செவ்வாய், 2 ஜூலை, 2013

Mumbai 4 லாரிகளில் ரூ.250 கோடி பறிமுதல் ! 2,50 crore seized from four trucks திரைப்படங்களில் வருவதை விட மகா ஊழல்

Mumbai: The Income Tax Department and National Investigation Agency personnel on Monday night seized cash worth Rs 250 crore and gold from four trucks here and detained 47 people.
The joint operation by more than 100 officers was carried out at around 9 pm, when the four trucks reached outside the Mumbai Central station to unload the suitcases.
Those detained with around 150 suitcases of cash are being grilled. Gold and jewellery have also been seized, added reports.

The NIA sleuths got information about the transfer of cash and gold from the biggest unofficial market of Angadias, carriers of cash and gems. 
மும்பையில் 4 லாரிகளில் இருந்து ரூ.250 ரொக்கத்தை வருமானவரித் துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் பறிமுதல் செய்தனர். மும்பை மத்திய ரயில் நிலையத்திற்கு வெளியே 4 லாரிகளில் இருந்து ரூ.2,500 கோடி ரொக்கத்தை வருமானவரித்துறையினர் மற்றும் தேசிய புலனாய்வு அமைப்பினர் நேற்று இரவு பறிமுதல் செய்தனர். மொத்தம் 150 சூட்கேஸ்களில் பணம் இருந்தது. ரொக்கம் தவிர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த பணம் மற்றும் நகைகள் குஜராத் ரயிலில் பெயர் தெரியாத இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருந்தன. இந்த சம்பவம் குறித்து இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு மும்பை பால்லர்ட் எஸ்டேட்டில் உள்ள சிந்தியா ஹவுஸ் கட்டிடத்தில் வைத்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் எண்ணப்பட்டது. சிந்தியா ஹவுஸில் பல்வேறு மத்திய அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
tamil.oneindia.i

யாமி கோபம் ! சொந்த கதையில் பூர்ணா நடிப்பதா ?

சென்னை:பூர்ணா நடித்த வேடத்தை ஏற்க மறுத்தார் யாமி. ராதா மோகன்
இயக்கிய ‘கவுரவம்‘ படத்தில் அறிமுகமானவர் யாமி கவுதம். பல்வேறு இந்தி, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தபோது பேய் பற்றிய திகில் அனுபவத்தை எதிர்கொண்டு பயந்ததாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவத்தை மையமாக கொண்டு ‘அவ்னு என்ற பெயரில் தெலுங்கு படத்தை இயக்கினார் ரவிபாபு. பூர்ணா நடித்திருந்தார். இப்படம் ஹிட்டானது. இதை இந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்த இயக்குனர் யாமி கவுதம் நடித்தால் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்தார். அவரிடம் கால்ஷீட் கேட்டபோது நடிக்க மறுத்துவிட்டார். இதுபற்றி இயக்குனர் கூறும்போது, ‘இந்த கதாபாத்திரத்தில் நடிக்க யாமிக்கு விருப்பம் இல்லை. எனவே அவரை வற்புறுத்தவில்லை. இது எந்தவிதத்திலும் கதையை பாதிக்காது. இந்த வேடத்துக்கு மற்றொரு ஹீரோயினை எளிதாக என்னால் தேர்வு செய்ய முடியும் என்றார். யாமியின் சொந்த அனுபவ கதையான இதில் பூர்ணா நடித்தது அவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டதாலேயே இந்தியில் அவர் நடிக்க மறுத்ததாக கூறப்படுகிறது. tamilmurasu.org

பாமகவிடம் கலவர சேதம் அறவிட விசாரணை ஆரம்பம் !

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில், வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா நடைபெற்றது.
இதையொட்டி, மரக்காணம் பகுதி வழியாக வாகனங்களில் வந்த பா.ம.க., வன்னியர் சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கும், மரக்காணம் காலனியைச் சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், உயிரிழப்பும், ஆங்காங்கே பல்வேறு இடங்களில் பஸ்கள், டாஸ்மாக் கடைகள் உள்ளிட்ட பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தப்பட்டது. இதையடுத்து டாக்டர் ராமதாஸ் உள்பட பா.ம.க. தலைவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வட மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. இதில், அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான நூற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் கல்வீச்சில் சேதம் அடைந்ததாக கூறப்பட்டது. 10 பஸ்கள், 2 வேன்கள், 35 மரங்கள் தீயிட்டுக்கொளுத்தப்பட்டன. 150-க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டன.

பெண்களில் 40 சதவீதத்தினர் கணவரால் கொல்லப்படுகின்றனர் ! W.H.O அதிர்ச்சி தகவல்

லண்டன்:உலகம் முழுவதும் குடும்பத்தினரின் வன்முறைக்கு ஆளாகும் பெண்களில் 3 ல் ஒருவர் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனம்
அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உலக சுகாதார நிறுவன இயக்குனர் மார்கரெட் சான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:உலகம் முழுவதும் வன்முறைக்கு இலக்காகும் பெண்களில் 40 சதவீதம் பேர் தங்களது கணவன்களால் கொல்லப்படுகின்றனர். வெளி நபர்களை விட அதிகமாக தங்களது கணவன்களால் 7 சதவீதம் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுகின்றனர். 1983 முதல் 2010 வரை நடத்தப்பட்ட ஆய்வில் 30 சதவீதம் பெண்கள் குடும்பங்களுக்குள் நடைபெறும் வன்முறை மற்றும் பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் காரணமாக உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாடுகளில் 37 சதவீதம் பெண்களும், தென் அமெரிக்க நாடுகளில் 30 சதவீதம் பேரும், ஐரோப்பா, ஆசிய நாடுகளில் 25 சதவீதம் பெண்களும் இது போல் குடும்ப வன்முறைகளுக்கு இலக்காகின்றனர். இவற்றில் 86 நாடுகளில் ஆய்வு நடத்தியதில் 15 வயதிற்கும் குறைவான சிறுமிகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்தியா போன்ற நாடுகளில் வரதட்சணை, காதல் போன்ற காரணங்களால் பெண்கள் கௌரவ கொலைக்கும் ஆளாகின்றனர்.

திவ்யா: தாயாருடன் செல்கிறேன் தாயார் சம்மதித்தால் கணவருடன் வாழ விரும்புகிறேன்

சென்னை: தர்மபுரி மாவட்டத்தில் மூன்று கிராமங்களில் தலித் மக்கள் பெரும் தாக்குதலுக்குள்ளாக வித்திட்ட காதல் திருமணம் புரிந்து கொண்ட திவ்யா, தனது தாயாருடனேயே இருக்க விரும்புவதாகவும், அதேசமயம், தனது தாயார் அனுமதித்தால், தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். கடந்த முறை உயர்நீதிமன்றம் வந்தபோது பெரும் நெருக்குதலுக்குள்ளாக்கப்பட்டார் திவ்யா என்ற பரபரப்பு பேச்சு அடிபட்டது. அதை உறுதிப்படுத்துவது போல, தான் தனது கணவருடன் செல்ல விரும்புவதாக மட்டும் கூறி விட்டு கண்ணீர் மல்க தனது தாயாருடன் கிளம்பிப் போனார் திவ்யா. ஆனால் நேற்று வழக்கு விசாரணையின்போது தனது தாயார் விரும்பினால், அனுமதித்தால் தனது காதல் கணவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

திங்கள், 1 ஜூலை, 2013

இலங்கை அகதி பெண்ணை Q branch போலிஸ் 9 மாதமாக பாலியல் பலாத்காரம்

 மகளை பார்க்க சென்ற என்னை க்யூ பிரிவு பிரபாகரன் கன்னத்தில் அறைந்தார். இப்படியாக 9 மாதங்களாக என் மகளை சிவஈஸ்வரி வீட்டில் வைத்து பிரபாகரன் பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார்
திருச்சியில் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த இளம் பெண்ணை 9 மாதமாக வீட்டில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக க்யூ பிரிவு பொலிஸ் மீது தமிழக பொலிஸ்மா அதிபரிடம் புகார் அளிக்கப்பட்டுளளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி கொட்டப்பட்டு பகுதியில் இலங்கை அகதிகள் முகாமில் உள்ள 530 வீடுகளில் 1,470 இலங்கை அகதிகள் வசித்து வருகின்றனர். இலங்கை அகதிகள் முகாம் என்பதால் இதன் கண்காணிப்பை க்யூ பிரிவு பொலிசார் மேற்கொண்டுள்ளனர். இந்த பணியில் க்யூ பொலிஸ் பிரிவு பிரபாகரன் ஈடுபட்டு வந்தார். இந்த முகாமில் விஜயகுமார் மற்றும் அவரது மகள் ராதிகா (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). ஆகியோர் வசித்து வருகிறார்கள். இந்த விஜயகுமார் தமிழக டிஜிபியிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அவர் மனுவில் கூறியிருப்பதாவது, என் மனைவி இறந்ததையடுத்து வயதுக்கு வந்த மகளை பார்த்துக் கொள்வதில் மிகவும் சிரமமாக இருந்ததால் இலங்கையில் உள்ள உறவினரின் வீட்டுக்கு என் மகள் ராதிகாவை அனுப்பி வைக்க முடிவு செய்தேன்.

கலைஞர் : திருநங்கைகளுக்கு அவமானம் இளைக்கும் மத்திய மாநில அரசுகள்


மூன்றாவது பாலினத்வராகிய
திருநங்கையினரை 9 என்ற எண் குறியிட்டு அவமானப்படுத்த வேண்டாம் என்று திமுக தலைவர் கலைஞர்
கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்தியா முழுவதும் ஆறாவது பொரு ளாதார கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன. கணக்கெடுப்பில் ஈடுபடும் ஊழியர்கள், சம்பந்தப்பட்ட குடும்பத் தலைவரின் பெயர், தொழில், இருப் பிடம் போன்ற எல்லா விவரங்களையும் அதற்கான விண்ணப்பத்தில் பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் அந்தப் படிவத்தில் திருநங்கையர்களுக்கு 9 என்ற குறியீட்டு எண் தற்போது வழங்கப்பட் டுள்ளதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இந்தப் பிரச்சினை கடந்த சில ஆண்டு காலமாக திருநங்கையர்களுக்கு இருந்து வருகிறது. திமு கழக ஆட்சியிலே இதே பிரச்சினை எழுப்பப்பட்டபோது, திருநங் கையர்கள் மூன்றாவது பாலினம் என்பதைக் குறிப்பிடும் வகையில் அந்தப் படிவத்தில் ஆண்/பெண் என்பதற்கு எவ்வாறு M/F (Male/Female) என்று அச் சிடப்பட்டிருப்பதைப் போல, திருநங்கை யர்களைக் குறிக்கும் வகையில் T (Transgender) என்ற எழுத்து குறிப்பிடப் பட்டது.
முதல் முதலில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதுபற்றி அப்போதே 16.3.2008 தேதியில் டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ், “Third Sex gets its due in T.N. - Karuna Govt. is Country’s First to issue Ration cards with “T” as Gender”  என்ற தலைப்பில் பெரிதாக எழுதியிருந்தது.

திமுக அணியில் தேமுதிகவை இணைக்க காங்கிரஸ் மும்முரம்? விஜயகாந்த் தனித்து போட்டியிட தயக்கம் ?

சென்னை: லோக்சபா தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை உறுதிப்படுத்தியிருக்கும் காங்கிரஸ், தேமுதிகவையும் இதே அணியில் இணைத்துவிட மும்முரம் காட்டுவதாக தெரிகிறது. ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸின் ஆதரவை திமுகவும் தேமுதிகவும் கோரியிருந்தன. ஒருவழியாக காங்கிரஸ் மேலிடம் திமுகவை ஆதரிப்பதாக அறிவித்தது. இதன் மூலம் லோக்சபா தேர்தலில் திமுகவுடனான கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்து கொண்டிருக்கிறது. இருப்பினும் கைவிட்ட தேமுதிகவை சமாதானப்படுத்தும் நடவடிக்கைகளையும் காங்கிரஸ் மேலிடம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் உங்களை நம்பித்தானே களத்தில் இறங்கினோம்..காலைவாரிவிட்டீர்களே? என்ற கோபத்தில் இருக்கிறாராம் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதற்கு பதிலாக லோக்சபா தேர்தலில் திமுகவுடன் இணைந்து களம் இறங்குவோம் என்று காங்கிரஸ் தரப்பில் சொல்லப்பட்டு வருகிறதாம். சென்னைக்கு வருகை தந்திருந்த காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடமும் காங்கிரசார் இதே கருத்தை வலியுறுத்தி இருக்கின்றனர். அப்போது செய்தியாளர்கள் முகுல் வாஸ்னிக்கிடம், விஜயகாந்தை ஏமாற்றிவிட்டீர்களா என்று கேட்டதற்கு, அடிப்படை ஆதாரமற்ற கருத்து என்று கூறியதுடன் நடைமுறையில் அனைத்து சூழ்நிலைகளையும் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது என்றார்.

சுதந்திரப் போராட்டத்துக்கு துரோகம் இழைத்த இந்துத்துவ புனிதர் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி

சியாமா பிரசாத் முகர்ஜிபாரத மாதாவை பாசத்துடன் உச்சிமோரும் தேசபக்திக்கு ஒட்டு மொத்தமாக குத்தகை எடுத்தவர்கள் போல சங்க பரிவாரங்கள் காட்டிக் கொள்வதுண்டு. ஆனால் இது அப்பட்டமான வரலாற்று மோசடி என்பதற்கு ஆங்கிலேயர் காலம் முதல் வரலாற்றின் பக்கங்களில் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன. இன்றைக்கு அமெரிக்க கூஜாக்களாக இருக்கும் இந்துமதவெறியர்கள் 47-க்கு முன்னர் ஆங்கிலேயரது கூஜாக்களாக அடியாள் வேலை பார்த்து வந்தனர். இது தொடர்பாக ஏற்கனவே சில கட்டுரைகளை வினவில் வெளியிட்டிருக்கிறோம். சமீபத்திய அத்வானி – மோடி அதிகாரச் சண்டையின் போது வயிற்று வலியால் துடித்த பீஷ்ம பிதாமகர் அத்வானி புலம்பியது நினைவிருக்கிறதா? சியாம் பிரசாத் முகர்ஜி போன்ற தலைவர்கள் ஆரம்பித்து வைத்த பாஜக இன்று சுய மோக தலைவர்களால் சீர்குலைந்து வருகிறது என்று தனது வயிற்று வலிக்கு காரணம் சொன்னார் அத்வானி. ஆனால் அத்வானி கொண்டாடும் இந்த சியாம் பிரசாத் முகர்ஜி ஒரு அப்பட்டமான ஏகாதிபத்திய அடிமை என்பதை திரைகிழித்து காட்டுகிறது இந்தக் கட்டுரை. பொய்களாலும், மதவெறியாலும் வரலாற்றை மாற்ற நினைக்கும் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தின் யோக்கியதையை படியுங்கள், பகிருங்கள்!

World War Z – மற்றும் ஹாலிவுட்டின் அட்டக் கத்திகளும்

வே.மதிமாறன்
ஹாலிவுட் படங்கள் தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடைய வளர்ச்சியடையComputer Graphics (CG) வந்ததற்குப் பிறகு மிகப் பெருபான்மையான ஹாலிவுட் படங்கள் ‘விந்தை’ காட்டுகிற தன்மைக்கு மாறியிருக்கிறது. பார்வையாளனை முட்டாளாக கருதுகிற முறை அதிகமாகி இருக்கிறது.
அதோட நம்பகத்தன்மையை அது இழந்துக்கிட்டு வருது. குறிப்பாக
இன்றைய அதி நவீன தொழில்நுட்ப சினிமாவாக இருக்கிற ஹாலிவுட் படங்கள் எவ்வளவு பிரம்மாண்டமான காட்சிகளை CG யில் உருவாக்கினாலும், 1959 ஆம் ஆண்டு வெளிவந்த Ben Hur  படத்தில் வரும் chariot race சை வெல்ல முடியவில்லை. காரணம் அதன் நம்பகத் தன்மை. Ben Hur - பிரம்மாண்டத்தின் உன்னதம். மிகைப்படுத்தப்பட்ட சில சம்பவங்களோடு திரைக்கதை இருந்தாலும் அது காட்சியாக்கப்பட்ட விதம் அதன் கேமரா கோணங்கள் முழுக்க முழுக்க மனிதர்களாலே செய்யப்பட்டது. அதுதான் இயந்திரங்களால் வெல்ல முடியாத பிரம்மாண்ட அழகிற்கு காரணம்.
ஒரு கீ போர்டு எழுப்புகிற வயலின் ஓசைக்கும், ஒரு வயலின் மேதை வாசிக்கிற  இசைக்கும் வித்தியாசம் உண்டு. அந்த வித்தியாசம் உணர்வுகளை உருக்குகிற உன்னதம். Ben Hur வயலின் மேதையால் வாசிக்கப்பட்ட இசை.

ஒன்இந்தியா இணையதளத்துக்கு சிறந்த வெப் மீடியா விருது

பெங்களூர்: ஒன்இந்தியா இணையதளத்துக்கு ஆண்டின் சிறந்த வெப் மீடியா விருது கிடைத்துள்ளது. டெல்லியில் உள்ள மீடியா மற்றும் செயற்கைக் கோள் ஒளிபரப்புக்கான கவுன்சில் இந்த விருதினை வழங்கியுள்ளது. பல்வேறு பிரிவுகளில் ஆண்டுதோறும் இந்த கவுன்சில் விருதுகளை வழங்கி வருகிறது. அதில் சிறந்த வெப் மீடியாவுக்கான விருது ஒன்இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இந்திய மொழிகளில் அதிக அளவிலான செய்தித் தளங்களைக் கொண்டுள்ள ஒரே இணையதளம் ஒன்இந்தியாதான் என்பது நினைவிருக்கலாம். ஒன்இந்தியா போல பல்வேறு தரப்பினருக்கும் பெங்களூர் கன்ட்ரி கிளப்பில் நடந்த எழில்மிகு விழாவில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் ஆண்டின் சிறந்த பத்திரிக்கையாளர் விருது டிஎன்ஏவின் சுமன் சர்மா, ஹைவே சேனலின் ஆசிஷ் ஜெயின், டெய்னிக் பாஸ்கரின் ஹர்ஷ் பாண்டே ஆகியோருக்குக் கிடைத்தது.

துக்ளக்: உண்மையைச் சொல்வதில்லை! சொன்னால் துரோகி பட்டம் கிடைத்து விடுமோ என்று பயப்படுகிறார்கள்

‘இலங்கையில் துக்ளக்’ என்ற இந்தத் தொடர் நமது வாசகர்கள் மத்தியிலும், இன்டர்நெட்டிலும், பெருவாரியான மக்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது. ‘இது இலங்கைவாழ் தமிழருக்கு எதிரான தொடரில்லை’ என்பதை புரிந்து கொண்டு பலர் பாராட்டியுள்ளனர். ‘ஐ ஓப்பனர்’ என்கிற ரீதியில் இத்தொடர் பல பாராட்டுகளைப் பெற்றாலும், ஒரு சிலர் இந்தத் தொடரை விமர்சிக்கவும் செய்தனர். இலங்கைக்குச் சென்று வரும் முன் எனக்கு இருந்த யூகங்கள், கருத்துக்கள் அங்கு சென்று வந்த பிறகு மாறி விட்டன என்பதை ஏற்கெனவே இந்தக் கட்டுரைத் தொடரில் குறிப்பிட்டு விட்டேன். எனவே, இந்தப் பிரச்னையில் கருத்து மாறுபடுபவர்கள், முதலில் ஒருமுறை இலங்கை சென்று அங்குள்ள மக்களைச் சந்தித்து வரவேண்டும். அதை விட்டு விட்டு ‘இதுவரை வந்த செய்திகளெல்லாம் பொய்யா? சேனல்-4 வெளியிட்ட ஆவணப்படம் பொய்யா?’ என்ற கேள்விகளையே கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி கூறிக் கொண்டிருப்பது நியாயமில்லை. இலங்கைத் தமிழர் மேல் அவ்வளவு அக்கறை உள்ளவர்கள், ஒருமுறை போய் அங்குள்ள மக்களை சந்தித்து விட்டு வர வேண்டும். அதை விடுத்து இங்கேயே குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு ‘இது பொய். அதுதான் நிஜம்’ என்று குரல் எழுப்புவது என்ன நியாயமோ தெரியவில்லை.

பாரதிராஜா நன்றாக ஹோம் வொர்க் செய்து மீண்டும் வருவார் ! அன்னகொடி ஒரு சறுக்கல்

athishaonline.com
பாரதிராஜா இதுவரை வெவ்வேறு ஜானர்களில் படமெடுத்திருக்கிறார்.
ஆனால் இதுவரை அவர் ஒரு
முழூநீள காமெடி படமெடுக்கவில்லையே என்கிற ஏக்கம் எல்லோருக்குமே உண்டு. அவருடைய மகன் மனோஜ் அறிமுகமான தாஜ்மகால் அப்படிப்பட்ட முயற்சிகளில் ஒன்றென கருதலாம். அதில் காமெடி அந்த அளவுக்கு வொர்க் அவுட் ஆகவில்லை.
படுதோல்வியடைந்த படம். ஆனால் சமீபத்தில் திரைகண்டிருக்கிற அன்னக்கொடி இதுவரை தமிழில் வந்த சகல காமெடி படங்களின் சாதனைகளையும் ஒரே பாய்ச்சலில் டுபக்காய் டுபுக்காய் என்று தாண்டிவிடுகிறது. தியேட்டர்களில் முதல் காட்சியில் தொடங்கும் சிரிப்பலை ''அன்புடன் பாரதிராஜா'' என்கிற கட்டைகுரல்வந்து திரை இருளும் வரை நீளுகிறது. சமீபத்தில் வெளியான எந்த படமும் இந்த அளவுக்கு ரசிகர்களை சிரிக்கவைத்திருக்காது. சூதுகவ்வும், பீட்சா, நகொபகாணோம் முதலான இளம் இயக்குனர்களின் காமெடிகளை ஒருசிலகாட்சிகளில் அடித்து தொம்சம் பண்ணுகிறார் இயக்குனர் இமயம். யெஸ் ஹீ ஈஸ் பேக்!

புற்றீசலாய் கேரள நகைஅடகுக் கடைகள் – ஏன் ? மக்கள் வாழ்வு சூறையாடப்படுகிறது

முத்தூட்விளம்பரங்கள்பொதுத்துறை வங்கிகளிடம் 8 சதவீத வட்டிக்கு கடன் வங்கி மக்களுக்கு 25 சதவீத வட்டிக்கு கொடுப்பது தான் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியின் இரகசியம்.
து கல்லூரியில் சேரும் காலம். கல்லூரியில் விரும்பிய பிரிவு கிடைக்குமா, நண்பர்கள் சேரும் கல்லூரியில் சேர முடியுமா என்று மாணவர்கள் மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டு காத்திருக்கிறார்கள். பெற்றோர்களுக்கோ வேறு விதமான கவலைகள். மழைக்காலத்து ஈசல்கள் போல் பல்கிப் பெருகியிருக்கும் பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைத்தாலும் சரி, வேறு பாடப்பிரிவுகளுக்கு இடம் கிடைத்தாலும் சரி – கல்விக் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளன.
ஒட்டுண்ணி அடகு நிறுவனங்கள்.
அப்பாவி பெற்றோர்கள் பாடுபட்டு உழைத்துச் சம்பாதித்த சொத்து பத்துகளை விற்றாவது தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை உத்திரவாதப்படுத்திக் கொடுக்கும் கனவுகளோடும் அந்தக் கனவுகளுக்கும் எதார்த்தத்திற்குமான இடைவெளி ஏற்படுத்தும் நிராசைகளோடும் கல்லூரி வாசல்களை மொய்த்து நிற்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி, தங்கள் குழந்தைகளை புதிதாக பள்ளியில் சேர்க்கவிருக்கும் பெற்றோருக்கும், அடுத்த வகுப்புக்குத் தேர்வாகிக் காத்திருக்கும் மாணவர்களின் பெற்றோருக்கும் கூட இதே விதமான கவலைகள் தான்.
இந்த சமயத்தில் கடந்த வாரம் தினத்தந்தியில் வந்த விளம்பரம் ஒன்று நம்மை ஈர்த்தது – “அறிமுகம், ஸ்கூல் ரீ ஓப்பன் கோல்ட் லோன் மேளா” என்கிற பெயரில் முத்தூட் நகை அடகு நிறுவனம் கொடுத்த விளம்பரம் தான் அது.

Saudi 75 ஆயிரம் இந்தியர்கள் நாடு திரும்ப உள்ளனர்.

 இந்த நடவடிக்கையால் பாதிக்கப்போவது சவூதி கம்பனிக்களும்தான்.காரணம் அங்கு உடல்வருந்தி உழைப்பை கொடுப்பது நம்மவர்களே.இதை சவுதி உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.
துபாய்:சவுதி அரேபிய அரசின், புதிய தொழிலாளர் சட்டம் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றி வந்த, 75 ஆயிரம் இந்தியர்கள் வேலைவாய்ப்பை இழந்து, இன்னும் ஓரிரு நாட்களில் நாடு திரும்ப உள்ளனர். இவர்களை, பத்திரமாக இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான, அவசர ஏற்பாடுகளை
மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. சவுதி அரேபியாவிலும், வேலைவாய்ப்பின்மை பிரச்னை, தலை தூக்கியுள்ளது. இதனால், தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க, சவுதி அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, "நிதாகத்' என்ற புதிய சட்டத்தை, அமல்படுத்தியுள்ளது, இதன்படி, சவுதியில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனங்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த, 10 தொழிலாளர்கள் பணிக்கு அமர்த்தியிருந்தால், அங்கு, கண்டிப்பாக, உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரையும் வேலையில் சேர்க்க வேண்டும்.புதிய சட்ட விதிமுறைகளை அமல்படுத்தாத நிறுவனங்கள் மீது, அந்நாட்டு தொழில் துறை கடும் நடவடிக்கை எடுக்கும். இதனால், சவுதி அரேபியாவில் பணியாற்றும் வெளிநாட்டினர், வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அந்த ஏழு எம்.எல்.ஏ.,க்களுக்கு விஜயகாந்த் கடிதம்

கட்சி உத்தரவுக்கு மாறாக, மாற்று கட்சி வேட்பாளருக்கு ஓட்டளித்த காரணத்தை, வரும், 10ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும். உரிய விளக்கம் அனுப்ப தவறினால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,'' என, ஏழு தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,க்களுக்கு, அக்கட்சி தலைவர் விஜயகாந்த் கடிதம் எழுதியுள்ளார்.அவரது கடித விவரம்:
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் இளங்கோவனுக்கு ஓட்டளிக்க வேண்டும் என, கட்சியின் பொதுச் செயலர் ஆகிய நானும், கொறடாவும் கடந்த, 19 மற்றும் 20ம் தேதி கடிதம் எழுதியிருந்தோம்.ஆனால், நீங்கள் மாற்று கட்சிக்கு ஓட்டளித்ததாக அறிகிறேன். இதன்மூலம், கட்சியின் கட்டளையையும், கட்டுப்பாட்டையும் நீங்கள் மீறியுள்ளீர்கள். இதனால், கட்சியின் அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரில் இருந்தும், தற்காலிகமாக நீங்கள் நீக்கி வைக்கப்படுகின்றீர்கள். கட்சியின் உத்தரவுக்கு மாறாக, மாற்று கட்சி வேட்பாளருக்கு ஓட்டளித்த காரணத்தை, வரும், 10ம் தேதிக்குள் தெரியப்படுத்த வேண்டும். உரிய விளக்கம் அனுப்ப தவறினால், மேற்கூறிய குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கில்லை என, முடிவு செய்யப்பட்டு, அதற்குரிய நடவடிக்கைகளை, தங்கள் மீது எடுக்க கட்சி உரிமை பெற்றுள்ளது.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -

ஸ்டாலின்: காங்., - தி.மு.க., கூட்டணி இப்போதைக்கு இல்லை

மதுரை: ""தமிழகத்தில் காங்கிரஸ் உடனான கூட்டணி என்பது இப்போதைக்கு இல்லை,'' என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தெரிவித்தார்.மதுரையில், கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் நிதியளிப்பு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஸ்டாலின் பேசியதாவது:ராஜ்யசபா தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்றதை பலராலும் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. பொதுத்தேர்தலின் போது மக்களிடம் ஓட்டு கேட்பது போல் தான், ராஜ்யசபா தேர்தலிலும், காங்கிரஸ் உட்பட கட்சிகளிடம் ஆதரவு கேட்டோம். எங்கள் கூட்டணியில் வெற்றி பெற்ற கட்சி என்ற, உரிமையில் ஆதரவு கேட்டோம். அவ்வளது தான். இதனால், பொதுத் தேர்தல்களிலும், இக்கூட்டணி தொடரும் என்பது அர்த்தமில்லை. ராஜ்யசபா தேர்தலில், 23 எம்.எல்.ஏ.,க்களை மட்டும் வைத்து, வெற்றி பெற்றது கருணாநிதியின் ராஜதந்திரம்.

ஞாயிறு, 30 ஜூன், 2013

அமெரிக்காவின் புதிய பதில் உதவி சட்டமா அதிபராக யாழ்ப்பாணப் பெண் நியமனம் ! EPRLF கேதீஸ்வரனின் மருமகள்

அமெரிக்காவில் புதிதாக நியமிக்கப்பட்ட பதில் உதவி சட்டமா அதிபராக
யாழ்ப்பாணம் வடமராட்சியைச் சேர்ந்த மைதிலி ராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் உலக வங்கியின் அனைத்துலக நிதிக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றிய ஏ.தர்மரத்தினத்தின் மகளும், EPRLF இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான கேதீஸ்வரன் லோகநாதனின் ( இவர் புலிகளின் கொலைவெறிக்கு இரையானவர்) சகோதரியின் மகளும்  இலங்கை வங்கியின் முன்னாள் பொதுமுகாமையாளர் சி.லோகநாதனின் பேர்த்தியுமாவார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணம், வடமராட்சியை சேர்ந்தவர்களாவர். மைதிலி ராமன், அமெரிக்க நீதித்துறைத் திணைக்களத்தில் குற்றப்பிரிவு பதில் உதவி சட்டமா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் Yale பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதுடன், சிகாகோ பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்றவர். குற்றவியல் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மைதிலி ராமன், அமெரிக்கா முழுவதிலும் உள்ள சம்ஷ்டி குற்றவியல் வழக்குகளை கையாளும் சுமார் 600 அரச சட்டவாளர்களுக்குத் தலைமை தாங்கவுள்ளதுடன், குற்றவியல் சட்டங்களை மேம்படுத்துவதற்கும் உதவியாக இருப்பார்.

பூர்ணாவை படுக்க வைத்து முதுகில் மிதித்த ஹீரோ


அடுத்த அசின் என்று கோலிவுட் நடிகர்களால் புகழாரம் சூட்டப்பட்டவர் பூர்ணா. ஆனால் யாருடைய நம்பிக்கையும் பலிக்கவில்லை. இப்போதுவரை அவரது மார்க்கெட் தகிடதோம் போட்டுக்கொண்டிருக்கிறது. தமிழ்தான் சரியில்லை என்று ஆந்திராவுக்கு போனால் அங்கேயும் அவரது ராசி ஒர்க்அவுட் ஆகவில்லை. நடித்த படங்கள் எதுவும் ஓடாததால் சில படங்களோடு பூர்ணாவை அங்கிருந்து துரத்தியடித்து விட்டார்கள்.
அதனால் மறுபடியும் எந்த மொழி சினிமாவும் தமிழுக்கு ஈடாகாது என்று பேசிக்கொண்டு கோலிவுட் இயக்குனர்களின் காலை சுற்றிக்கொண்டு சான்ஸ் கேட்டு வருகிறார். அப்படி எடுத்த முயற்சியின் பயனாக, கரு.பழனியப்பன் இயக்கியுள்ள ஜன்னல் ஓரம் படம் பூர்ணாவுக்கு கிடைத்தது.

சமசீர்கல்வியில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி சதாசிவம் தலைமை நீதியரசர் நியமனம்

தலைமை நீதிபதியாக பி. சதாசிவம் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது: ராமதாஸ் அறிக்கை

 சமச்சீர் கல்வி வழக்கிலும், தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டண நிர்ணயம் தொடர்பான வழக்குகளிலும் இவர் அளித்த தீர்ப்புகள் பிரபலமானவை
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இந்திய உச்சநீதிமன்றத்தின் நாற்பதாவது தலைமை நீதிபதியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர்  திரு. பி. சதாசிவம் அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இந்திய தலைமை நீதிபதி பதவியை அலங்கரிக்கும் முதல் தமிழர் நீதியரசர் சதாசிவம் அவர்கள் தான் என்பது தமிழர்களாகிய நமக்கெல்லாம் பெருமை அளிக்கும் ஒன்றாகும். தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டம் பவானி வட்டத்தில் உள்ள கடப்பநல்லூர் கிராமத்தில் ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளிப்படிப்பை அரசு பள்ளிக்கூடத்தில் தமிழ் வழியில் படித்தார். இவரது குடும்பத்தில்  இவர் தான் முதல் பட்டதாரி; இவரது ஊரில் இவர் தான் முதல் வழக்கறிஞர். எந்த வசதியும் இல்லாத கிராமத்தில், எந்த பின்னணியும் இல்லாத குடும்பத்தில் பிறந்த நீதியரசர் சதாசிவம் அவர்கள் இந்திய நீதித்துறையின் மிக உயர்ந்த இடத்திற்கு முன்னேறியிருப்பது சமூக நீதிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி ஆகும்.

சரத்குமார்:விஜயகாந்த் முதல்வராக முடியாது ! தம்பி சரத்தால மட்டும்தான் அது முடியுமுங்கோ ?

சென்னையில் நடைபெறும் கட்சியின் முப்பெரும் விழாவில்  திரளான தொண்டர்கள் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் சரத்குமார் எம்எல்ஏ பேசியதாவது:தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். அவரால் முதல்வராக முடியாது. அவருக்கு அதற்கான ஆற்றலும், துணிவும் இல்லை.தமிழகத்தில் ஜெயலலிதா நல்லாட்சி நடத்தி வருகிறார். அவரது ஆட்சிக்கு நாம் உறுதுணையாக இருக்கிறோம். மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் தேர்தலைச் சந்திப்போம் என்றார்

ALSProduction அம்பிகாபதியை களவாடிய தனுஷின் அம்பிகாபதி

 அம்பிகாபதி பெயரை தனுஷ் படத்துக்கு பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து
சிவாஜி நடித்த அம்பிகாபதி படத்தை தயாரித்த ஏ.எல்.எஸ். பட நிறுவனம்
சார்பில் வக்கீல் பி.ஆனந்தன் நோட்டீஸ் அனுப்பினார். அதில், ‘‘அம்பிகாபதி படத் தலைப்பை ஏ.என்.பி. நிறுவனத்துக்குத்தான் விற்றோம். வட இந்திய நிறுவனமான ஈராஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்துக்கு விற்க வில்லை. எனவே அம்பிகாபதி தலைப்பை பயன்படுத்த கூடாது’’ என்று கூறப்பட்டு இருந்தது.
அந்த ALS நிறுவனம் கவிஞர் கண்ணதாசனின் தம்பியான AL ஸ்ரீநிவாசனுக்கு சொந்தமானது , கந்தன் கருணை திருடாதே போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களை தயாரித்த மாபெரும் நிறுவனம் ALS Production. மிகவும் தான்தோன்றி தனமாக அவர்களின் ஒரு மாபெரும் வெற்றி படத்தின் தலைப்பை களவாடிய தனுஷ் போன்றோர் தங்களது படங்களுக்கு திருட்டு CD பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது ?

வடிவேலுவின் கதாநாயகி பார்வதி ஓமனக்குட்டியை வெரட்டியது யார்

வடிவேலுவின்  தெனாலி படத்த ஒரு வழியா தொடங்குறதா பட
தயாரிப்புகாரங்க சொல்லிட்டாங்களாம்... . இதுக்கிடைல படத்துல ஹீரோயினா நடிக்க தல நடிகரோட ஜோடியா நடிச்ச பிலா 2 பார்வதி ஓமனக்குட்டியை  புக் பண்ணாங்களாம். முதல்ல ஓகே சொன்ன நடிகை இப்ப நழுவிட்டாராம். சில பேரு  அம்மணிய சந்திச்சி வைகைபுயல் வடிவேலுவோட  நடிச்சா பியூச்சர் இருக்காதுனு பயமுறுத்தனுதல நடிகை சொந்த ஊருக்கு பறந்துட்டாராம்.

குன்னூர் மாஜிஸ்திரேட் கைது! பெண் போலீஸ் மகேஸ்வரியுடன் உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்றிவிட்டாராம் ! விளங்கிடும் !

பள்ளிபாளையம்:திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி
ஏமாற்றி விட்டதாக பல்லடம் எஸ்ஐ கொடுத்த புகாரின் பேரில், குன்னூர்  மாஜிஸ்திரேட் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். பல்லடம் காவல் நிலையத்தில் எஸ்ஐ ஆக பணி புரிபவர் உமா மகேஸ்வரி. இவர் பல்லடம்  டிஎஸ்பி சுரேஷ்குமாரிடம் கடந்த வாரம் புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் நாகர்கோவிலில் எஸ்ஐ ஆக பணியாற்றிய போது எனக்கும் ஈரோடு மாவட்டம் பவானி அம்மாப்பேட்டையை சேர்ந்த வக்கீல் தங்கராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இதில் என்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி என்னிடம் பல  முறை உல்லாசமாக இருந்தார்.வக்கீலாக இருந்த தங்கராஜ், மாஜிஸ்திரேட்டாக பதவி உயர்வு பெற்று நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்தார். நானும் அவருக்காக நாகர்கோவிலில்  இருந்து பணியை மாற்றி கொண்டு இங்கு வந்து விட்டேன். இங்கு வந்த பிறகுதான் தங்கராஜ் எனக்கு தெரியாமலேயே வேறு ஒரு பெண்ணை  திருமணம் செய்து என்னை மோசம் செய்து விட்டார் என்பது தெரிந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உமா மகேஸ்வரி  தெரிவித்து இருந்தார்.

மோடி : வாக்களிப்பை அரசு கட்டாயமாக்கி உள்ளது ! அடுத்து RSS கொள்கைகளையும் கட்டாயமாக்குவீரோ ?

குஜராத் மாநிலம், காந்தி நகரில் நடைபெற்ற விழாவில் அம்மாநில முதல்
மந்திரி நரேந்திர மோடி பேசியதாவது:- எனது தலைமையிலான குஜராத் அரசு வாக்களிப்பதை கட்டாயமாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதியை வாக்காளர்கள் திரும்பப் பெறவும் முடியும். நல்லவர்களை அரசியலுக்கு கொண்டு வருவதற்கு இதைப்போன்ற தேர்தல் சீர்திருத்தங்கள் மிகவும் அவசியமானதாகும். தற்போதைய நிலையில், ஒரு வேட்பாளரின் தனிப்பட்ட தகுதியை கருத்தில் கொள்ளாமல் கட்சியை மட்டும் மனதில் வைத்து மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஆனால், அவர்களை திரும்பப்பெறும் உரிமையும் மக்களுக்கு அளிக்கப்பட்டால் எல்லா மக்கள் பிரதிநிதிகளையும் அவர்கள் வெளியேற்றி விடுவார்கள். இதற்கு பயந்தாவது, அரசியல் கட்சிகள் நல்ல வேட்பாளர்களுக்கு சீட் வழங்கும் நிலைக்கு தள்ளப்படும். இதன் மூலம் நல்லவர்கள் அரசியலுக்கு வருவார்கள். இந்திய ஜனநாயகம் மேலும் முன்னேறும் என்ற நோக்கத்தில் இந்த புதிய சட்டத்தை எனது அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக குஜராத் கவர்னர் இந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார்.