திங்கள், 10 ஏப்ரல், 2017

ஒரு முசுலீம் மாடு வாங்கினாலே ஆர்.எஸ்.எஸ் கொல்லும் ! தலித்தும் முஸ்லிமும் ஐநா வில் முறையிடவேண்டும் !

ஒரு முசுலீமோ, தலித்தோ தாக்கப்படும்போது, இங்கு தமிழ்நாடே ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல்களுக்கு எதிராகக் கொந்தளிக்கும் நிலை உருவாக்கப்பட்டால் தான் இந்துத்துவ பாசிஸ்ட்டுகளின் நச்சுப் பிடியில் இருந்து தமிழகத்தையும் இந்தியாவையும் மீட்க முடியும் !
பெஹ்லுகானின் மனைவி மகன்கள்பசுவைக் கொன்றவனுக்கு மரணதண்டனை வழங்கு” என்கிறது மனுநீதி ! மோடியின் ஆட்சியில் அந்த தண்டனையை வழங்குகிறது சங்க பரிவாரம். ஆயினும் பழைய நீதிப்படி பசுவை கொன்றிருக்க வேண்டும் என்பதல்ல ! பசுவை கொல்வதற்காகத்தான் நீங்கள் வாங்குகிறீர்கள் என்ற சந்தேகமே போதும் !
பெஹ்லுகானின் மனைவி மற்றும் மகன்கள்
இந்தியா முழுவதும், கடந்த 2014ம் ஆண்டு தொடங்கி பசுவதைத் தடுப்பின் பெயரில் முசுலீம்கள், தலித்துக்கள் கொல்லப்படுவதும், தாக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.

கங்கை அமரனின் பண்ணை அடிமை விசுவாசம் :விவசாயிகளை பிரதமர் பார்க்கவேண்டுமா?

பிரதமர் மோடி போய் விவசாயிகளை பார்க்க வேண்டுமா என்று அண்மையில் பாஜகவில் சேர்ந்து ‘சீட்’ வாங்கிய பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் விவசாயிகளை கொச்சைப்படுத்தி பேசியுள்ளார். By: Amudhavalli
சென்னை: பணக்கார விவசாயிகள் கடனை வாங்கிக் கொண்டு தள்ளுபடி செய்ய கோருவது நியாயமா என்று கங்கை அமரன் கேள்வி எழுப்பியுள்ளார். பயிர் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்; வறட்சி நிவாரணம் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 28 நாட்களாக டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை என்ன என்று கேட்பதற்கு கூட மோடி அரசு தயாராக இல்லை. தொடர்ந்து விவசாயிகள் ஆட்சியாளர்களை கவனத்தை ஈர்க்கும் வகையில் மீசை வழித்து, மொட்டை அடி, எலி கறி தின்று, பாம்பு கறி தின்று போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

டாக்டர் பாலாஜி அந்த ஐந்து லட்சத்தை டாக்டர் பீலேயின் ஹோட்டல் பில் கட்டினாராம் ...

லண்டன் டாக்டர் பீலே ரூ5 லட்சம் வாங்கியது உண்மை ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது லண்டன் டாக்டர் பீலேவுடன் அப்பல்லோ நிர்வாகம் மல்லுக்கட்டிய கதையை அம்பலப்படுத்தியுள்ளார் டாக்டர் பாலாஜி. By: Mathi :ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது லண்டன் டாக்டர் பீலேவுடன் அப்பல்லோ நிர்வாகம் மல்லுக்கட்டிய திடுக்கிடும் தகவலை டாக்டர் பாலாஜி வெளியிட்டுள்ளார். ஆர்கே நகர் பணப்பட்டுவாடா விவகாரம் தொடர்பான வருமான வரி சோதனை பூதாகரமாக வெடித்துள்ளது. வாக்காளர்களுக்கு ரூ89 கோடி பணம் பட்டுவாடா செய்த சர்ச்சை ஒருபக்கம் விஸ்வரூபமெடுத்துக் கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் ஜெயலலிதாவின் கை ரேகையை பதிவு செய்த டாக்டர் பாலாஜிக்கு ரூ5 லட்சம் கொடுக்கப்பட்ட ஆவணமும் புயலை கிளப்பி வருகிறது.

பாரதத்தின் தலைநகரில் நிர்வாணமாகி போன மானம் ...

சரவணன் சந்திரன் : கடைசியில் பாரதத்தின் தலைநகரில் நிர்வாணப் போராட்டம் நடத்துகிற நிலைக்கு வந்துவிட்டோம். இது உண்மையிலேயே தேசிய அவமானம். அங்கே போராடும் விவசாயிகளை ஒருங்கிணைக்கும் அய்யாக்கண்ணு ஆடிக் கார் வைத்திருக்கிறாரா? என்றெல்லாம் பேசிப் புரிய வைக்க வேண்டிய தேவையில் இருப்பது எவ்வளவு அவமானம் தெரியுமா? இருபது ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்களை எல்லாம் வசதியான விவசாயியாக வரித்துக் கொண்டால் என்ன செய்வது? கடுமையான வறட்சி நிலவுகிறது. ஏற்கனவே சொன்ன மாதிரி பழங்கள், காய்கறிகள் எல்லாம் போதுமான நீரில்லாமல் செடியிலிருந்து உதிர்ந்து கொண்டிருக்கின்றன. அப்படி உதிர்கிறவற்றிற்கு சந்தையில் விலை கிடைப்பதில்லை. கிலோ அறுபது ரூபாய் போய்க் கொண்டிருந்த கொய்யா இப்போது 15 ரூபாய்க்கு விலை போனாலே அதிசயம். அதையும் எடுக்கவிடுவதில்லை.

துணைவேந்தர் கீதாலட்சுமி வருமானவரி அலுவலகத்தில் நேரில் வர மறுப்பு .. உயர்நீதிமன்றத்தில் மனு ..

விஜயபாஸ்கர், சரத்குமார்,ராஜேந்திரன் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகியும்,  தான் ஆஜர் ஆகாமல் சம்மனை எதிர்த்து கீதாலட்சுமி வழக்கு தொடர்ந்துள்ளார்.கடந்த 7ம் தேதி, சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, அலுவலகம் உட்பட 35க்கும் மேற்பட்ட இடங்களிலும், நடிகர் சரத்குமாரின் வீடு, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி வீடு, முன்னாள் எம்.பி. சிட்லபாக்கம் ராஜேந்திரன் வீடு உள்ளிட்ட பகுதிகளிலும் வருமான வரித்துறையினர் ஒரே நேரத்தில்  சோதனை நடத்தினர்.<>சோதனையில் பல கோடி ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும் இது குறித்து வருமான வரித்துறை சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அமைச்சர் விஜயபாஸ்கர் ,சரத்குமார் மீது பலமணி நேரம் கிடிக்கி பிடி விசாரணை ... நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகத்தில் ..


அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோர், ஏப்ரல் 10ஆம் தேதி காலை 11மணியளவிலிருந்து சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்து வருகின்றனர்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிகளவில் பணப் பட்டுவாடா நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தனர். அதேபோல, கடந்த 7ஆம் தேதி அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார் ஆகியோரின் வீடு உள்பட 36 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதில் ஆர்.கே.நகரில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கின,மேலும் அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர்கள் இல்லத்தில் 3 கோடிக்கு மேல் பணமும் சிக்கியுள்ளது. இதுதொடர்பான,ஏப்ரல் 10ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி ஆகியோருக்கு கடந்த 8ஆம் தேதியன்று வருமான வரித்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

டெல்லியில் நிர்வாண போராட்டம் .. தமிழக விவசாயிகள் பிரதமர் பார்க்க மறுத்ததால் ..


தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 28வது நாளை எட்டியுள்ளது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அய்யாக்கண்ணு மட்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆடைகளை களைத்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரை சந்திப்பதாக அழைத்துச் சென்று ஏமாற்றி விட்டனர் என்று அய்யாக்கண்ணு குற்றம் சாட்டினார். இதையடுத்து தமிழக விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்t நக்கீரன்

இந்திய கப்பல் சோமாலியாவில் மீட்பு .. சீன இந்திய கூட்டு படைகள் அதிரடி

; புதுடில்லி: சோமாலியா கடற்கொள்ளையர்கள் கடத்த முயன்ற வர்த்தக கப்பலை, இந்தியா, சீனா நாடுகளின் கடற்படையினர் இணைந்து, வெற்றிகரமாக மீட்டனர். இந்தியா - சீனா நாடுகள் இடையே, எல்லை பிரச்னை, புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு இந்தியா உதவி வருவது உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக உரசல் போக்கு காணப்படுகிறது. திடீர் தாக்குதல் : <>இந்நிலையில், ஏடன் வளைகுடா பகுதியில், நேற்று முன்தினம் இரவு, சோமாலியா கடற் கொள்ளையர்கள், வர்த்தக கப்பல் ஒன்றை கடத்தும் நோக்கில், திடீர் தாக்குதல் நடத்தினர்.அது குறித்து, இந்தியா, சீனா நாடுகளின் கடற்படை அதிகாரிகளுக்கு, அவசர தகவல் கிடைத்தது. சோமாலியா கடற் கொள்ளையர்களிடம் இருந்து, வர்த்தக கப்பலை காப்பாற்றும்படி, பிரிட்டனை சேர்ந்த, கடற்பகுதி வர்த்தக அமைப்பான, யு.கே.எம்.டி.ஓ., அவசர தகவலை அனுப்பி இருந்தது.
இதையடுத்து, இந்திய போர்க் கப்பல்கள், ஐ.என்.எஸ்.மும்பை, ஐ.என்.எஸ்.தார்கேஷ் ஆகியவை, உடனடியாக, வர்த்தக கப்பல் தாக்கப்பட்ட பகுதிக்கு விரைந்தன.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலையுடன் முடியவுள்ள நிலையில் இடைத்தேர்தலை ரத்து செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.&>டெல்லியில் நடைபெற்ற விரிவான ஆலோசனைக்குபிறகு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் ரத்துக்கான 29 பக்க காரணங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்.
;தேர்தல் ஆணைய இணைய தளத்தில் வெளியான விரிவான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
<">அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுகிறது. வருமானவரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருந்தது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் அடிப்படையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

உபியில் பாஜக வென்ற ரகசியம் இதுதான்? ராஜஸ்தான் இடைதேர்தலில் காங்கிரசுக்கு போட்ட ஓட்டுக்கள் பாஜக தாமரைக்கு விழுந்தது

Rajasthan by-poll: Voter says he pressed button for Congress, but it was ‘lotus’ on VVPAT paper
More complaints of EVMs favouring BJP even though the button pressed was for other parties have emerged. This time the complaint has come from Rajasthan, where by-election was held on Sunday for Dholpur assembly seat. Quoting a report by Aaj Tak channel, Delhi chief minister Arvind Kejriwal once again asked why faulty EVMs were only favouring BJP.
He wrote, ‘Why defectiv EVMs voting only BJP? They not “defective”. Their software changed. Let EC give us one of these EVM, we’ll prove they r tamperd (sic)”
His another tweet said, “Will the MCD polls be neutral? Why does not the EC probe these machines? What is the point of polls in a situation like this? According to reports, a voter in Dholpur on Sunday complained that he had cast his vote in favour of Congress but the printout coming out of VVPAT machine showed the vote had gone to the BJP.
The returning officer of the Election Commission told Aaj Tak that one voter, Rakesh Jain, had reported the faulty machine. This prompted the officers deployed at the polling booth to stop the poll for at least two hours. This led to loud protests by Congress supporters.

ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

ஆர் கே நகர் தேர்தல் தள்ளி வைப்பு .. அதிகார பூர்வ அறிவிப்பு வெளியானது !

பிந்திய செய்தி : ஆர் கே நகர் இடைதேர்தல் பணப்பட்டுவாடா காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம் அறிவிப்பு புதுடில்லி:ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. வருமானவரிதுறை சோதனை, பணம் பட்டுவாடாவை தொடர்ந்து இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
இன்னும் ஒரு நாள் தேர்தல் கமிஷன் வெயிட் பன்னிருக்கலாம்!! ! பாவம் ஏழபாழைங்க காசு வாங்கி சந்தோஷமா இருந்திருப்பாங்க

ஜெயலலிதாவின் கைரேகையை உறுதி செய்ய டாக்டர் பாலாஜி 5 லட்சம் லஞ்சம் .. மர்மங்கள் ஒவ்வொன்றாக ...

ஜெயலலிதாவின் கைரேகை அடையாளம் அரவ குறிச்சி இடைதேர்தல் வேட்பாளர் நியமனத்தில் இடப்பட்டது . அதை அரச வைத்தியர் ஒரு உறுதி செய்யவேண்டும் . ஜெயலலிதா சுயநினைவோடுதான் தனது கைரேகையை பதிவு செய்தார் என்று உறுதி செய்வதற்கு  டாக்டர்  பாலாஜி ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சமாக  பெற்று கொண்டார் என்று தகவல் தற்போது அமைச்சர் விஜயபாஸ்கரின் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது . அப்போ ஜெயலலிதா சுயநினைவு அற்று இருந்தார் என்பது உறுதியாகிறது. 

தினகரன் தகுதி நீக்கம் உறுதி? தமிழிசை வலியுறுத்தல்..

தமிழிசை அதிமுக சின்னத்தை முடக்க வேண்டும் வலியுறுத்தியபோது. தேர்தலை ஆணையம் அதிமுக சின்னத்தை முடக்கியது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தினகரன் தகுதி நீக்கம் செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் சிக்கியதை அடுத்து தினகரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தி வருகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருந்தது. இதைத்தொடர்ந்து பணம் பட்டுவாடா செயத சிலர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.  கரகாட்டக்காரி வாக்கு பொய்க்காது

பவர் பாண்டி ராஜ்கிரண் : அன்னிக்கு அவர்கள் போட்ட விஷ விதை, இன்னிக்கு முளைத்து நிற்குது.

ராஜ்கிரண் அவ்வளவு எளிதில் பேச மாட்டார். ஆனால், `ஓகே' சொல்லி விட்டால், எதைப் பற்றி வேண்டு மானாலும் கேட்கலாம்.  சூஃபி கவிஞர் ரூமியின் `தாகம்கொண்ட மீனொன்று' புத்தகத்தை மடித்து வைத்துவிட்டு, வெள்ளந்திச் சிரிப்புடன் வரவேற்கிறார் ராஜ்கிரண். `இன்றைய தேதியில், தமிழ் சினிமாவில் ராஜ்கிரணிடம் கதை சொல்லி நடிக்கச் சம்மதிக்க வைப்பதுதான் ரொம்பச் சிரமம்' என்கிறார்களே? ``நான் சினிமாவுக்கு வரணும்னு விரும்பி வரலை. படிச்சு, பெரிய போலீஸ் அதிகாரியா வரணும்னு ஆசை. ஆனா, ஏழ்மையான குடும்பம். படிக்கவைக்க வசதி இல்லே. எப்படியோ இந்தத் தொழிலுக்குள் வந்துட்டேன். திரைப்படம்கிறது சக்திவாய்ந்த ஊடகம். இறைவனின் அனுமதி இல்லாமல் ஒரு அணுகூட அசையாது என்ற நம்பிக்கையுடைய இஸ்லாமியன் நான். இந்தத் துறையில் இறைவன் என்னை வைத்திருக்கிறான்னு சொன்னா, அதற்குத் தகுதியா நான் நடந்துக்கணும். என் தொழில் மூலமா குறைந்தபட்சம் ஏதாவது, ஒரு நல்லதையாவது சொல்லணும்னு ஆசைப் படுறேன். அதற்குரிய கதைகள் வந்தால் ஒப்புக் கொள்கிறேன்.
இந்தத் தகுதி இருப்பதாக நான் நம்பும் எந்தப் படத்திலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன்.''

ஆர் கே நகர் .. வெல்லப்போவது பணம்? அல்லது மக்கள்? விகடன்

ப.திருமாவேலன், படங்கள்: ஸ்ரீனிவாசுலு`தி.மு.க கோட்டையில் விழுந்த முதல் ஓட்டை’ என ஆர்.கே.நகர் தொகுதியைச் சொல்வார்கள். எம்.ஜி.ஆர்., ஆட்சியைக் கைப்பற்றியபோது சென்னைத் தொகுதிகளில் இங்கு மட்டும்தான் அ.தி.மு.க வென்றது. ஐசரிவேலன் எம்.எல்.ஏ ஆனார். இங்குதான் இப்போது ஓட்டுவேட்டை நடக்கிறது. டி.டி.வி.தினகரன் கோட்டைக்குள் செல்ல, ஓட்டைப் போட்டுத் தரப்போகிறார்களா ஆர்.கே.நகர்வாசிகள் என்பதற்கான போட்டியே இந்தத் தேர்தல். லயன்ஸ் கிளப் தேர்தல்கூட மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் நடக்கும். ஆர்.கே நகருக்கு மூன்று ஆண்டுகளில் மூன்றாவது முறையாக நடக்கிறது. `இது நீங்கள் விரும்பாத தேர்தல்’ என, வெற்றிவேலைப் பதவி விலகவைத்துவிட்டு நின்றபோது ஜெயலலிதா சொன்னார். விரும்பாத தேர்தலை வரவைத்ததே அவர்தான். `ஸ்ரீரங்கம் என் சொந்த ஊர்’ என்று நின்று வென்றவர், நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றதால், பதவி விலகினார். குமாரசாமி தீர்ப்பால் விடுதலை ஆனபோது உடலாலும் மனதாலும் சோர்ந்துபோயிருந்தார். ஸ்ரீரங்கம் சென்று வாக்கு கேட்பதைவிட சென்னைக்குள் தொகுதி இருந்தால், அதுவும் கோட்டைக்குப் பக்கத்தில் தொகுதி இருந்தால் நல்லது எனத் தேர்ந்தெடுத்த தொகுதிதான் ஆர்.கே.நகர். ஆனால், எந்த நல்லதும் செய்துவிடவில்லை.

காற்று வெளியிடை உப்புமா? மணிரத்னம்தான் தயாரிப்பாளர் என்பது ஆறுதல்!


தேச பக்தி, போர் விமானங்கள், ராணுவ முகாம்கள், ராவல்பிண்டி சிறை, காஷ்மீர் மருத்துவமனைகள் ஆகியவைகளுடன் ஒரு லூசுத்தனமான காதலையும் சேர்த்து கிண்டப்பட்ட காஸ்ட்லியான உப்புமா தான் காற்று வெளியிடை. உப்புமாவில் கதை, லாஜிக் எனும் உப்பும், எண்ணையும் மிச்சிங். ஒரே படத்தை வேறு வேறு நடிகரக்ளை வைத்து எடுத்து பார்வையாளர்களின் மணி பர்சுக்கு உலை வைக்கிறார் மணி ரத்தினம். புதிய காமிராமேன் என்பதால் புதிய புதிய லோக்கேசன்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள் ஆனால் நாம் என்ன காஷ்மீர் பள்ளத்தாக்குகள், ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியை பார்க்கவா திரையரங்கிற்கு சென்றோம். நாம் பார்க்க சென்றது சினிமா அது மிச்சிங். இந்த நிலக்காட்சிகளை நேசனல் ஜியோகிராபி சேனலில் இதை விட துள்ளியமாக பார்க்கலாமே.

கொல்லாமையை வலியுறுத்திய ஒரே ஒரு மத ஸ்தாபகர் மகாவீரர்! ஸ்டாலின் வாழ்த்து!

மகாவீரர் ஜெயந்தி: ஸ்டாலின் வாழ்த்து!ஜைன துறவி மகாவீரர் பிறந்த தினத்தை  இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருக்கும் ஜைனர்கள் இன்று கொண்டாடுகின்றனர். இதையொட்டி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஃபேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது வாழ்த்து செய்தியில், “ஜைன சமயக் கோட்பாடுகளில் மனித நேயத்துக்கு மாபெரும் முக்கியத்துவம் கொடுத்து சீர்திருத்தங்களை மேற்கொண்ட வர்த்தமான மகாவீரர் பிறந்த நாள் தமிழகத்தில் ஜைன சமய மக்களால் மிகவும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்படுகிறது.

சிரியாவில் மீண்டும் அமெரிக்க விமான தாக்குதல்!

சிரியாவில் மீண்டும் விமான  தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பதோடு, லட்சக்கணக்கான மக்கள் சிரியாவைவிட்டு ஐரோப்பிய நாடுகளில் அகதிகளாக குடியேறுகின்றனர். இந்நிலையில், சிரியாவில் அரசுக்கு எதிராகச் செயல்படும் கிளர்ச்சியாளர்கள் மற்றும் தீவிரவாதிகளைக் குறிவைத்து அரசுக்கு ஆதரவான விமானப்படையின் போர் விமானங்கள் ஏப்ரல் 4ஆம் தேதி ரசாயன ஆயுதங்களை வீசி தாக்குதல் நடத்தியது.
இதில் குழந்தைகள், பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலில் அப்தெல் ஹமீது அல்யூசுப் என்பவர் தனது மனைவி, இரு இரட்டைக் குழந்தைகள், இரு சகோதரர்கள், நெருங்கிய உறவினர்கள் என ஒட்டுமொத்த குடும்பத்தையே இழந்துவிட்டார்.

டெல்லியில் 23 விவசாயிகள் சாகும்வரை உண்ணாவிரதம்!

சாகும் வரை உண்ணாவிரதம்: டெல்லியில் 23 விவசாயிகள்!
மின்னம்பலம் :பல நூதன வழிகளில் தொடர்ந்து டெல்லியில் போராடி வரும் தமிழக விவசாயிகளில் 23 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளார்கள். வறட்சி நிவாரணம், விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14ஆம் தேதி முதல் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் சந்தித்தும், இதுவரை இவர்களது பிரச்னை தீர்ந்தபாடில்லை. இதனால் இவர்கள் தங்களது போராட்டத்தை நாளுக்கு நாள் தீவிரபடுத்தி வருகின்றனர்.

அண்ணாசாலையில் திடீர் பள்ளம் - பேருந்து ,கார் கவிழ்ந்து விபத்து

சென்னை அண்ணாசாலையில் ஜெமினி மேம்பாலம் அருகே அண்ணாசதுக்கத்திலிருந்து வடபழனி நோக்கி சென்ற 25ஜி பேருந்து, சாலையில் திடீரென தோன்றிய பெரிய பள்ளத்திற்குள் சென்றது. பேருந்தின் பாதி அளவு பள்ளத்திற்குள் சென்றது. பேருந்துடன் கார் ஒன்றும் பள்ளத்திற்குள் சென்றது. இதனால் பயணிகள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு வெளியேறினர். இந்த சம்பவத்தில் டிரைவர் உள்பட 10க்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. காரில் வந்தவர் சென்னை மேற்கு முகப்பேரை சேர்ந்த மருத்துவர் பிரதீப் என்பது தெரியவந்துள்ளது. மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நடைப்பெற்று வருவதால் சாலையில் இந்த திடீர்ப்பள்ளம் ஏற்பட்டுள்ளது.

United States of South India: Can a southern collective get us a better deal from Delhi?

The politics of the South has made it economically comparable to Hong Kong, while the atavistic politics of the North has dropped it far down the scales.×
Isn’t it time the South received it's due?
After all, 20% of the population contributes a full 30% of India's tax revenues. This is the money that runs the country.
The South also delivers a fourth of India's GDP.  It is not only an economic bellwether with low unemployment, a high rate of industrialisation and a per capita GDP that is over double that of the Hindi belt, it is also leaps ahead on human development and social indicators.
Child development indices are double to 7 times higher than the Hindi states, literacy rates tend towards an average of 80% with a 10-point difference against the North, and accessibility to health and hygiene facilities is radically better.
The gulf in human development is so stark that while fertility rates in the South are closer to that of Western Europe, much of the North is still getting their act together on basic issues like birthing babies without losing mothers.

முருகதாஸ் : தேசிய விருதுகள் பெரும் பாரபட்சம் ... ஹிந்தி சினிமாதான் இந்திய சினிமா?

சென்னை: இந்த ஆண்டு தேசிய விருது வழங்குவதில் பெரும் பாரபட்சம் பார்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 64-வது திரைப்பட தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படமாக 'ஜோக்கர்' தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த பாடலாசிரியருக்கான விருது கவிஞர் வைரமுத்துவுக்கு ஏழாவது முறையாக அறிவிக்கப்பட்டது. சூர்யா நடித்த '24' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவுக்காகவும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.

இந்தியா வங்காளதேசம் ரயில் பயணம் ஆரம்பம்

இந்தியா - வங்காளதேசம் இடையே ரயில் பயணம்!
வங்காளதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா நான்கு நாள் அரசு முறைப் பயணமாக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் தனது குழுவினருடன் பிரதமர் மோடியைச் சந்தித்து இரு நாட்டு உறவுகள் மற்றும் சர்வதேசப் பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்குமிடையே 22 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதற்கிடையே, இந்திய - வங்காளதேச உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் இரு நாடுகளுக்குமிடையே பயணிகள் ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வங்காளதேசத்தின் குல்னா நகருக்கும், மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகருக்கும் இடையே இயக்கப்பட உள்ள இந்த ரயில் சனிக்கிழமை (நேற்று) விடப்பட்டது. பெத்ராபோல் எல்லை வரை ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் கருப்பு இல்லையாம் .. திமுகவின் டி கே எஸ் இளங்கோவன் பெருமை ... இதுக்கு RSS காரனே மேல்?

டி கே எஸ் இளங்கோவனின் பேச்சு தருண் விஜய் பேச்சை விட  அபத்தமானது. 
. இளங்கோவனுக்கு கறுப்பு என்று நிறபேதம் காட்டுவது நிறவெறி என்பது விளங்கவில்லை . நம்ம ஆள் கருப்பு இல்லை கொஞ்சம் வெளுப்பு  என்று அடிமைகளுக்கே உரிய அற்ப பெருமை கொள்கிறாரா? சுயமரியாதை  பற்றி  ஒரு திராவிட முன்னேற்ற கழக  தலைவருக்கே விளங்கவில்லை என்பது எவ்வளவு பெரிய வீழ்ச்சி?
சென்னை: ஜெயலலிதா கறுப்பு நிறம் கிடையாது... திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன்.
கென்ய நாட்டை சேர்ந்த இளைஞர் இந்தியாவில் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து அளித்த பேட்டியொன்றில், இந்தியர்கள் நிறவெறி கொண்டவர்கள் கிடையாது. இத்தாக்குதல் அதற்காக நடந்திருக்காது என தருண் விஜய் விளக்கம் அளித்தார். அப்போது இந்தியாவில் பல்வேறு நிறம் கொண்ட மக்கள் வாழ்கிறோம். தென் இந்தியாவில் கறுப்பு நிறம் அதிகம். அதற்காக நாங்கள் விரோதம் பாராட்டவில்லையே என்றும் அவர் கூறினார்.

சேனல்களின் பார்பன அக்கிரமம் ... மீண்டும் மீண்டும் பொய்களையே பரப்புதல்

தோழர் நந்தன் ஸ்ரீதரன் : இந்த சேனல் ஹிந்துத்துவாக்களின் அக்கிரமம் எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது.
எதேச்சையாக ஹிஸ்டரி சேனல் போட்டேன் அதில் ஹெரிடேஜ் இந்தியா என்ற இந்தியா முழுமைக்குமான குவிஸ் போட்டி போய்க்கொண்டிருக்கிறது. 1900 பள்ளிகளிலிருந்து மாணவர்கள் வந்திருக்கிறார்கள்..
நமது கவலை அதல்ல.. அதில் குவிஸ் நடத்துபவர் ஒரு கேள்வி கேட்கிறார்: ஹிந்தியை இந்தியாவின் அஃபிஷியல் லாங்குவேஜாக மாற்றுவதற்கு போராடி விருதுகள் பெற்றவர் யார் என்று கேட்கிறார்.. மாணவர்களும் பதில் சொல்கிறார்கள்..
இதில் உள்ள பார்ப்பன அக்கிரமம்தான் நாம் கவனிக்க வேண்டியது. உண்மையில் இந்தியாவின் அலுவல் மொழி ஹிந்தி அல்ல என்று உச்சநீதிமன்றம் தெள்ளத் தெளிவாக சொல்லிவிட்டது. ஆனாலும் இந்த சங்கிகள் இந்த மாதிரியான கேள்விகளின் மூலம் பிஞ்சு மனங்களில் நஞ்சை விதைக்கிறார்கள். கேள்வியைப் பார்ப்பவர்களுக்கு மனதில் இந்தியாவின் அலுவல் மொழி ஹிந்தி என்றும் அதற்காக போராடியவர் என்று அந்த மனிதரின் பெயரும் மனதில் பதியும்..
உண்மையில் அவர் ஹிந்தி அலுவல் மொழியாவதற்கு போராடி இருககலாம். அதற்காக விருது பெற்றிருக்கலாம். ஆனால் ஹிந்தி அலுவல் மொழியாகவில்லை என்று எத்தனை பேருக்கு தெரியும். இப்படியாக நைசாக பிஞ்சு மனஞ்களில் மொழி வெறியை திணிக்கும் வேலையைத்தான் இந்த மாதிரி ஹெரிட்டேஜ் குவிஸ்கள் செய்து கொண்டிருக்கின்றன..
இதை யார்தான் தடுப்பது..  முகநூல் பதிவு