு புலப்படாத சாதிக்கூட்டணி ஒன்று உருவாகிவருவதாக ஒரு தோற்றம் எழுவதை மறுப்பது கடினம்.

கனிமொழி கைதாவாரா அல்லது ஜாமீன் வழங்கப்படுமா

டில்லியில் குவிந்தனர் தி.மு.க., எம்.பி.,க்கள்: கோர்ட்டில் நாளை ஆஜராகிறார் கனிமொழி
சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதற்காக கணவர், மகன் சகிதமாக, டில்லிக்கு, கனிமொழி நேற்று வந்திறங்கினார். அவருடன், தி.மு.க., எம்.பி.,க்களும் வந்தனர். நாளைய வழக்கு விசாரணையை எவ்வாறு எதிர் கொள்வது என்பது குறித்து, மத்திய அமைச்சர் அழகிரி வீட்டில், தீவிர ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், கனிமொழி கைதாவாரா அல்லது ஜாமீன் வழங்கப்படுமா என்ற கேள்வி, தி.மு.க., வட்டாரங்களை ஆட்டிப்படைக்க ஆரம்பித்துள்ளதால், தி.மு.க., பதட்டம் அடைந்துள்ளது.

"ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில், சி.பி.ஐ., தாக்கல் செய்திருந்த இரண்டாவது குற்றப்பத்திரிகையில், "டி.பி., ரியாலிட்டி' குழுமத்தில் இருந்து, "கலைஞர் டிவி'க்கு பணம் கைமாறிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதில், கூட்டு சதியாளர் என, முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழி பெயர் குறிப்பிடப்பட்டிருந்ததால், வரும் 6ம் தேதி, சி.பி.ஐ., நீதிமன்றத்தில் ஆஜராகும்படி கனிமொழிக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியின் கைதை எப்பாடுபட்டாவது தவிர்க்க வேண்டும் என, தி.மு.க., தலைமை போராடி வருகிறது. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் உயர் அதிகாரிகள் பலரும் ஜாமீன் கேட்டனர்; ஆனால், ஜாமீன் கிடைக்கவில்லை. அவர்கள் அனைவருமே சிறையில் உள்ளனர். இந்த வரிசையில், கனிமொழியும் அடுத்ததாக வருவதால், என்ன நடக்கும் என்ற பரபரப்பு கிளம்பியுள்ளது. கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா அல்லது சிறைக்கு அனுப்புவதா என்பதை முடிவு செய்யப்போவது ஒரே நபர் தான். அவர், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஓ.பி.சைனி மட்டுமே. குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் யாருக்குமே இதுவரை சைனி தரப்பில் இருந்து கருணை கிடைக்கவில்லை. ஆனால், அரசியல் சம்பந்தப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால், கனிமொழி விஷயத்தில் சைனி என்ன செய்வார் என்பதில் பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.

இத்தகைய சூழ்நிலைகளுக்கு மத்தியில், கனிமொழி நேற்று டில்லி வந்து சேர்ந்தார். அவருடன் அவரது கணவர் அரவிந்தன், மகன் ஆதித்யாவும் வந்தனர். ராஜ்யசபா எம்.பி., சிவா மற்றும் நாகை லோக்சபா எம்.பி., விஜயனும் கனிமொழியுடன் வந்தனர். அவர்களை, விமான நிலையத்தில், தி.மு.க., பார்லிமென்ட் கட்சித் தலைவர், டி.ஆர்.பாலு வரவேற்றார். கனிமொழி, தன் குடும்பத்தினருடன் டில்லியில் உள்ள அவர் இல்லத்திற்கு சென்றார். அதன் பிறகு, மத்திய உரத்துறை அமைச்சர் அழகிரி இல்லத்தில், தி.மு.க., முக்கிய எம்.பி.,க்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம், பல மணி நேரம் நடைபெற்றது. வழக்கு குறித்தும், அதை எவ்வாறு எதிர்கொள்வது என்றும், கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. "கலைஞர் "டிவி'க்கு விளம்பர வருவாயைத் தவிர வேறு வருமானங்கள் இல்லை. பெரிய அளவில் சொத்துக்களும் இருப்பதாக தெரியவில்லை. அதன் வருவாய் லாபம் என பார்த்தால், 10 முதல், 15 கோடி ரூபாய் வரை மட்டுமே இருக்க வேண்டும். இவ்வளவு சிறிய வருமானத்தை வைத்துள்ள ஒரு நிறுவனத்திற்கு, எந்த உத்தரவாதமும் இல்லாமல், 214 கோடி ரூபாய் வழங்க, "டி.பி., ரியாலிட்டி' குழுமம் ஏன் முன் வர வேண்டும்?' என்பதே, சி.பி.ஐ., யின் கேள்வி. அதுமட்டுமல்லாது, வாங்கிய கடனை திரும்ப செலுத்திவிட்டதாக, கலைஞர் "டிவி' கூறிவருகிறது. இவ்வாறு கடனை திரும்ப செலுத்தியது, 2010, டிசம்பரில் தான். அந்த சமயத்தில் அமைச்சர் பதவியில் இருந்த ராஜா விலகி, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரணைக்கு உள் ளாகிக் கொண்டிருந்தார். எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழல் பணம் தான், "கலைஞர் "டிவி'க்கு அளிக்கப் பட்டிருப்பதாக, சி.பி.ஐ., சந்தேகம் கிளப்புகிறது. இந்த சந்தேகங்களை போக்க வேண்டுமென்பதற்காகவே சம்மன் செய்யப்பட்டது; விசாரணையும் நடத்தப்பட்டது. முடிவில், கூட்டுச்சதி செய்தவர் என்ற குற்றச்சாட்டையும், சி.பி.ஐ., வைத்துள்ளது.

கனிமொழிக்கு ஜாமீன் வழங்குவதா, வேண்டாமா என்பதை, நீதிபதி சைனி முடிவு செய்வார் என கூறப்பட்டாலும், சி.பி.ஐ., என்ன செய்யப் போகிறது என்பதே முக்கிய கேள்வியாக இருக்கிறது. கார்ப்பரேட் அதிகாரிகளுக்கு ஜாமீன் வழங்குவதற்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்தே, அவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டனர். கனிமொழிக்கும் அதேபோல எதிர்ப்பை தெரிவிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரசிடம் இவ்விஷயத்தில் உதவும்படி பலமுறை, தி.மு.க., தரப்பு கேட்டுக் கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. காங்கிரஸ் தரப்பில், "ராஜா கைது இருக்காது' என்று அளித்த உறுதியும், "குடும்ப உறுப்பினர்களிடம், சி.பி.ஐ., விசாரணை இருக்காது' என்று அளித்த வாக்குறுதியும் கடைசியில் என்னவாயிற்று என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், கனிமொழியை காப்பாற்றும் விஷயத்தில் காங்கிரஸ் தரும் அனைத்து உறுதிமொழிகளையும் நம்புவது வீணானது என்ற கருத்தும், தி.மு.க.,வுக்கு ஏற்பட்டுள்ளது.

வக்கீல் யார்? கனிமொழிக்காக வாதாடுவதற்கு, பிரபல கிரிமினல் வக்கீல் ராம்ஜெத்மலானி ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிகிறது. ஏற்கனவே, ராஜாவுக்காக ஆஜராகும்படி அணுகியபோது, அவர் மறுத்துவிட்டார். கனிமொழிக்கு ஆஜராக சம்மதம் தெரிவித்திருந்தாலும், நாளை, சி.பி.ஐ., கோர்ட்டில் கனிமொழி ஆஜராகும் சூழ்நிலையில், இவருக்கு ஜாமீன் கேட்டு சைனி முன், ராம்ஜெத்மலானி ஆஜராவது சந்தேகமே என, தகவல்கள் கூறுகின்றன.

கனிமொழிக்கு சம்மனா? இதுவரை வரவில்லை: மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தரப்பிலிருந்து கனிமொழிக்கு எந்த சம்மனும் இதுவரை வந்து சேரவில்லை என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "ஸ்பெக்ட்ரம்' ஊழல் பணம், "கலைஞர் டிவிக்கு அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், ஹவாலா பணமோசடியும் இதில் நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதையடுத்து, மத்திய அமலாக்கப்பிரிவும், "ஸ்பெக்ட்ரம்' ஊழல் வழக்கை தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஹவாலா முறையில் முறைகேடாக வெளிநாட்டிலிருந்து பணம் பரிமாற்றம் நடந்துள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், கனிமொழியை விசாரணைக்கு ஆஜர் ஆகும்படி மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி நேற்றைய நாளிதழ் ஒன்றில் (தினமலர் அல்ல) வெளியான செய்தியின்படி வரும் 5ம் தேதி அன்று (இன்று) ஆஜராகும்படி அழைத்துள்ளதாக தகவல் வெளியானது. மற்றொரு ஆங்கில நாளிதழ் செய்தியில் வரும் 12ம் தேதி அன்று ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்த வட்டாரங்களை தொடர்பு கொண்டு கேட்டபோது, "விசாரணைக்கு வரும்படி கனிமொழிக்கு சம்மன் அனுப்பியிருக்கலாம். ஆனால், அந்த செய்தியில் கூறப்பட்டிருப்பது போல 5ம் தேதி வரச் சொல்லி கூறப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. இருப்பினும், அமலாக்கப்பிரிவு அதிகாரிகளிடம் இருந்து கனிமொழிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படும் அந்த சம்மன் இந்த நிமிடம் வரை வந்து சேரவில்லை. நாளையோ அல்லது 12ம் தேதியோ என்பதெல்லாம் சம்மன் கிடைத்த பிறகுதான் உறுதியாக தெரியும்,' என்று தெரிவித்தன.

- நமது டில்லி நிருபர் -

யாழ் பேரூந்து நிலையத்தில் பெண் பிச்சைக்காரர்கள்: பயணிகள் சிரமம்!

கடந்த சில மாதங்களாக யாழ் பேரூந்து தரிப்பிடத்தில் பெண் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இவர்கள் கையில் ஒரு குழந்தையுடன் பல்வேறு காரணங்களை கூறி பிச்சை எடுப்பதை அவதாக்கக்கூடியதாக உள்ளது. இவர்களுடன் அங்கவீனமான சில ஆண்கள், அங்கத்தில் எந்தவித குறைபாடும் இல்லாத சில ஆண்கள், வயோதிபப் பெண்கள் என நாளுக்குநாள் புதுப்புது முகங்கள் யாழ் பேரூந்து தரிப்பிடத்தில் பிச்சை எடுக்க ஆரம்பித்துவிட்டன. பேரூந்து தரிப்பிடத்தில் மட்டுமல்லாது பேரூந்துகளுக்குள்ளும் ஏறி பயணிகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகின்றனர். ஒரு பேரூந்தில் ஒருவர் மாறி ஒருவராக அடுத்தடுத்து ஏறி பிச்சைவாங்கும் இவர்களில் சிலர் பணம் கொடுக்காதவர்களை திட்டிவிட்டு செல்வதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இவர்களில் ஒரு சிலரைத் தவிர ஏனையவர்கள் மது அருந்துபவர்களாகவே காணப்படுகின்றனர். பிச்சை எடுக்கும் பணத்தில் அந்தப் பெண்கள் குடித்துவிட்டு போதையில் கையில் வைத்திருக்கும் தமது குழந்தைகளையே நிலத்தில் தூக்கி எறியும் நிலைமைக்கு போதையில் இருப்பார்கள். இந்த விடயம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பயணி ஒருவர், “ஒரு நாள் பிச்சை கொடுக்கலாம் ஒவ்வொரு நாளும் கொடுக்க நம்மால் முடியாது. எங்களுடைய செலவுக்கு மட்டுமே பணம் கொண்டு வரும் எமக்கு பிச்சை கேட்டு வரும் எல்லோருக்கும் கொடுக்க முடியாது” என்றார்.

24 வருடங்களின் பின்னர் ஞானம்ஸ் ஹோட்டலின் செயற்பாடுகள் ஆரம்பம்!


Gnamasயாழ் மின்சார சபை வீதியிலுள்ள ஞானம்ஸ் ஹோட்டலின் செயற்பாடுகள் 24 வருடங்களின் பின்னர் மீண்டு ம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க இந்த ஹோட்டலைத் திறந்ததாக பலாலி இராணுவ ஊடகப் பிரிவு செவ்வாய்க்கிழமை (3.5.2011) அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டிருந்த யுத்த சூழ்நிலை காரணமாக 1987ம் ஆண்டு முதல் ஞானம்ஸ் ஹோட்டலின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்திருந்தன. இலங்கை இராணுவத்தினரின் 512 ஆவது படைப்பிரிவினரின் பாவனையில் இருந்த இந்க் ஹோட்டல் பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. ஞானம்ஸ் ஹோட்டல் கடந்த ஜூன் மாதம் அதன் உரிமையாளரிடம் கையளிக்கப்பட்டது. யாழ்ப்பாணத்தின் பிரபல உல்லாச விடுதிகளில் ஒன்றான சுபாஸ் ஹோட்டலை மார்ச் மாதம் 17ம் திகதி அதன் உரிமையாளரான ஹரிகரனிடம் இராணுவத்தினர் கையளித்திருந்தனர். அத்துடன் இந்த விடுதி அமைந்திருந்த விக்டோறியா வீதியும் பொதுமக்கள் பாவனைக்குத் திறந்துவிடப்பட்டது. யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க சுபாஸ் விடுதியை உத்தியோகபூர்வமாக அதன் உரிமையாளர் எஸ்.ஹரிகரனிடம் கையளித்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

வலிகாமம், வடமராட்சி: உயர் பாதுகாப்பு வலயங்களில் மீள்குடியேற்றத்துக்கு அனுமதி

யாழ். மாவட்டத்தில் உள்ள பாதுகாப்பு வலயப் பகுதிகளில் அடுத்து வரும் ஒரு மாத காலத்துக்குள் சுமார் 2,700 குடும்பங்களைச் சேர்ந்த 10,000 பேர் மீளக் குடியமர்த்தப்படவுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்தார். இதற்கான அனுமதியை யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த அத்துருசிங்க வழங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மீள்குடியேற்ற நடவடிக்கையின் கீழ் வலிகாமத்தில் உள்ள தெல்லிப்பழை, மாவிட்டபுரம் வீமன்காமம், கொல்லன்கழப்பு, தந்தை செல்வாபுரம் மற்றும் விளான் உள்ளிட்ட பிரதேசங்களிலும் வடமராட்சியில் மருதங்கேணியிலும் இவ்வாறு மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் குறிப்பிட்டார்.இது மட்டுமின்றி, தென்மராட்சியில் இராமாவில் மற்றும் வடமராட்சி கிழக்கு, குடத்தனை ஆகிய இடங்களில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்கள் வெற்றிலைக்கேணி, கட்டைக்காடு, முள்ளியான் போக்கறுப்பு உள்ளிட்ட இடங்களில் மீள்குடியேற்றப்ப டவுள்ளதாகவும் யாழ். அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார். வடக்கில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் துரித மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு நடவடிக்கைகளின் கீழ் இந்த மீள்குடியேற்றம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரச அதிபர் சுட்டிக்காட்டினார்.

புதன், 4 மே, 2011


Pakistan ஒசாமாவை பலமுறை தப்ப வைத்த ஐஎஸ்ஐ-விக்கிலீக்ஸ்

அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடமிருந்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ பலமுறை தப்ப வைத்துள்ளதாக விக்கிலீக்ஸ் தெரிவித்துள்ளது.

இதனால் தான் இந்தமுறை பாகிஸ்தானிடம் சொல்லாமலேயே பின்லேடனை அமெரிக்கப் படைகள் தாங்களே வந்து அழித்தாகத் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க தூதரங்களுக்கு இடையிலான ரகசிய கேபிள் தகவல்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது.

அதில், குவாண்டநாமோ பே சிறையில் உள்ள சிலர் மூலமாகவே பின்லேடனின் புதிய இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்குத் தெரியவந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சிறையில் உள்ள ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சபீ்ர் லால் மெல்மா என்பவர், 2001ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஐஎஸ்ஐ உதவியோடு பின்லேடனை காபூலில் இருந்து காப்பாற்றி பாகிஸ்தானுக்குள் அழைத்துச் சென்றது குறித்த விவரங்களை அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எல்லை வரை அவர்களை தானும் தனது கூட்டாளிகளும் அழைத்துச் சென்றதாகவும், எல்லைப் பகுதியில் அவர்களை ஐஎஸ்ஐ உளவாளிகள் வரவேற்று அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

மேலும் ஒசாமாவின் இருப்பிடம் குறித்து நம்பகமான தகவல்கள் கிடைத்து அதை பாகிஸ்தான் அரசுடன் பகிர்ந்து கொண்டபோதெல்லாம், ஒசாமைவை ஐஎஸ்ஐ இடம் மாற்றி, காப்பாற்றிவிட்டதாகவும், பாகிஸ்தான் விமான நிலையங்கள் வழியாகக் கூட அல் கொய்தா தலைவர்களை ஐஎஸ்ஐ பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளதாகவும் விக்கிலீக்ஸ் கூறியுள்ளது.

பாகிஸ்தான் நம்பிக்கையான நாடு அல்ல-சிஐஏ:

இந் நிலையில் அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் தலைவர் லியோன் பனெட்டா கூறுகையில், பாகிஸ்தான் எங்களது எல்லாவிதமான தகவல்களையும் கசிய விட்டது. இதனால் நாங்கள் பின்லேடன் மீது தாக்குதல் நடத்துவது தொடர்பான தகவல் எதையும் பாகிஸ்தானிடம் தெரிவிக்கவில்லை.

நாங்கள் எந்த முடிவு எடுத்து பணியை செய்ய ஆரம்பித்தாலும் பாகிஸ்தான் அதற்கு இடைஞ்சலாக இருந்து வந்தது. இதனால் பின்லேடன் மீதான தாக்குதலை மிகவும் உஷாராக மேற்கொண்டோம்.

பாகிஸ்தான் தகவல்களை கசிய விடும் என்ற பயத்தின் காரணமாகவே தாக்குதல் தொடர்பாக நாங்கள் எதையும் தெரிவிக்கக்கூடாது என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தோம். பாகிஸ்தான் நம்பிக்கைக்கு உரிய நட்பு நாடு அல்ல.

என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும்:

என்றாலும் பாகிஸ்தானுடன் நட்பு நீடிக்கும். அது ஒரு குழப்பமான காரணங்கள் கொண்ட நட்பு. ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்ட பாகிஸ்தானுடனான உறவு தொடரும்.
எங்களது எதிரிகள் இன்னும் அந்த நாட்டில் தான் உள்ளனர். அவர்களுக்கு எதிராக எங்களது தாக்குதல் தொடரும் என்றார்.
English summary
As the first euphoria about the death of the world's most-dreaded terrorist ebbs, the focus is fast shifting to Pakistan, the country where Osama bin Laden was found and killed. There are contrary claims on whether Pakistan was informed by the US about the operation and questions are also being raised on how much people in Pakistan knew of Osama's whereabouts.

அழகிரி திடீரென டெல்லிக்கு பயணம்.கனிமொழி விவகாரம் தொட

மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரி திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப் பதிவு நடைபெற்ற போது , மதுரையில் இருந்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, வாக்கு பதிவு பின்னர் சென்னையில் முகாமிட்டிருந்தார். டெல்லி பக்கம் அவர் சென்று வெகு நாட்களாகி விட்டது.

தற்போது கடும் வெயில் கொளுத்தி வருவதைத் தொடர்ந்து கொடைக்கானலுக்கு ஓய்வுக்காக அவர் சென்றிருந்தார். அங்கிருந்தபடி தென் மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனைகளையும் மேற்கொண்டிருந்தார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் வரும் 6ம் தேதி சிபிஐ விசாரணைக்கு கனிமொழி ஆஜராகவேண்டும் என சம்மன் அனுப்பியுள்ளது.

இந்தப் பின்னணியில், இன்று அதிகாலையில் கொடைக்கானலில் இருந்து மதுரை சென்ற அழகிரி, அங்கிருந்து காலை 10 மணி அளவில் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.

கனிமொழி விவகாரம் தொடர்பாகவே அழகிரி டெல்லிக்குப் போயுள்ளதாக கூறப்படுகிறது.
English summary
Union Minister and DMK strong man M.K.Azhagiri has left for Delhi this morning. He was camping in Kodaikanal. This morning he left for Madurai and then to Delhi.

Ram Jethmalani. கனிமொழி' விவகாரம்: கருணாநிதி, ஸ்டாலின், வீரமணி, சட்ட நிபுணர்கள் தீவிர ஆலோசனை-வாதாட ராம் ஜேத்மலானி



சென்னை: 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாளை மறுதினம் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் திமுக எம்பி கனிமொழி ஆஜராகும்போது அவருக்காக மூத்த வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி ஆஜராகலாம் என்று தெரிகிறது.

இந்த வழக்கை ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிபிஐ தனது குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயரை சேர்த்துள்ளது. இதையடுத்து கனிமொழி வரும் 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டுள்ளார்.

இந் நிலையில் நாளை நேரில் ஆஜராகுமாறு கனிமொழிக்கு அமலாக்கப் பிரிவும் சம்மன் அனுப்பியுள்ளது.

கனிமொழி இல்லத்தில் தீவிர ஆலோசனை:

இந் நிலையில் கனிமொழியின் இல்லத்தில் சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனை நடைபெற்று வருகின்றன.

சென்னை சி.ஐ.டி. காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்தில் கடந்த சில நாள்களாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் முதல்வர் கருணாநிதியும் பங்கேற்று வருவதாகத் தெரிகிறது.

நேற்றைய ஆலோசனையில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், மாநில அமைச்சர்கள் நேரு, துரைமுருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

திராவிட கழக தலைவர் வீரமணியும் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டார். நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆலோசனை 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது.

கனிமொழிக்காக வாதாட ராம் ஜேத்மலானி?:

இந் நிலையில் நாளை மறுதினம் சிறப்பு நீதிமன்றத்தில் கனிமொழி நேரில் ஆஜராகும்போது அவர் சார்பில் பிரபல மூத்த வழக்கறிஞர் ராம்ஜெத்மலானி வாதாடுவார் என்று தெரிகிறது.

ராம்ஜேத்மலானி பாஜகவைச் சேர்ந்தவர், ராஜஸ்தானிலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Eminent lawyer and BJP MP from Rajasthan Ram Jethmalany may appear for DMK MP Kanimozhi in 2G spectrum case. Meanwhile CM Karunanidhi has hold discussions with party leaders, legal experts on the issue. Kanimozhi should appear before Delhi CBI court on May 5, it is noted.