திங்கள், 6 ஜூன், 2011

யாரையாவது குற்றவாளியாக காட்டவேண்டிய நிர்பந்தம் சி பி ஐ க்கு கனிமொழியை,கலைஞர்

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம்
கலைஞர் உருக்கமான பேச்சு
திருவாரூரில் இன்று (5.6,2011) (வாக்காளர்களுக்கு நன்றி அறிவிக்கும்  கூட்டத்தில் கலைஞர் கலந்துகொண்டு பேசினார்.
அவர்
’என் மகள் கனிமொழி இன்று மத்திய அரசின் உத்தரவினாலோ, அலட்சியத்தாலோ அல்லது வேறு எந்த காரணத்தாலோ சிறையில் இருக்கிறார்.

வழக்கு நடந்துகொண்டிருப்பதால் நான் வழக்கின் ஆழத்திற்கு செல்லவில்லை.
கனிமொழி செய்த ஒரு தவறு கலைஞர் டிவியில் ஒரு பங்குதாரராக இருந்ததுதான். பங்குதாரரை அந்த நிறுவனத்திலே ஏற்பட்ட, ஒரு கோளாறுக்காக பங்குதாரரை பாதிக்கின்ற செயலில் ஈடுபடமுடியுமா என்ற வாதத்தை நம்முடையை மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்தில் எடுத்துக்கேட்டார். அதற்கு இன்னும் பதில் வரவில்லை.

இருந்தாலும் கனிமொழி சிறையிலே இப்பொழுது வாடிக்கொண்டிருக்கிறார்.திகார் சிறைச்சாலை எப்படிப்பட்டது என்பதை சொல்கிறேன்.; ஒரு மலரை வைத்தால் பத்து நிமிடங்களில் வாடிவிடக்கூடிய அளவுக்கு கொடுமையான வெயில்
அப்படிப்பட்ட இடத்தில்தான் இருக்கிறார் என் மகள் கனிமொழி. நானும் எனது மூத்த மகள் கனிமொழியும் ஆறுதல் கூறும்பொழுது, அக்கா நீங்கள் அப்பாவைப் பார்த்துக்கொள்ளுங்கள். நான் வழக்கை சந்திக்கிறேன். இதற்கெல்லாம் கவலைப்படமாட்டேன்.

இவையெல்லாம் எதிர்கொள்கின்ற சக்தியைத்தான் திராவிட முன்னேற்றக்கழகம் நமக்கு வழங்கியிருக்கின்றது என்பதை மறந்துவிடாதீர்கள் என்று கனிமொழி என்ற பெண்மணி சொல்லுகின்ற அளவுக்கு நாம் சக்தியைப்பெற்றிருக்கின்றோம்.
ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி நஷ்டம் என்று முதலில் அறிவிக்கப்பட்டு, அதன்பிறகு சுறுங்கி 30 ஆயிரம் கோடி என்று வந்து இப்போது யார் குற்றவாளி என்று கேள்வி எழுந்து,யாரையாவது ஒருவரை குற்றவாளியாக அடையாளம் காட்டவேண்டும் என்று கனிமொழியை அடையாளம் காட்டியிருக்கிறது சிபிஐ.

கனிமொழி செய்த குற்றம் நான் செய்த குற்றம். கலைஞர் டிவியில் பங்குதாரராக இருக்க வேண்டும் என்று கனிமொழியை கேட்டேன். அதற்கு கனிமொழி வேண்டாம் என்று மறுத்தபோது,  எதிர்காலத்தில் கனிமொழிக்கும் ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்பதற்கா பிடிவாதமாக பங்குதாரராக்கினேன்.
அதன் விளைவு, அந்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட கேடு கனிமொழையையும் துன்புறுத்துகின்ற அளவிற்கு வந்திருக்கின்றது.

இதை எண்ணிப்பார்த்து கனிமொழிக்கு வந்த ஆபத்தை தவிர்ப்பார்ப்பார்கள் என்று நான் நம்புகின்றேன்.
இங்கே கூடியிருக்கின்ற உங்களிடம் என் வேதனையை பகிர்ந்துகொண்டேன்’’
யாரையாவது குற்றவாளியாக காட்டவேண்டிய நிர்பந்தம் சி பி ஐ க்கு கனிமொழியை 

மத்திய திட்டக்குழு:திமுக ஆட்சியின் செயற்பாடுகள் திறமையாகவே இருந்தது

 5 ஆண்டுகளி்ல் தமிழகத்தின் செயல்பாடு சிறப்பாகவே இருந்தது-மான்டேக் சிங்

சென்னை: இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த 5 ஆண்டுகளி்ல் தமிழகத்தின் பொருளாதார செயல்பாடு, பிற மாநிலங்களை விட சிறப்பாகவே இருந்தது என்று மத்திய திட்டக்குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா கூறினார்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பவள விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தற்போது பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. விரைவில் பணவீக்கம் கட்டுக்குள் வரும். இதனால் வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யும் நிலை ஏற்படாது.

இந்திய அளவில் பொருளாதார ரீதியிலும், வளர்ச்சித் திட்டங்களிலும் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. கடந்த 5 ஆண்டுகளில் பிற மாநிலங்களை விட தமிழகத்தின் வளர்ச்சி திட்டப் பணிகள் சிறப்பாக இருந்தன.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் புதிய அரசுகள் பொறுப்பேற்றுள்ளன. இந்த அரசுகளுடன் பேசுவோம் என்றார்.

பின்னர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பவள விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய மாநிலங்கள் மானியங்கள் அளிப்பதை குறைக்க வேண்டும். இப்போது 12வது ஐந்தாண்டு காலத்தை எதிர்நோக்கி இருக்கிறோம்.

11வது ஐந்தாண்டு காலத்தில் நாடு 9 சதவீத வளர்ச்சியைப் பெற வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 8.2 சதவீத வளர்ச்சியைத் தான் எட்ட முடிந்துள்ளது. 10வது ஐந்தாண்டு காலத்துடன் ஒப்பிடும்போது 1 சதவீத வளர்ச்சியைத் தான் எட்டியுள்ளோம்.

ஆனாலும் கடந்த ஐந்தாண்டுகளில் மிகப் பெரிய உலகப் பொருளாதார வீழ்ச்சிக்கு இடையே 8.2 சதவீத வளர்ச்சியை நாம் அடைந்திருப்பது பெரிய விஷயம் தான். அடுத்து வரும் 12வது ஐந்தாண்டு காலத்தில் நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சியை அடைய மானியங்களை குறைப்பது, விவசாய வளர்ச்சி, எரிசக்தி ஆகியவற்றில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

மாநிலங்கள் தேவையற்ற மானியங்கள் வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. உணவுக்கு மானியம் வழங்குவதை தவிர்க்க முடியாது. ஆனால், மண்ணெண்ணெய், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு மானியங்கள் வழங்குவதை மாநிலங்கள் குறைத்துக் கொள்ள வேண்டும்.

அவ்வாறு மானியங்கள் குறைக்கப்படாவிட்டால் குறைந்த வளர்ச்சி, குறைந்த வேலைவாய்ப்பு, குறைந்த உற்பத்தியையே மக்களும், நாடும் எதிர்கொள்ள வேண்டி வரும்.

எரிசக்தியைப் பொருத்தவரை 70 முதல் 85 சதவீதம் வரை கச்சா எண்ணெய் இறக்குமதியையே நாடு நம்பியுள்ளது. அடுத்த 5 அல்லது 6 ஆண்டுகளில் உலகம் மிகப் பெரிய எரிபொருள் தட்டுப்பாடை சந்திக்க உள்ளது. எனவே, சூரியசக்தி உள்ளிட்ட மாற்று எரிபொருளில் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

Jaffna இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன் முற்றுகை போராட்டம்

யாழ். இந்தியத் துணைத் தூதரகத்துக்கு முன் முற்றுகை போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு

 வடகடலில் அத்துமீறிய இந்திய மினவர்களது மீன்பிடியைத் தடுப்பதற்கு இந்திய அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து எதிர்வரும் 10 ஆம் திகதி வடமாகாண கடற்றொழில் சங்கங்களினால் யாழ். இந்தியத் துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளதாக வடமாகாண கடற்றொழில் கூட்டறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்தள்ளார்.

"எமது கடல் வளங்களை இந்திய மினவர்கள் அள்ளிச் செல்ல நாம் வீடுகளில் பட்டினியாய் இருக்கிறோம்" மீனவ சமூதாயத்தின் வற்றாத சொத்தான எமது கடல் வளம் அழிக்கப்படுவதையும் எல்லை மீறிய இந்தி மீனவரது மீன்பிடியை உடனடியாக நிறுத்தப்பட்டு எம்மை சுதந்திரமாக கடற்றொழில் செய்ய அனுமதிக்குமாறும் இந்நிய, இலங்கை அரசுகளைக் கண்டித்து எமது போராட்டத்தை நடத்தவுள்தாக தெரிவித்தள்ள அவர்,

எமது இந்திய - இலங்கை மீனவர் பிரச்சினைக்கு திர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என்ற நம்பிக்கையுடன் தாம் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக வடமாகாண கடற்றொழில் சமாசத் தலைவர் மேலும் கூறினார்.

Imelda Sukumar.G.AJaffna பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி யேற்பட்டது.

இமெல்டாவின் துணிச்சல்
imelda-4அண்மையில் நோர்வேயில் கைது செய்யப்பட்ட நெடியவன் குறித்தும் யாழ். அரச அதிபர் இமெல்டா ஒரு கருத்தினை முன்னர் தெரிவித்திருந்தார். நாட்டில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னரும் வெளிநாட்டிலிருக்கும் புலித்தலைவரான நெடியவனால் தொலைபேசி மூலமாக அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டம் எனக் கூறிக்கொண்டு அதே தமிழ் மக்களைப் பணயக் கைதிகளாக வைத்துத் தமது தேவைகளை நிறைவேற்றி வந்த விடுதலைப் புலிகளின் அந்தரங்கங்கள் பலவற்றைத் துணிச்சலுடன் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற 'பயங்கரவாதத்தை ஒழித்ததில் இலங்கையின் அனுபவம்" எனும் சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டுரையாற்றுகையிலேயே அரச அதிபர் இமெ ல்டா தனது கருத்துக்களை வெளிப்படையாகவும், துணிச்சலுடனும் தெரிவித்திருக்கிறார்.

திருமதி இமெல்டா சுகுமார் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த முல்லைத்தீவு மாவட்டத்தின் அரசாங்க அதிபராக பத்து வருடங்களுக்கு மேலாகக் கடமையாற்றியவர். புலிகள் இருந்த போது அவர்க ளது ஆயுத முனையிலான அதிகாரத்தின் கீழ் அரசாங்கத்தின் உயரதிகாரியாகக் கடமையாற்றிய திருமதி. இமெல்டா பல்வேறு இன்னல்களுக்கும், பயமுறுத்தல்களுக்கும் முகங்கொடுக்க வேண்டி யேற்பட்டது. தானொரு அரசாங்க உயரதிகாரியாக இருந்தும் புலிகளது கட்டுப்பாட்டுப் பகுதியில் கடமையாற்றியதனால் பொறுமையாக இருந்து மக்களுக்குத் தன்னாலான சேவையைச் செய்து வந்துள்ளார். அவரது துணிச்சலையும், சேவை மனப்பான்மையையும் உண்மையில் பாராட்டத்தான் வேண்டும்.

பயங்கரவாதத்தை ஒழித்த இலங்கையின் அனுபவத்தைப் பகிரவென வந்திருந்த உலக நாடுகளின் பிர திநிதிகள் மற்றும் பன்னாட்டு இராணுவ உயரதிகாரிகள் மத்தியில் யாழ். அரச அதிபர் தெரிவித்த கருத்துக்கள் உள்நாட்டில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. விடுதலைப் புலிகள் தொடர்பாக இதுவரை காலமும் வெளிவராத பல தகவல்கள் இவர் மூலமாக இப்போது வெளியாகியிருப் பதனால் ஊடகங்கள் பலவற்றிலும் இவரது இச்செய்திக்கு முக்கியத்துவம் அளித்துள்ளன.

ஓர் அரசாங்க அதிகாரியாக இருந்த போதிலும் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த மக்களுக்குத் தன்னால் உதவிகள் புரிவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கு புலிகள் தடையாக இருந்துள்ளனர் என் றும் தமிழ் மக்களைப் புலிகள் கேடயமாகப் பயன்படுத்தியே போராட்டத்தை நடத்தி வந்தனர் என்றும் இமெல்டா தெரிவித்திருக்கிறார். கஷ்டப்பட்ட மக்களுக்காக மத்திய அரசாங்கத்திடமி ருந்து உதவிகள் பெறுவதற்காக விண்ணப்பித்தால் புலிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த சு. ப. தமிழ்ச்செல்வனால் இதுபோன்ற நெருக்குதல்கள், பயமுறுத்தல்கள் பாரியளவில் தனக்கு விடுக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர் அத்தகைய கொடுமைகளைச் செய்த புலிகளின் பிடியிலிருந்த பொதுமக்களை இலங்கை அரசாங்கம் இராணுவத்தினர் மூலமாக மீட்டெடுத்து இன்று சுதந்திரமாக வாழ வைத்தமைக்காகத் தான் நன்றி கூறுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

உண்மையில் அரச அதிபர் இமெல்டா தனது பதவிக் காலத்தில் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட மக்கள் மீதான அடக்குமுறைகளை நேரடியாகவே கண்டவர். அத்துடன் அவரது பணியைச் செய்யவிடாது புலிகள் தடுத்தும் வந்துள்ளனர். தமிழர் தாயகத்தில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என் பதை உலக நாடுகளுக்குக் காட்டுவதற்காக தம்மால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது எனவும் புலிகள் இவரை அச்சுறுத்தி வந்துள்ளனர். இவர் போன்ற அரச துறையிலிருந்த பல உயரதிகாரிகளையும் அன்று புலிகள் பயமுறுத்திப் பல காரி யங்களைச் செய்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களைப் பணயக் கைதிகளாக வைத்துக் கொண்டு தாம் தப்பித்துக் கொள்வதற்குப் புலிகள் நடத்திய நாடகம் எல்லோரும் அறிந்ததே. கடைசியில் எதுவுமே பலிக்காத காரணத்தினால் தமது மக்களில் பலரைத் தாமே சுட்டுக்கொன்றுவிட்டு அரச படைகள் மீது பழியையும் போட்டனர். பொதுமக்களைப் பணயக் கைதிகளாக வைத்து புலிகள் யுத்தம் புரிந்தார் கள் என்பதற்குப் பல சாட்சிகள் உள்ளன. இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா. கன கரட்ணமும் தனது சாட்சியாகத் தெரிவித்துள்ளார். இன்று அரசாங்க அதிபர் திருமதி இமெல்டா சுகுமாரும் அவ்விடயத்தை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஆனால் இவை எதையும் நம்பாதது போன்று ஐக்கிய நாடுகள் சபையானது தனது நிபுணர் குழு அறி க்கையில் இலங்கை அரசாங்கத்தைக் குற்றம் சாட்டியுள்ளது. தனது மக்களையே கொடுமைப் படுத்தி அவர்களுக்கு உணவு கிடைக்கவிடாது தடுத்து பணயக் கைதிகளாக வைத்திருந்து போராடிய ஒரு இயக்கத்தை உலகில் வேறெந்த நாட்டிலுமே காணமுடியாது. தமது மக்களுக்கான உரி மைப் போராட்டம் எனக்கூறி தமது உயிர்களுக்கு ஆபத்து என்றதும் அந்த மக்களையே சுட்டுக் கொன்ற கொடூரமான இயக்கத்தையும் உலகில் எங்குமே காண முடியாது.

எனவே யாழ். அரசாங்க அதிபரின் கூற்றுக்கள் வெறுமனே சோடிக்கப்பட்ட அல்லது கற்பனை கலந்த கூற்றுக்கள் அல்ல. நேரடியாகக் களத்தில் நின்று கண்ட காட்சிகளின் விம்பங்கள். அதனை வெறு மனே செய்தி எனக்கூறித் தட்டிக் கழித்து விடமுடியாது. ஐக்கிய நாடுகள் சபையின் தருஸ்மன் அறிக்கைக்குப் பதிலடி கொடுக்கும் ஒரு ஆதாரபூர்வமான சாட்சி இது. இதனை அரசாங்கம் உரிய இடத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

அத்துடன் அண்மையில் நோர்வேயில் கைது செய்யப்பட்ட நெடியவன் குறித்தும் யாழ். அரச அதிபர் இமெல்டா ஒரு கருத்தினை முன்னர் தெரிவித்திருந்தார். நாட்டில் புலிகள் முற்றாக அழிக்கப்பட்ட பின்னரும் வெளிநாட்டிலிருக்கும் புலித்தலைவரான நெடியவனால் தொலைபேசி மூலமாக அவருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்திருந்தார். நெடியவனின் கைது தனக்கு நிம்மதியைத் தருவதாக அவர் தெரிவித்திருந்தார். அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படக் கூடாது என்பதே நெடியவனின் பயமுறுத்தலாக இருந்துள்ளது. அன்று தமிழ்ச் செல்வனும் இதனையே செய்து வந்தார்.

ஓர் அரச அதிகாரி எத்தகைய பயமுறுத்தலுக்கெல்லாம் முகங்கொடுக்க வேண்டியுள்ளது. துணிச்சல் மிக்க இப்பெண்மணியைப் பாதுகாப்பது அரசாங்கத்தின் கடமையாகும். அத்துடன் புலிகளின் கொடுமைகளையும், பயமுறுத்தல் செயற்பாடுகளையும் துணிச்சலாகக் கூறிய அவரைப் பாராட்ட வும் வேண்டும்
.
- தினகரன் -

மக்களுக்கு சேவை செய்ய கட்சித் தாவுகிறேன் - மு.றெமிடியஸ் அறிவிப்பு


யாழ். மாநகரசபையின் எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான மு.றெமிடியஸ் தன் சுயவிருப்பின் பேரில் ஆளும் ஜக்கிய மக்கள் சுகந்திர முன்னனியில் இணைந்து யாழ்.மாநகர சபையின் ஆளும் தரப்பின் ஆசனத்தில் அமர்வதற்கு தீர்மானித்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். யாழ்.மாநகரசபையில் தழிழ் மக்களுக்கும் தான் சார்ந்த சமூகத்திற்கு தான்னாலான சேவையைச் செய்வதற்காக தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் ஆளும் ஜக்கிய சுகந்திர மக்கள் முன்னனியுடன் இணைந்து செயற்படுவதற்கு தான் சுய சிந்தனையுடன் எடுக்கும் தீர்மானம் இது என்றும், எனது இத்தீர்மானத்தை யாழ்.மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்மிக்கை தனக்கு இருப்பதாகவும், தனது முடிவை உத்தியோகபூர்வமாக தழிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அறிவிக்கவுள்ளதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்தள்ளார்.

ஞாயிறு, 5 ஜூன், 2011

என்னைக் கொல்ல மத்திய அரசு சதி-ராம்தேவ் பரபரப்பு புகார்

டெல்லி: தன்னைக் கொல்ல மத்திய அரசு சதி செய்வதாகவும், தனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு மத்திய அரசே பொறுப்பு என்று யோகா குரு பாபா ராம்தேவ் கூறியுள்ளார்.

நேற்று நள்ளிரவில் அவரது உண்ணாவிரதப் போராட்டத்தை டெல்லி போலீசாரை வைத்து வன்முறை மூலம் முறியடித்தது மத்திய அரசு. இதையடுத்து வலுக்கட்டாயமாக ஹரித்வாரில் உள்ள அவரது ஆசிரமத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட ராம்தேவ் இன்று நிருபர்களிடம் பேசுகையில்,

கறுப்புப் பணத்துக்கு எதிரான எனது உண்ணாவிரதப் போராட்டம் தொடரும். என் வாழ்வில் முதல் முறையாக வன்முறையை நான் எதிர்கொண்டுள்ளேன். எனது உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்ற குழந்தைகள், பெண்களைக் கூட போலீசார் அரக்கத்தனமாக தாக்கினர்.

அவர்கள் மீது தாக்குதல் வேண்டாம் என்று நான் பலமுறை கெஞ்சியும் அதை அவர்கள் காதில் வாங்கவில்லை. அது எனக்கு ஜாலியன் வாலாபாக் கொடூரத்தைத் தான் நினைவூட்டியது.

அகிம்சை முறையிலான போராட்டத்தை அரசு அடக்குமுறை மூலம் அடக்க முயன்றது கேவலமானது. அது ஒரு கருப்பு தினம். ஜனநாயகத்தில் விழுந்த கறை.

கறுப்புப் பணம் தொடர்பான விவகாரத்தில் என்னிடம் அரசு பேச்சு நடத்தியபோது பல உறுதிமொழிகளைத் தந்தது. ஆனால், அதை நான் எழுத்துப்பூர்வமாக கேட்டபோது, அரசு பல்டி அடித்தது. இதிலிருந்து அவர்கள் தந்தது போலியான உறுதிமொழி என்பது உறுதியாகிறது.

இப்போது எனது உயிருக்கே மத்திய அரசு குறி வைத்துள்ளது. எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு.

என்னை பாஜகவுடன் இணைத்து உண்மையை திசை திருப்ப மத்திய அரசு முயல்கிறது. நான் எந்த அரசியல் அமைப்பையும் சாராதவன் என்றார்.

முன்னதாக தனது உண்ணாவிரதத்தை போலீசார் தடுத்து தன்னை தூக்கிச் சென்ற நிலையில் ஒரு தொலைக்காட்சியை அவர் தொடர்பு கொண்டு பேசினார். அவர் அளித்த பேட்டியில்,
ஊழல், கறுப்புப் பணத்துக்கு எதிராக நாங்கள் ராம் லீலா மைதானத்தில் நடத்திய உண்ணாவிரதம் மிகவும் அமைதியான முறையில் நடந்தது. ஆனால் போலீசார் இப்படி அதிரடியாக புகுந்து எங்கள் உண்ணாவிரதத்தை முறியடித்தது சட்ட விரோதமானது. நானோ, எனது சீடர்களோ எந்த பாவமும் செய்யவில்லை. ஆனால், போலீசார் ஏன் இவ்வளவு கொடூரமாக நடந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை.

இது குறித்து என்னிடம் ஒரு போலீஸ் அதிகாரி கூட பேசவில்லை. உண்ணாவிரதம் இருந்தவர்கள் மீது போலீசார் மிகவும் அத்துமீறி நடந்து கொண்டனர். பெண்களை வலுக்கட்டாயமாக தூக்கி சென்றது எந்த வகையில் நியாயம்?.
ஊழலுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தக் கூடாதா?. நான் பிரதமரை கேட்கிறேன், என்னை நீங்கள் கைது செய்ய விரும்பினால், உரிய வாரண்டுடன் அல்லவா போலீசாரை அனுப்பியிருக்க வேண்டும். அந்த உத்தரவைக் காட்டி பகல் நேரத்தில் கைது செய்திருக்கலாமே. ஏன் இரவில் திருடர்கள் போல வந்து எங்களை வெளியேற்ற வேண்டும்?.

போலீசாரின் மனித நேயமற்ற இந்த கொடூர செயலுக்கு கண்டனம் தெரிவித்து நாடெங்கும் உள்ள மக்கள் மிகவும் அமைதியான தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இந்த எதிர்ப்புப் போராட்டத்தின் போது தயவு செய்து யாரும், எந்த வன்முறையிலும் ஈடுபடக் கூடாது. அப்பாவி மக்கள் எந்த விதத்திலும் யாராலும் பாதிக்கப்படக் கூடாது என்றார்.

அமலாக்கப் பிரிவு விசாரணை:

இந் நிலையில் பாபா ராம்தேவின் ஆசிரமத்துக்கு வந்த வெளிநாட்டு நன்கொடைகள் குறித்து அமலாக்கப் பிரிவின் விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

English summary
Baba Ramdev, whose indefinite fast was ended abruptly by Delhi Police in a mid-night swoop, condemned the "excesses" on his followers. Speaking to a TV channel from an undisclosed location, he termed the police operation at Ramlila Maidan, venue of his agitation, as unfortunate. "I request the Prime Minister that if they want to arrest me, then they should arrest me with a proper warrant during the day time. Why they came like thieves and did this, it is unfortunate," he said and also asked people to protest the police action.

Advani:ஜெயலலிதாவின் வெற்றி தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ளது:




பாரதீய ஜனதா மூத்த தலைவர் எல்.கே.அத்வானி சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக சென்னை வந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் வரும்போது முதல் அமைச்சரை சந்திப்பேன். இந்த முறையும் ஜெயலலிதாவை சந்திக்க திட்ட மிட்டு இருந்தேன். ஆனால் நேற்று இரவு டெல்லியில் பாபா ராம்தேவ் கைது மற்றும் அதை தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போன்றவற்றால் பத்திரிகையாளர்கள் சந்திப்புக்கு அவசர ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் ஜெயலலிதாவை சந்திக்க இயலவில்லை.

தமிழ்நாட்டில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பதவி ஏற்றதுமே தொலை பேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தேன். அப்போது அவரிடம் நீங்கள் முதல் அமைச்சராக வெற்றி பெற்றது தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினேன்.

இந்த தேர்தலில் மத்திய அரசு ஊழல் பிரச்சினைகளுக்கு எல்லாம் கூட்டணி கட்சியான தி.மு.க. மீது மட்டும் பழி சுமத்தி வந்தது. ஆனால் தேர்தல் தோல்விக்கு பின்னர் நிலைமை மாறி விட்டது. ஊழலை மக்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது தேர்தல் மூலம் நிருபணம் ஆகியுள்ளது.

தி.மு.க. வெற்றி பெற்று இருந்தால் ஊழல் ஒரு பிரச்சினை அல்ல என்ற நிலை ஏற்பட்டு இருக்கும். ஆனால் ஜெயலலிதா வெற்றி பெற்றதன் மூலம் மக்கள் ஊழலுக்கு எதிராக உள்ளனர் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 1975 ஜூன் மாதம் வரலாற்றில் முக்கியமான காலம். 11 ந்தேதி குஜராத் தேர்தல் முடிவில் காங்கிரஸ் பலத்த அடி வாங்கியது. 12 ந்தேதி இந்திராகாந்தி வெற்றி பெற்றது
செல்லாது என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. அதே போல் இந்த ஜூன் மாதத்திலும் ஊழலுக்கு எதிராக ஜன நாயக ரீதியில் போராட்டம் நடத்திய பாபா ராம்தேவை இரவில் கைது செய்ததும் பெண்கள், குழந்தைகள், பெரியவர்களை தாக்கியதும் ஜாலியன் வாலாபாத் படுகொலையைதான் நினைவு படுத்துகிறது.

எனவே இச்சம்பவமும் அரசியலில் பெரிய திருப்பு முனையை ஏற்படுத்தும். இதனை கண்டித்து டெல்லியில் இன்று தர்ணா நடை பெறுகிறது. இதில் நான் கலந்து கொள்கிறேன் என்றார்.

பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அ.தி.மு.க. கூட்டணி ஏற்படுமா? என்று அத்வானியிடம் கேட்டபோது, கூட்டணி அமைவதற்கான சூழ்நிலை இப்போது எழவில்லை என்றார்.

தோற்றது....சமச்சீர் கல்வித் திட்டம்.-,கலைஞர் காப்பீட்டுத்திட்டம்

தோற்றது மக்கள் என்று சொல்லமாட்டேன் : பரிதி

நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தலைவர் கலைஞர், தனது சொந்த ஊரான திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
இதையடுத்து தொகுதி மக்களுக்கு நன்றி செலுத்துவதற்காக திருவாரூரில் திமுக சார்பில் வாக்களார்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் இன்று இரவு (5.6.2011) நடைபெற்றது.
கலைஞர் தலைமையேற்ற இந்த பொதுக்கூட்டத்தில் பரிதி இளம்வழுதி பேசினார்.
அவர்,’தலைவரை வெற்றி பெற வைத்ததற்காக திருவாரூர் மக்களின் கால்களைத்தொட்டு வணங்கி நன்றி சொல்லிக்கொள்கிறேன்.
இந்த தேர்தலில் தோற்றது மக்கள் என்று சொல்லமாட்டேன்.இந்த தேர்தலில் தோற்றது மக்கள் என்று சொல்லமாட்டேன். தோற்றது கலைஞர் காப்பீட்டுத்திட்டம்.தோற்றது....சமச்சீர் கல்வித் திட்டம்.
தேர்தல் முடிவு வந்த போது, மக்கள் எனக்கு ஓய்வு அளித்திருக்கிறார்கள் என்று தலைவர் சொன்னார்.
ஆனால் தலைவருக்கு என்றுமே ஓய்வு இல்லைஅவர் ஒரு பேச்சுக்காகத்தான் அப்படிச்சொன்னார்.

நெஞ்சுக்கு நீதியில் தலைவர், என் ஓய்வு என்பது கல்லறையில்தான்.. என எழுதியிருக்கிறார்’’ என்று

கலைஞர் ஏன் கண்ணீர் விட்டார்? : திருச்சி சிவா



திருவாரூரில் இன்று இரவு (5.6,2011) திமுக சார்பில் கலைஞர் தலைமையில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திருச்சி சிவா, ’’தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தபோது நாங்கள் தலைவருடன் இருந்தோம். தலைவருக்கு கீழே நாங்கள் எல்லோரும் சம்மணம் இட்டு அமர்ந்திருந்தோம்.
தேர்தல் முடிவுகள் தெரியவந்தபோது தலைவரைப்பார்த்தேன்.   அவர் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. அந்த கண்ணீர், தோற்றுவிட்டோம் என்பதற்காக அல்ல.
அப்போது கண்ணீருடன் தலைவர் கேட்டார், ‘’குடிசை வீடுகளையெல்லாம் கான்கிரீட் வீடுகளாக்க வேண்டும் என்று துடித்தோமே. இனி அந்த திட்டம் தொடருமா?’’ என்று கேட்டார்.
அவர் சந்தேகமாக கேட்டதுபோலவே, அந்த திட்டத்தையும் அகற்றிவிட்டார்கள்’’ என்று பேசினார்.

சொந்த ஊரிலேயே தங்க பாரதிராஜா முடிவு

ஈழப்பிரச்சினையில் முடிந்தவரை குரல் கொடுத்த பாரதிராஜா, அதன்பின் தனது அலுவலகத்தில் கல்லெறி சம்பவம் நடைபெற்ற பின் அப்படியே ஒதுங்கிக் கொண்டார்.
தெக்கத்தி பொண்ணு என்ற படத்தை இயக்குவதற்காக சொந்த மண்ணான தேனிக்கு பயணப்பட்டு விட்டார். இயக்குனர் சங்க தலைவராக இருந்தாலும் வருடத்திற்கு இரு முறை அவர் கூட்டத்திற்கு வருவதே பெரிசு என்கிற நிலைமை தான் நீடிக்கிறது இப்போது.
எனவே வருகிற தேர்தலில் இவருக்கு பதிலாக வேறு யாரையாவது நிறுத்தலாம் என்ற யோசனையை முன் வைக்கிறார்களாம் சங்கத்தில். ஆனால் அவர் பெரிய சாதனையாளர். அவரை பார்த்து தான் நாமெல்லாம் சினிமாவுக்கு வந்தோம்.
அந்த ஒரு விடயத்துக்காகவாவது அவரை மதிக்க வேண்டும் என்கிறார்களாம் பல உறுப்பினர்கள். ஆனால் இந்த சலசலப்புகள் எதுவுமே என்னை பாதிக்காது என்று கூறுவது போல தேனியிலேயே தங்கிவிடலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறதாம் பாரதிராஜாவின் மனசு.
என்ன நடக்கும் என்பதை எதிர்காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

Jaffna Municipal றெமிடியஸ் ஆளும் கட்சிக்கு தாவல்!

யாழ் மாநகரசபை எதிர்கட்சி(TNA) தலைவர் றெமிடியஸ் ஆளும் கட்சிக்கு தாவல்!

யாழ் மாநகரசபையின் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ், ஆளும் ஜக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இன்று மாறியுள்ளதாக யாழ் மாநகரசபை முதல்வர் திருமதி.யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்துள்ளார்.

ஏதிர்வரும் மாநகரசபை திட்டங்களில் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு அவர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மாநகரசபை மாதாந்த கூட்டங்களில் ஆளும் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பாக யாழ் மாநகரசபை உறுப்பினர் றெமிடியஸ் உடன் தொடர்புகொள்ள மேற்கொள்ளப்பட்டபோதும் முயற்சி பலனளிக்கவில்லை. இது தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, தமக்கு எந்தவித உத்தியோகப+ர்வ அறிவித்தலும் கிடைக்கவில்லை என கூறினார். இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு விசேட கூட்டமொன்றை தமிழ் தேசிய கூட்டமைப்பு கூட்டவுள்ளதாகவும் மாவை சேனாதிரசா குறிப்பிட்டார்.
23 ஆசனங்களை கொண்ட யாழ் மாநகர சபைக்கு 2009ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜக்கிய மக்கள் சுதந்திரக கூட்டமைப்பு 13 ஆசனங்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு 8 ஆசனங்களையும் தமிழர் விடுதலை கூட்டணி மற்றும் சுயேட்சைக்குழு ஆகியன தலா ஒரு ஆசனங்களையும் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அயன் வசூலை முறியடித்தது கோ! K.V.Anand

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் வெளியான அயன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது ஆனந்த் இயக்கி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் கோ.

ஜீவா, கார்த்திகா, பியா, அஜ்மல் ஆகியோரது அட்டகாசமான நடிப்பில் வெளியாகி, கே.வி.ஆனந்த் இயக்க, ஹாரிஸ் ஜெயராஜின் மயக்கும் பாடல்களில் உருவாகிய கோ படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.

50 நாட்களைத் தொட்டுள்ள கோ படம், தற்போது அயன் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளதாம். அனைத்து இடங்களிலும் வெற்றிகரமாக ஓடி வரும் கோ படத்தில் ஜீவா போட்டோ ஜர்னலிஸ்ட் ஆக நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் ராதாவின் மகள் கார்த்திகா அவருக்கு ஜோடியாக, பத்திரிக்கையாளராக அசத்தலாக நடித்துள்ளார்.

நல்லவனாக நடித்து வஞ்சகமாக ஏமாற்றும் போலி அரசியல்வாதியாக அஜ்மல் வித்தியாசமான ரோலில் அருமையாக நடித்துள்ளார்.
இப்படம் தெலுங்கில் ரங்கம் என்ற பெயரில் வெளியாகி அங்கும் வெற்றி பெற்றுள்ளது.
கோ படத்தின் பாடல்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளன. குறிப்பாக என்னமோ ஏதோ பாடல் அத்தனை பேரின் வாயிலும் முனுமுனுப்பை ஏற்படுத்தி விட்டது.

படம் மாபெரும் வெற்றி பெற்றிருப்பதால் படத்தில் நடித்தவர்களும் சரி, ஆனந்த்தும் சரி பெரும் மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் உள்ளனர்.

நாட்டை தவறான பாதைக்குத் திருப்பும் கிரிமினல் ராம்தேவ்'-திக்விஜய் சிங்

டெல்லி: நாட்டை தவறான பாதைக்குத் திருப்ப முயலுகிறார் கிரிமினல் ராம்தேவ். அதை அனுமதிக்க முடியாது. ராம்தேவ் கைது விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், ராம்தேவை கடுமையாக விமர்சித்து வருபவருமான திக்விஜய் சிங்.

ராம்தேவ் கைது குறித்து அவர் கூறுகையில், நாட்டை திசை திருப்பும் கிரிமினல் ராம்தேவ். ராம்தேவ் போன்றவர்கள் டெல்லியை வன்முறைக் களமாக்க முயல்வதை அனுமதிக்க முடியாது. யோகா முகாம் நடத்தத்தான் அவருக்கு அனுமதி தரப்பட்டிருந்ததே தவிர, போராட்டம் நடத்த அல்ல. மக்களை தூண்டி விட்டு வருகிறார் ராம்தேவ்.

போராட்டத்தை நிறுத்தினால் அவருடன் பேச அரசு தயாராகவே இருந்தது. ஆனால் அவர் பிடிவாதமாக இருந்தார். பிரணாப் முகர்ஜி போன்ற ஒரு மூத்த தலைவர், இவரைப் போய் விமான நிலையத்தில் வரவேற்று பேச வேண்டிய அவலமான நிலைக்குத் தள்ளப்பட்டது கோபத்தை ஏற்படுத்துகிறது என்றார் திக்விஜய் சிங்.
Congress general secretary Digvijaya Singh has welcomed the eviction of Baba Ramdev. "He is a thug who is misleading the nation" said Singh. "We can't allow someone like Ramdev to run riot in Delhi. He had permission only to run a yoga camp. He was trying to incite people," said Singh, who has spoken frequently this week against the Baba and his attempts to force the government to launch a mission to recover crores of black money from foreign bank accounts.

காவிக்குண்டர்கள் கைது ப்ளாக் மெயில் அரசியலுக்கு full stop

 நள்ளிரவில் அதிரடி
Ram Dev is another  Black Mail politician like Anna Hazare or Advani 
டெல்லி: ஊழலை ஒழிக்கக் கோரி ஆயிரக்கணக்கானோருடன் உண்ணாவிரதம் இருந்து வந்த யோகா குரு பாபா ராம்தேவை வலுக்கட்டாயமாக போராட்ட இடத்திலிருந்து அகற்றிய போலீஸார் பின்னர் அவரைக் கைது செய்து டேராடூனுக்குக் கொண்டு சென்றனர். அங்கிருந்து அவரது பதாஞ்சலி ஆசிரமம் அமைந்துள்ள ஹரித்வாருக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

உண்ணாவிரதம் இருந்து வந்தவர்களை தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் போலீஸார் கலைத்ததால் டெல்லியில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

ஊழலை ஒழிக்க வேண்டும், ஊழலில் ஈடுபடுவோரை கைது செய்து மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி, ராம்லீலா மைதானத்தில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்தார் ராம்தேவ். அவருடன் சங் பரி்வார் அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இஸ்லாமிய, ஜைன மதத்தவரும் உண்ணாவிரதம் இருந்தனர். ஆயிரக்கணக்கானோரும் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

ராம்தேவை சமாதானப்படுத்த அரசுத் தரப்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இருப்பினும் தனது நடவடிக்கைகளில் ராம்தேவ் உறுதியாக இருந்ததால் அவை தோல்வியிலேயே முடிந்தன.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் போலீஸார் திடீரென ராம்லீலா மைதானத்தில் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவைத் தாண்டி ஒரு மணியளவில் போலீஸார் உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்திற்குள் புகுந்து சுற்றி வளைத்தனர். ஒரு குழுவினர் ராம்தேவ் அமர்ந்திருந்த மேடையை சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து போராட்டம் நடத்தி வந்தவர்கள் மேடையை சுற்றி வளைத்து ராம்தேவை கைது செய்வதிலிருந்து தடுக்க முயன்றனர். இதனால் மேடையில் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது.

மேடையிலிருந்து குதித்தார்
ஒரு கட்டத்தில் ராம்தேவ் மேடையிலிருந்து கீழே குதித்து ஆதரவாளர்களுடன் நின்று கொண்டார். இதையடுத்து போலீஸார் கடுமையாக போராடி ராம்தேவை அவர்களிடமிருந்து பிரித்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து ஆதரவாளர்கள் போலீஸாருடன் மோதலில் குதித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களம் போல மாறியது. இதையடுத்து போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும் ஆதரவாளர்களைக் கலைத்தனர். இதனால் அவர்கள் சிதறி ஓடினர். பின்னர் ராம்தேவை பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வந்து அப்புறப்படுத்திக் கூட்டிச் சென்றனர்.

டேராடூன் கொண்டு செல்லப்பட்டார்
கைது செய்யப்பட்ட ராம்தேவை டெல்லியை விட்டு வெளியேற்றிட போலீஸார் முடிவு செய்தனர். இதையடுத்து இன்று காலை பாலம் விமான நிலையத்திற்கு ராம்தேவ் கொண்டு வரப்பட்டார். பின்னர் அங்கிருந்து எல்லைப் பாதுகாப்புப் படை விமானம் மூலம் அவரை டேராடூனுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். அங்கிருந்து கார் மூலம் அவரை ஹரித்வாரில் உள்ள அவரது ஆசிரமத்துக்குக் கொண்டு சென்றனர்.

மேலும் அடுத்த 15 நாட்களுக்கு டெல்லிக்குள் நுழையவும் அவருக்கு டெல்லி அரசு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் மீண்டும் டெல்லிக்கு ராம்தேவ் வந்து போராட்டத்தை தொடருவார் என்று அவரது ஆதரவாளர்கள் தரப்பில் கூறப்படுவதால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.

போர்க்களமாக மாறிய ராம்லீலா மைதானம்
போலீஸார் நடத்திய இந்த திடீர் நடவடிக்கையில் ராம் லீலா மைதானம் போர்க்களம் போலக் காணப்பட்டது. ஆதரவாளர்கள் அனைவரையும் போலீஸார் விரட்டியடித்து விட்டனர். இதனால் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் செருப்புகள், பைகள், துணிகள் என சிதறிக் கிடக்கின்றன.

டெல்லி முழுவதும் இந்த சம்பவத்தால் பெரும் பதட்டமாகவும், பரபரப்பாகவும் காணப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லி முழுவதும் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

அரசியல் ரீதியான நடவடிக்கை
ராம்தேவ் மீதான நடவடிக்கை குறித்து டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறுகையில், ராம்தேவ் மீதான நடவடிக்கை அரசியல் ரீதியான ஒன்று. நாங்கள் யோகா முகாம் நடத்தத்தான் அனுமதி கொடுத்திருந்தோம். போராட்டம் நடத்த அனுமதி கொடுக்கப்படவில்லை.

அந்த இடத்தை விட்டு அமைதியான முறையில் கலைந்து செல்லுமாறு நாங்கள் ராம்தேவுக்கு கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர் கேட்கவில்லை. அதேசமயம், தனது ஆதரவாளர்களையும் யாரும் கலைந்து செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ராம்தேவின் ஆதரவாளர்கள் போலீஸார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். இதனால்தான் நடவடிக்கை எடுக்க நேரிட்டது என்றார்.

30 பேர் படுகாயம்
போலீஸார் நடத்திய இந்த அதிரடி தாக்குதலால் ராம்தேவின் ஆதரவாளர்கள் 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

கண்ணீர்ப் புகை குண்டு வீச்சில் சிக்கியும், தடியடியில் சிக்கியும் இவர்கள் காயமடைந்தனர். அனைவரும் லோக்நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் சிலருக்கு தலைக் காயமும், கை, கால் முறிவும் ஏற்பட்டுள்ளதாக டாக்டர் லோகேஷ் தெரிவித்தார்.

காயமடைந்த சிலர் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனைக்கும், அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய மேடையையும் போலீசார் அதிரடியாக கலைத்தனர். அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் அள்ளிச் செல்லப்பட்டன. 20 நிமிடத்தில் அந்த இடத்தில் மேடையே இல்லாத அளவுக்கு அதை உடைத்து காலி செய்தனர்.

மேலும் ராம்லீலா மைதானத்தில் போடப்பட்டிருந்த ஷாமியானா பந்தலும் அகற்றப்பட்டு வருகிறது.

English summary
With talks breaking down, police swooped down on Baba Ramdev a little past midnight and detained him after firing tear gas shells and resorting to lathicharge on his supporters to end his day-old indefinite hunger strike on black money issue. The drama that broke the midnight calm in the Ramlila Maidan a little after 1 AM unfolded when a large number of police personnel descended at the protest venue where Ramdev was demanding immediate action to bring back black money stashed in foreign tax havens. After day break, police cleared all the remnants of Baba's support by evicting his followers from the protest site amidst stiff resistance. Delhi Police spokesman Rajan Bhagat said Baba Ramdev was detained as he was leaving the site.

யோகாவுக்கு என்று அனுமதி வாங்கிவிட்டு RSS அரசியல் செய்ய ஆரம்பித்தார்.

பல்டி அடித்தார் ராம்தேவ்'-கபில்சிபல்: 'சிபல் ஒரு பொய்யர்'-ராம்தேவ்

டெல்லி: உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வதாக உறுதியளித்துவிட்டு 'பல்டி' அடித்தார் ராம்தேவ் என்று மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.

ராம்தேவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்த அமைச்சர்கள் குழுவில் இடம் பெற்றிருந்தவரான கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறுகையில், கறுப்புப் பணத்தை தேசிய சொத்து என அறிவிக்க மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது. சட்டப்படி ஒரு குழு அமைத்து கறுப்புப் பணத்தை முழுமையாகக் கண்டறிய நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக சட்டம் இயற்றுவதில் அரசு உறுதியாக இல்லை என்பது குறித்து ராம்தேவ் அதிருப்தி தெரிவித்தார். இதையடுத்து, சட்டரீதியாக குழு அமைப்பதன் அடுத்த நடவடிக்கை சட்டம் இயற்றுவதுதான் என்று அவருக்கு விளக்கம் அளித்தேன். விரைவில் குழு அமைக்கப்படும். 6 மாதத்தில் அக்குழு அறிக்கையை அளிக்கும் என்றும் கூறினேன்.

இப்படி மத்திய அரசு உறுதிமொழி அளித்தபோதும் தனது உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வமாக தர வேண்டும் என்று ராம்தேவ் வலியுறுத்தினார். அதையும் ஏற்க தயாராகவே இருந்தோம்.

பேச்சுவார்த்தைகளின் இறுதியில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கே
தனது உண்ணாவிரதத்தை ராம்தேவ் முடித்துக் கொள்வார் என்று அவரது உதவியாளர் அரசிடம் கடிதம் கொடுத்தார். (அந்தக் கடிதத்தைக் காட்டினார் சிபல்). அந்தக் கடிதத்தில் ராம்தேவின் உதவியாளர் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால் சொன்னபடி பாபா தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்ளவில்லை. இதையடுத்து அவரிடம் தொலைபேசியிலும் பேசினோம். அதன் பின்னரும் சொன்னதைச் செய்யவில்லை ராம்தேவ். 5 மணிவரை பேசிப் பார்த்தும் பலனில்லை. இதனால்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க நேரிட்டது.

இதனால்தான் ராம்தேவ் மத்திய அரசுக்கு தந்த உறுதிமொழிக் கடிதத்தை நான் பகிரங்கமாக வெளியிட நேரிட்டது.

யோகாசனத்தை போதிக்கும், பரப்பும் ஒரு சாமியார் அதில் மட்டுமே ஈடுபட வேண்டும். அதை விட்டு விட்டு அரசியல் ஆசனம் செய்வது எப்படி என்பதை எங்களுக்குப் போதிக்கக் கூடாது.

மேலும், டெல்லி போலீசாரிடம் ராம்லீலா மைதானத்தில் 5,000 பேருக்கு யோகாசான முகாமை நடத்தப் போவதாக அவர் கூறியதால்தான் அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. யோகாசன முகாமுக்கு மட்டுமே அனுமதி தரப்பட்டது. ஆனால், யோகாவுக்கு என்று அனுமதி வாங்கிவிட்டு தனது உண்ணாவிரதம் நடத்தி அரசியல் செய்ய ஆரம்பித்தார்.

இதிலிருந்து ஆர்எஸ்எஸ்சின் இன்னொரு முகம் தான் ராம்தேவ் என்பது உறுதியாகிவிட்டது. இதனால்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிக்க காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க நேரிட்டது, அதில் தவறே இல்லை என்றார்.

கபில் சிபல் ஒரு பொய்யர்-ராம்தேவ்:

முன்னதாக கபில் சிபல் குறித்து ராம்தேவ் கூறுகையில், நான் ஒரு கடிதத்தில் கையெழுத்திட்டுத் தந்துள்ளதாகக் கூறி வரும் கபில் சிபல் ஒரு பொய்யர். இனிமேல் அவருடன் நான் எந்தப் பேச்சுவார்த்தையும் வைத்துக் கொள்ள மாட்டேன் என்றார்.
 
English summary
Union Minister Kapil Sibal who holds talks with Baba Ramdev has said that, Centre is ready to declare black money as national asset. Centre conveyed this decision to Ramdev.But Ramdev insisted this promise in written, but Govt refused this and detained Ramdev and evicted him out of Delhi.
 

திருகோணமலை கடலில் திமிங்கலங்களைப் பார்வையிடும் வாய்ப்பு

திருகோணமலை கடலில் திமிங்கலங்களைப் பார்வையிடும் வாய்ப்பு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டார்.

தென்மேல் பருவப் பெயர்ச்சி மழை திருகோணமலை கடற்பிரதேசத்திற்கு நகர்த்தப்படுவதாகவும் இதன்மூலம் திருகோணமலை கரையோரத்திற்கு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

தனியார் பஸ் வண்டிகளின் அடாவடித்தனம் சொல்லி மாளாது

தனியார் பஸ் போக்குவரத்தின் மீது 17,309 முறைப்பாடுகள்

தனியார் பஸ் போக்குவரத்தின் மீது இதுவரை சுமார் 17,309 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக போக்குவரத்து முறைப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

மேலதிக கட்டணம் அறவிடல், பயணிகளுடன் தவறான விதத்தில் உரையாடல் மற்றும் பயணச்சீட்டு வழங்காமை என்பன உள்ளடங்களாக பல முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக குறித்த பரிவு தெரிவித்துள்ளது.

மாத்தறை - கொழும்பு மற்றும் கொழும்பு - அநுராதபுரம் ஆகிய பிரதேசங்களுங்கிடையிலான தனியார் பஸ் போககுவரத்தின் மீதே அதிக முறைப்பாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதிகளவில் முறைப்பாடு செய்யப்பட்ட 41 பஸ்களின் அனுமதி இரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mumbai தாக்குதல் முக்கிய குற்றவாளி அல்கொய்தா தலைவர் இலியாஸ் பலி

அல்கொய்தா தலைவர்களில் ஒருவரும், மும்பை தாக்குதலில் தொடர்புடையவருமான இலியாஸ் காஷ்மீரி பாகிஸ்தானில் பதுங்கி இருந்தபோது, அமெரிக்க தாக்குதலில் பலியானார். அவருடன் மேலும் 9 பேரும் இறந்தனர்.
அல்கொய்தா தலைவரான பின்லேடன் இறந்த பிறகு அவரது இடத்துக்கு யார் வருவார் என்ற கேள்வி எழுந்தபோது 4 அல்லது 5 பெயர்கள் பதிலாக எடுத்து வைக்கப்பட்டன. இந்த பெயர்களில் ஒன்றாக இருந்தது இலியாஸ் காஷ்மீரி. இவர் சர்வதேச அளவில் உள்ள தீவிரவாதிகளுடன் தொடர்பு உடையவர் என்று கூறப்பட்டது.
அமெரிக்க வெளிநாட்டு மந்திரி ஹிலாரி கிளிண்டன் சமீபத்தில் பாகிஸ்தான் சென்றபோது பாகிஸ்தானிடம் தீவிரவாத தலைவர்கள் 5 பெயர்கள் கொண்ட பட்டியலை கொடுத்தார். இந்த தீவிரவாதிகள் பற்றிய தகவல்களை எங்களுக்கு தரவேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார். அப்படி கொடுக்கப்பட்ட பெயர்களில் இலியாஸ் காஷ்மீரி பெயரும் இடம் பெற்று இருந்தது.
மேலும் மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு தாஜ்மகால் ஓட்டலிலும் ரயில் நிலையத்திலும் நடத்தப்பட்ட தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த தாக்குதல் சம்பவத்தில் இவர் முக்கிய குற்றவாளி ஆவார்.
இவர் 10 நாட்களுக்கு முன்பு பாகிஸ்தானில் கைபர் என்ற இடத்தில் இருந்து தெற்கு வசீரிஸ்தானில் உள்ள வானா என்ற இடத்துக்கு சென்றார். அவர் அங்கு இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு இடத்துக்கு சென்றார். அந்த இடத்தின் மீது அமெரிக்க ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆள் இல்லாத விமானத்தில் இருந்து 2 ஏவுகணைகள் வீசப்பட்டன. அவற்றில் ஒன்று இலியாஸ் காஷ்மீரி தங்கி இருந்த இடத்தின் மீது விழுந்தது. இதில் 9 தீவிரவாதிகள் பலியானார்கள். 3 பேர் காயம் அடைந்தனர்.
பலியானவர்களில் இலியாஸ் காஷ்மீரியும் ஒருவர் என்று பி.பி.சி சேனல் செய்தி வெளியிட்டு உள்ளது. இதை பாகிஸ்தான் அரசாங்கம் உறுதி செய்யவில்லை.
பலியான 9 பேரும் பஞ்சாபி மாநிலத்தை சேர்ந்த தலீபான்கள் என்று கூறப்படுகிறது. பலியானவர்கள் அனைவரின் உடல்களும் அந்த பகுதியில் உள்ள மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
காஷ்மீரி தடை செய்யப்பட்ட ஹர்கத் உல் ஜிஹாத் அல் இஸ்லாமி அமைப்பின் தலைவராக இருந்தார். சமீபத்தில் கராச்சி நகரில் உள்ள கடற்படை தளத்துக்குள் தீவிரவாதிகள் புகுந்து நடத்திய தாக்குதலிலும் இவருக்கு தொடர்பு உண்டு.
இவர் இறந்து போனதாக ஏற்கனவேயும் ஒருமுறை தகவல் வெளியானது. 2009-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வடக்கு வசீரிஸ்தானில் அமெரிக்க உளவு விமானம் நடத்திய தாக்குதலில் அவர் இறந்துபோனதாக செய்திகள் வெளியாகின. ஆனால் ஒருமாதம் கழித்து அவர் கடத்தி கொல்லப்பட்ட நிருபர் சலீம் ஷாஷாத்துக்கு பேட்டி கொடுத்து கொண்டு இருந்தார்.

தூரத்தில் நந்திக் கடல் தெரிகிறது. வற்றாப்பளை கண்ணகி அம்மன்

காடுகளின் தேசம்

கிளிநொச்சியும் முல்லைத்தீவும் வறண்டு போய் காய்ந்து கருகி இருக்கும் நகரங்கள் என்று நீங்கள் இதுவரை நினைத்திருந்தால் ஏமாந்து போவீர்கள். நீங்கள் ஏற்கனவே அதாவது யுத்தம் நடைபெற்ற காலப்பகுதிக்கு முதல் அங்கு சென்றவராக இருந்தால் வித்தியாசத்தை உணர முடியும். அல்லது பக்கத்தில் அவ்வாறு போய் வந்தவரை வைத்திருக்க வேண்டும்.

முல்லைத்தீவில் வீதிக்கு இரண்டு பக்கமும் பெரிய காடுகள். மணலாறுக் காட்டின் தொடர்ச்சி இந்தக் காடுகள். இங்கே தான் இந்திய அமைதிப்படையின் கடைசிச் சண்டைகள் இடம்பெற்றதாக கூறுகிறார்கள். அடர்ந்த, உயர்ந்த இந்த மரங்கள் தான் அந்த நேரங்களில் கெரில்லாப் போர் முறையின் முக்கிய காரணியாக இருந்திருக்கக் கூடும். மரங்களுக்குக் குறுக்கே வயர்களை கட்டி அதில் கண்ணிகளை வைத்திருந்தது வழி பெரிதும் பரிச்சயமில்லாத போர் வீரர்களுக்கு சவாலாக இருந்திருக்கலாம். சில இடங்களில் வீதியின் அருகாமையில் மட்டும் தேக்கு மரக் காடுகள். சரியான இடைவெளிகளை நடப்பட்டு, முறையாக பராமரித்ததில் நீண்டு வளர்ந்து நெடிதுயர்ந்து (எவ்வளவு கடினமான தமிழ் வார்த்தை!) நிற்கும் தேக்கு மரங்கள். இடையிடையில் எங்கிருந்தோ ஓடி வரும் நீரோடைகள். பாலத்துக்கு கீழே பாறைகளை வழுக்கல் பாறைகளாக்கி, மணலை குவித்து, அதன் மேலாக ஓடிச் செல்லும் மண்ணிற நீர்.

சில இடங்களுக்கு போக இப்போது அனுமதி கிடைப்பதில்லை. தூரத்தில் நந்திக் கடல் தெரிகிறது. வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில்லுக்கு போக முடியும். ( தண்ணீரில் விளக்கெரிப்பதாக கூறிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அந்தக் கோயில் தான்! ) சில இடங்களில் வீதியின் இரு பக்கமும் களப்பு நீர் ஓடி தேங்கிப் போய் நிற்பதனால் அதில் குப்பையாக தாமரைப் பூக்கள்...வெள்ளை, சிவப்பு நிறத்தில் பச்சை இலைகளோடு ஒரு போர்வை போர்த்தியது போல் பூத்துக் கிடக்கின்றன. ஊதா நிறத்தில் அல்லிகள் வேறு.

ஊர் தான் அழகே தவிர மக்களின் வாழ்க்கை சிறிய வீடுகளுக்குள் முடங்கிப் போய் இருக்கிறது. நாலு தடி நட்டுக் கிடுகு வேய்வதை வீடு என்று நீங்கள் ஒத்துக் கொண்டால் அது வீடு. அரசாங்க வீட்டுத் திட்ட வேலைகளும் நடக்கிறது. நீங்கள் முல்லைத்தீவு வீதியில் பயணித்தவராக இருந்தால் மீண்டும் அடுத்த ஜென்மத்தில் தான் அங்கே செல்ல விரும்புவீர்கள். வீதி அமைப்பதற்காக ஜாக்கி சானின் சொந்தக் காரர்கள் ( அது தான் சீனாவைச் சேர்ந்தவர்கள்) வந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடிசைகளுக்குப் பின்னும் கொஞ்ச கொஞ்ச இடங்களில் மக்கள் நட்டிருக்கும் வெண்டி, பயறு, கத்தரிச் செடிகள் பூத்திருக்கின்றன. அங்கே பூத்திருப்பது செடிகள் மட்டும் அல்ல, அவர்களின் நம்பிக்கையும் தான்.

முல்லைத்தீவைப் போலவே கிளிநொச்சியும் செழிப்பான மற்றுமொரு நகரம். நிறையக் குளங்கள். பெயர் தெரிந்த பெரிய குளங்களில் இருந்து பெயர் தெரியாத, அங்கங்கே தேங்கி நிற்கும் குட்டைகள் வரை தண்ணீர் தண்ணீர். ( பாலு மகேந்திரா படத்துக்கு நேர் எதிராக). இரணை மடுக் குளத்து நீர் ( இராணுவம் முன்னேறிய பொது புலிகள் அணைக்கட்டைத் திறந்து விட்டதாகக் கூறிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்தக் குளம் தான்!) வீதியின் ஒரு பக்கத்தில் அகலமான ஒரு வாய்க்காலாக ஓடி வருகிறது. பிரதான வீதியில் இருந்து சிறு வீதி பிரியும் போது அந்தச் சிறிய வீதியின் இரு பக்கங்களிலும் மஞ்சள் நதி போல ஓடி வருகிறது. அடர்ந்த காட்டு மரங்கள், நீர்த் தாவரங்கள், என எல்லாவற்றையும் தாண்டி பச்சை வெளியாக இருக்கும் வயல்களில் போய் நெல்லின் காலை நனைக்கிறது. ஒரு பழைய படத்தில் பிரஷாந்த், சைக்கில் ஒன்றை உருட்டிய படி ' அட இங்கே பார் தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்....' என்று பாடியபடி வருவார் ஞாபகம் இருக்கிறதா? அந்த பாடல் காட்சியில் வரும் இடம் போலவே அத்தனை பசுமையும் நீரோடைகளும்.

பிரதான வீதியில் இருந்து பிரியும் அந்த சிறு வீதியில் இருக்கும் ஒரு ஒழுங்கையில் ஒரு இல்லம். அதை நடத்தி வரும் கன்னியாஸ்திரி ஒரு சிறிய உருவம். சின்ன மோட்டார் சைக்கிள் ஓடுகிறார். வயதானவர். யுத்தக் காலத்தில் கடைசி நேரம் வரையும் இருந்து பிறகு இல்லத்தில் இருக்கும் பிள்ளைகளுடன் இடம் பெயர்ந்து புனர்வாழ்வு முகாமில் இருந்து இப்போது மீண்டும் அதே பழைய இடத்தில் அதே இல்லத்தில் இன்னும் அதிக பிள்ளைகளுடன் இருக்கிறார். கிணற்றில் இருந்து வாளியில் தண்ணீர் எடுத்து குளியலறைக்கு சுமந்து செல்லும் பிள்ளைகள். ( குழாய் மற்றும் மோட்டார் வசதி இல்லாததால்) அவர்களுடைய பொது மண்டபத்தில் அத்தனை அமைதி. அப்படி ஒரு சுத்தம். உயரத்தில் ஒரு மேடையில் மேரி குழந்தை இயேசுவின் கையை பிடித்தபடி நிற்கிறார். பணப் பற்றாக் குறை இருந்தாலும் உரிய நேரத்தில் அந்த பணத்தை இறைவன் அனுப்பி வைப்பான் என்று அந்த கன்னியாஸ்திரி அம்மையார் அமைதியாக புன்னகைக்கிறார். சிறு பிள்ளை போல் ஓடியாடி வேலை பார்க்கும் இன்னொரு கன்னியாஸ்திரி, கண்ணாடி அணிந்த தலைமை கன்னியாஸ்திரி என்று அந்த இடம் ஒரு விதமான பரிசுத்தமான இடமாக இருக்கிறது. காற்றில் ஒரு மெல்லிய சோகம் பரவினது போன்ற அமைதி அந்த இடத்தில் எப்போதும் இருந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கன்னியாஸ்திரி முன்பு இல்லத்துப் பிள்ளைகளுடன் புனர்வாழ்வு முகாமில் இருந்த போது இவருக்கு கன்னியாஸ்திரி என்ற சலுகையில் கொஞ்சம் கூடுதல் உணவு கிடைக்குமாம். அந்த நேரம் அங்கே கடும் உணவுப் பஞ்சம் இருந்தது. இவர் தனக்குக் கிடைக்கும் உணவை , உணவுக்காக அழும் மிகவும் வயது குறைந்த பிள்ளைகளுக்கு கொடுத்து விடுவாராம் என்று கூறினார்கள். கேட்கும் போது இவ்வளவு பசுமையும் தண்ணீரும் செழிப்பும் இந்த மாதிரி உள்ளங்களுக்காகத் தான் இருக்கிறதோ என்று தோன்றுகிறது.

எவ்வளவு அழகான செழிப்பான இடம் என்று கூறும் போது அதற்காக தானே இத்தனை சண்டையும் என்று திருப்பிக் கேட்கிறார்கள். உண்மை தானோ?
 thanks.
http://munpanikalam.blogspot.com

autism ஆண்குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஆட்டிசம்? அச்சம் வேண்டாம்

இன்றைய நவீன யுகத்தில் ஏராளமான குழந்தைகளை அச்சுறுத்தும் நோய் ஆட்டிசம். இதனை நோய் என்பதை விட குறைபாடு என்பதே பொருத்தமானதாக இருக்கும். ஆ‌ட்‌டிச‌ம் எ‌ன்பதை ‌விள‌க்கமாக‌க் கூற வே‌ண்டுமானா‌ல் மூளையின் இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்டு த‌ன்னை‌ச் சுற்றியுள்ள உலகத்துடன் தொடர்பு கொள்ள இயலாது செய்யும் ஒரு குறைபாடு. த‌ன்னை‌ச் சு‌ற்‌றி நட‌க்கு‌ம் எதை‌ப் ப‌ற்‌றியு‌ம் கவலை‌ப் படாம‌ல், த‌ங்களு‌க்கெ‌ன்று ஒரு த‌னி உலக‌த்தை உருவா‌க்‌கி‌க் கொ‌ண்டு அ‌தி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌ப்பா‌ர்க‌ள்.

என்னென்ன அறிகுறிகள்?

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்க‌ள் இ‌ப்படி‌த்தா‌ன் இரு‌ப்பா‌ர்க‌ள் எ‌ன்று எ‌ந்த ஒரு வரையறையு‌ம் இரு‌ப்ப‌தி‌‌ல்லை. ஒ‌வ்வொருவரு‌ம் ஒ‌வ்வொரு வகை‌யி‌ல் செய‌ல்படுவது‌ண்டு. சிலருக்கு பேச்சு வருவதில் சிக்கல் ஏற்படும். தா‌யி‌ன் முக‌த்தை அடையாள‌ம் காணுத‌ல், ‌சி‌ரி‌த்த‌ல், மழலை‌யி‌ன் ஒ‌லி எழாம‌ல் இரு‌ப்பது, அரு‌கி‌ல் ‌நி‌ன்று கூ‌ப்‌பி‌ட்டாலு‌ம் எ‌ந்த சலனமு‌ம் இ‌ல்லாம‌ல் இரு‌ப்பது, பொ‌ம்மைகளோடு கூட ‌விளையாட மறு‌த்த‌ல், கைக‌ளி‌ல் ஒரு ‌பிடி‌ப்‌பு‌த் த‌ன்மை இ‌ல்லாம‌ல் போவது போ‌ன்ற‌ சி‌ன்ன செய‌ல்களை‌க் கூட செ‌ய்யாம‌ல் குழந்தைகள் முட‌ங்‌கிக் கிடக்கும். இ‌த‌ன் மு‌க்‌கிய‌ப் ‌பிர‌ச்‌சினை எ‌ன்னவெ‌ன்றா‌ல் இ‌ந்நோ‌ய் கு‌றி‌த்து மரு‌த்துவத் துறையினரால் கூட இதுவரை ச‌ரிவர பு‌ரி‌ந்து கொ‌ள்ள முடிய‌வி‌ல்லை எ‌ன்பதுதா‌ன்.

ஆண் குழந்தைகள் அதிகம் பாதிப்பு

பெ‌ண்களை ‌விட ஆ‌ண்களையே அ‌திகமாக ஆ‌ட்டிச‌ம் நோ‌ய் தா‌க்கு‌வது தெரியவந்துள்ளது. இ‌ந்‌தியா‌வி‌ல் ம‌ட்டு‌ம் சுமா‌ர் 20 ல‌ட்ச‌ம் இ‌ந்‌திய‌ர்க‌ள் ஆ‌ட்டிச‌த்‌தினா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர். ஆனாலு‌ம், ஆட்டிச‌ம் ப‌ற்‌றிய எ‌ந்த ‌விவரமு‌ம் பொதும‌க்களை இ‌ன்றுவரை அ‌திகள‌வி‌ல் செ‌ன்றடைய‌வி‌ல்லை எ‌ன்பது கவலை‌க்கு‌ரிய ‌விஷயமாகு‌ம்.

அமெரிக்கா ஆய்வு

ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌ப்‌பி‌ற்கு எ‌ந்த காரணமு‌ம் இதுவரை க‌ண்டு‌பிடி‌க்க‌ப்பட‌வி‌ல்லை. ஆனால் ஒரு குழந்தைக்குப் பின் குறுகிய இடைவெளியில் அடுத்துப் பிறக்கும் குழந்தைக்கு `ஆட்டிசம்’ பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம் என்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

முதல் குழந்தை பிறந்த பிறகு, குறைந்தபட்சம் மூன்றாண்டு களுக்குப் பின் பிறக்கும் குழந்தையைவிட, இரண்டு ஆண்டு களுக்குள் பிறக்கும் குழந்தைக்கு ஆட்டிச ஆபத்து அதிகம் என்கிறார்கள், இந்த ஆய்வை மேற்கொண்டவர்கள்.

குழந்தைகளுக்கு மறுவாழ்வு

ஆட்டிசம் குறைபாடு ஏற்படுவதற்கு தாய், தந்தையரின் பரம்பரையில் யாரேனும் பாதிக்கப்பட்டிருத்தல், மெக்னீசியம், துத்தநாகம் போன்ற கனிமச் சத்துகளின் குறைபாடு, 'செக்ரடின்' என்ற ஹார்மோன் குறைபாடு என பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால் 'ஆட்டிசம்' ஒரு நோய் அல்ல என்பது மட்டும் உறுதி. எனவே அதற்கு மருந்து என்பது கிடையாது. ஆனால் ஆ‌ட்டிச‌ம் இரு‌ப்பது தெ‌ரிய வ‌ந்தா‌ல், அத‌ற்கான உ‌ரிய ‌சி‌கி‌ச்சை முறைகளை மே‌ற்கொ‌ண்டு, ஆ‌ட்டிச‌ம் பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு மறுவா‌ழ்வு அ‌ளி‌‌ப்ப‌தி‌ல் சமூக‌ம் அ‌க்கறை செலு‌த்த வே‌ண்டு‌ம்.

பாதிக்கப்பட்டவர்கள் நடந்து கொள்ளும் முறையை முழுமையான பயிற்சிகள் மூலம் மாற்றி அமைத்து அவர்கள் வாழ்க்கையை முழுமையானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் செய்துகொள்ள உதவலாம். இதன் மூலம் அவ‌ர்களையு‌ம் இய‌ல்பான வா‌ழ்‌க்கை வாழ வ‌ழி செ‌ய்யலா‌ம்.
English summary
As a parent, you never want to believe that your precious bundle has a problem. But when it comes to autism, catching it early makes a huge difference. The younger your child, the greater the impact of treatment on symptoms of autism and other developmental problems. So watching for warning signs in babies and toddlers is vital.

ஜெயலலிதா அரசு வரமா? சாபமா?

புதியதாக பொறுப்பிற்க்கு வந்துள்ள தமிழக அரசின் செயல் பாடு எப்படி உள்ளது?
   ட்ட ரீதியாகவும் அதிகார பூர்வமாகவும் வேண்டுமானால் இதை புதிய அரசு என்று சொல்லலாம் ஆனால் நம்மை பொறுத்தவரை இதை இதற்கு முன்பு 10  ஆண்டு காலம் பார்த்த அரசு என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் சென்ற காலத்திற்கும் தற்காலத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்பதை மக்களும் அரசாங்கமும் உணர்ந்து கொண்டால் நன்றாக இருக்கும்

 முதல் முறையாக அம்மையார் முதல்வராக செயலாற்றிய ஐந்து வருட காலத்தில் நிச்சயம் நல்ல ஆட்சியை தர வில்லை தான்தோன்றி தனமான மக்கள் நலம் விரும்பாத அரசாகவே அது இருந்தது அதனால் தான் அவர் அடுத்த கட்ட தேர்தலில் தோற்றார்


 இரண்டாவது முறையாக முதல்வர் ஆன பிறகு பெரிய அளவில் குற்றம் குறைகள் இல்லை என்றாலும் சொல்லி கொள்கிற மாதிரி எந்த நன்மைகளையும் செய்து விட வில்லை இப்போது அவரை மக்கள் தேர்ந்து எடுத்து இருப்பது நல்ல ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கையோடு அல்ல கலைஞரின் குடும்ப ஆட்சி மாற வேண்டும் என்பதற்காக தான் ஜெயலலிதா அம்மையார் மக்களால் தேர்வு செய்ய பட்டுள்ளார்

 இந்த நல்ல சந்தர்ப்பத்தை பயன் படுத்தி நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது செய்தார் என்றால் தமிழ் உலகமே அவரை கையெடுத்து கும்பிடும் முன்பு போலவே நடந்து கொண்டால் கலைஞரை விட அதிகமான தண்டனையே மக்களிடம் பெற வேண்டிய சூழல் ஏற்படும் அம்மையாரின் அரசு தமிழ் நாட்டிற்கு வரமா சாபமா என்பது போக போக தான் தெரியும்

இலங்கை தமிழர் பிரச்சனையில் ஜெயலலிதா எதாவது நல்லது செய்வாரா?

முதல் கட்டமாக தமிழ் நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் அடிப்படை வசதிகளை சரிவர ஏற்படுத்த போவதாக அறிவித்து இருப்பது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது


  அதே நேரம் இரும்பு இதயம் கொண்ட மத்திய காங்கிரஸ் அரசை ஜெயலலிதாவால் மாற்ற முடியும் என்று நான் நினைக்க வில்லை காரணம் ராஜூவ் காந்தியின் காலத்திலிருந்தே மத்திய அரசின் செயல் பாடு இலங்கை தமிழருக்கு பயன் அளிக்க கூடிய விதத்தில் இல்லை

 அதை மாற்ற தமிழர்களின் உணர்வுகளை ஆத்ம பூர்வமாக தேசிய அளவில் ஜெயலலிதா எடுத்து சென்றால் நன்றாக இருக்கும் அவரிடம் இப்போது இருக்கும் கனிவு தொடர்ந்து இருந்தால் ஈழ தமிழருக்கு சிறிதாவது நன்மை ஏற்படும்

திமுக அரசின் பல திட்டங்களை முதல்வர் நிறுத்தி வைத்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறிர்கள்?

முந்தைய கலைஞர் அரசு கொண்டு வந்த நல திட்டங்கள் பல .

 புதிய சட்ட சபை கட்டிடத்தை பயன்படுத்தாதது சரியா?

புதிய சட்டசபை கட்டிடம் கலைஞரின் குடும்ப வருமானத்தில் கட்டப்பட்டது அல்ல முழுக்க முழுக்க மக்களின் வரி பணத்தில் உருவானது அதை பயன்படுத்தாமல் விடுவது பெரிய தவறாகும்

 ஒரு அரசு கொண்டு வந்ததை இன்னொரு அரசு செயல் படுத்தினால் எதுவும் குறைந்து போகாது அந்த கட்டிட அமைப்பில் குறை இருந்தால் அதை சீர் செய்து பயன் படுத்துவது தான் முறையான செயல்

 அதை விட்டு விட்டு வீண் பிடிவாதத்தால் மக்கள் பணத்தை விரையம் செய்வது ஒரு நல்ல அரசிற்கு அழகு அல்ல
சமச்சீர் கல்வி கைவிடப்பட்டது சரியா?

இந்த கல்வி திட்டத்தில் குறைப்பாடுகள் இருந்தால் அதை வரும் கல்வி ஆண்டில் சீர் படுத்தலாம் அதே செய்யாமல் அச்சடித்த நூல்களை விணாக்குவது தற்போதைய பொருளாதார சூழலுக்கு ஏற்றது அல்ல இந்த நடவடிக்கை பழையப்படி கல்வியில் வியாபார மயமாக்குதலை ஊக்கு விக்கவே செய்யும்

தமிழக நதிகள் இணைக்கப்பட போவதாக சொல்லி இருப்பது வரவேற்க தக்கதா?

நதிகள் இணைப்பு என்பது வரலாற்று நோக்கிலும் சுற்று சூழல் நோக்கிலும் இதுவரை எந்த நாட்டிலும் சரியானதாகவும் பின்விளைவு இல்லாததாகவும் இல்லை என்பதே உண்மை ஆகும்

 ரஷ்யாவில் இருந்த பல நதிகள் இணைக்கப்பட்ட பிறகு அந்த நாட்டில் புவி அமைப்பிலேயே பல விரும்ப தகாத மாறுதல்கள் ஏற்பட்டு வருகின்றன

 கங்கை காவேரி இணைப்பு தமிழக நதிகள் இணைப்பு என்பவைகள் எல்லாம் பேசுவதற்கு மட்டுமே நன்றாக இருக்கும் செயல் படுத்தினால் பல பின் விளைவுகள் ஏற்படும் இதை ஏனோ நம்மில் பலர் எண்ணிப்பார்ப்பது இல்லை

 உண்மையாக நீர் ஆதாரங்களை காப்பாற்ற வேண்டும் என்றால் முற்றிலுமாக ஆற்று படுகைகளில் மணல் எடுப்பதை தடை செய்ய வேண்டும் நாடு முழுவதும் உள்ள ஏரி குளங்களை ஆழப்படுத்தி நீர் வரத்து வாய்க்கால்களை செம்மைப்படுத்த வேண்டும்

 விவசாய நிலங்களை குடியிருப்பு பகுதிகளாக மாற்றுவதை தடுக்க வேண்டும் நதி இணைப்புக்காக செலவிடும் பணத்தை நாடு முழவதும் உள்ள வனங்களை பாதுகாக்கவும் புதிய வனங்களை உருவாக்கவும் செலவிட்டால் நல்ல பலன் நிரந்தரமான பலன் கிடைக்கும் இத்தகைய கவர்ச்சி திட்டத்தால் பூமி மேலும் கெடத்தான் செய்யும்

சூர்ய மின்சார திட்டம் நடை முறைக்கு சாத்தியமா?
நிச்சயம் அது நல்ல திட்டம் நம் தமிழ் நாட்டில் வெயிலுக்கு பஞ்சம் இல்லை தெரு விளக்குகள் வீட்டு உபயோகத்திற்குகான மின்சார தேவைகள் போன்றவற்றிக்கு முதல் கட்டமாக சூரிய சக்தியை பயன் படுத்தலாம்

 சூரிய மின்சாரத்தை விரும்பியவர்கள் பெறுவதற்கான வழி எளிமையாக இருக்க வேண்டும் விலை மலிவாகவும் இருக்க வேண்டும் மின்சார உபகரணங்கள் அடிக்கடி பழுது படாமலும் உடனுக்குடன் பரமாரிக்க கூடியதாகவும் இருந்தால் நிச்சயம் மக்கள் விரும்பி ஏற்று கொள்வார்கள்

தற்போதைய மின்சார வாரியத்தின் ஆமை வேக செயல் பாடுகளை மாற்றி கொண்டால் தான் இந்த திட்டம் பயன் தருமே அல்லாமல் இதே கட்டுமானத்தில் செயல் பட்டால் இது ஒரு கனவு திட்டமாகவே தொடரும் 
http://ujiladevi.blogspot.com/

ரணில் - சஜித் மோதல் மேலும் தீவிரம் ஐக்கிய தேசியக் கட்சியின்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும் - பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச விற்கும் இடையிலான மோதல் மேலும் தீவிர மடைந்து வருகின்றது. இதன் மற்றுமொரு அங்கமாக “ஐ.தே.க. வை பாதுகாப்போம்- நாட்டை வெற்றிகொள்வோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் நாடு முழுவதிலும் விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடாத்துவதற்கு சஜித் அணியினர் திட்டமிட்டுள்ளனர். இதன் முதலாவது செயலமர்வு இன்று (04) கேகாலை ருவன்வெல்லவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து இவ்வாறான விழிப்பூட்டல் செயலமர்வுகளை நாடு முழுவதிலும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐ.தே.க. சஜித் அணியினர் மாற்று தொழிற்சங்க குழுவொன்றினையும், மகளிர் அணியொன்றினையும் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருகிறது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்கவிற்கும் - பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச விற்கும் இடையிலான மோதல் மேலும் தீவிர மடைந்து வருகின்றது. இதன் மற்றுமொரு அங்கமாக “ஐ.தே.க. வை பாதுகாப்போம்- நாட்டை வெற்றிகொள்வோம்” என்ற தொனிப் பொருளின் கீழ் நாடு முழுவதிலும் விழிப்பூட்டல் செயலமர்வுகளை நடாத்துவதற்கு சஜித் அணியினர் திட்டமிட்டுள்ளனர். இதன் முதலாவது செயலமர்வு இன்று (04) கேகாலை ருவன்வெல்லவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து இவ்வாறான விழிப்பூட்டல் செயலமர்வுகளை நாடு முழுவதிலும் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாகவும் ஐக்கிய தேசியக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஐ.தே.க. சஜித் அணியினர் மாற்று தொழிற்சங்க குழுவொன்றினையும், மகளிர் அணியொன்றினையும் அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் ஐ.தே.க. வட்டாரங்களிலிருந்து மேலும் தெரியவருகிறது.

திவ்ய தர்ஷினி IAS தேர்வில் இந்தியாவிலேயே முதல் இடத்தை பெற்றவர்

இந்தியா முழுவதும் இந்தப் பெயரை உச்சரிக்காத உதடுகளே இருக்காது! குடிமைப் பணிகளுக்கான தேர்வில் இந்திய அளவில் முதல் இடத்தில் தேர்வாகியிருக்கும் திவ்யதர்ஷினிக்குப் பாராட்டுகள்
 

அஜீத் விஜய் விக்ரம் சூர்யா படப்பிடிப்புகள் ரத்து... (புலிக்கு பயந்து சிங்கத்திடம் மாட்டிக் கொண்டோமோ)

கடந்த சில தினங்களாக திருவிழாவில் தொலைந்த குழந்தை போல தவித்துக் கொண்டிருக்கிறது தமிழ்சினிமா. புலிக்கு பயந்து சிங்கத்திடம் மாட்டிக் கொண்டோமோ என்ற அச்சம் நிலவி வருகிறது திரைப்படக் கலைஞர்கள் மத்தியில்.

ஏன்? எதற்கு? வேறொன்றுமில்லை, ஸ்டிரைக்! திடீரென்று பூச்சாண்டி காட்டும் விதமாக படப்பிடிப்பை தன்னிச்சையாக ரத்து செய்கிற மூடில் இருக்கிறார்கள் தொழிலாளர்கள்.

அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய சங்கங்களின் தலைமை டம்மியாகிக் கிடக்கிறது. கடந்த காலங்களில் ஆட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் தமிழ்சினிமா இருக்கிறது. குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கம் தலை விரித்தாடுகிறது என்றெல்லாம் முணுமுணுப்பு எழுந்தது. எல்லா தியேட்டர்களும் ஆதிக்க சக்திகளின் கைக்குள் இருந்ததால் சின்ன படங்களுக்கு தியேட்டர் கிடைக்காத நிலை இருந்தது.

சினிமாக்காரர்களே ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பியதும் அதனால்தான். அதே நேரத்தில் சங்க தலைமைகள் உறுதியாக இருந்தன. ஒரு குறையென்றால் ஓடிப் போய் சொல்லவும், தலைமை போடுகிற கட்டளையை மீற முடியாத நிலைமையும் இருந்தன. ஆனால் இன்று? எதுவுமே சரியில்லையோ என்று அச்சம் கொள்கிற அளவுக்கு நிலைமை ஏற்பட்டுள்ளது.

யார் சொல்வதையும் யாரும் மதிப்பது போல தெரியவில்லை. 24 சங்கங்களின் தலைமையான பெப்சி அமைப்பின் தலைவர் வி.சி.குகநாதன் திமுக ஆதரவாளர் என்பதால் டம்மியாக அமர்த்தி வைக்கப்பட்டிருக்கிறார் அந்த சீட்டில்.

தயாரிப்பாளர் சங்கத்தின் தற்காலிக தலைவர் எஸ்.ஏ.சி பேச்சை எவரும் கேட்பதாக இல்லை. இந்த நிலையில்தான் லைட்மேன்கள் அமைப்பு 40 சதவீத சம்பள உயர்வு கொடுத்தால் படப்பிடிப்பில் கலந்து கொள்வோம்.

இல்லையென்றால் கிளம்புகிறோம் என்று மிரட்ட ஆரம்பித்தார்கள். இந்த சம்பள உயர்வை வலியுறுத்தி தனித்தனி சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அவரவர் பங்குக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே போல வேலை நேரத்தை 12 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரமாக குறைக்கவும் வலியுறுத்தி வருகிறார்கள்.

ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கம் இயக்கிக் கொண்டிருக்கும் இந்தியா என்ற படத்தின் படப்பிடிப்பில் பிலிம் பாக்சையே து�க்கிக் கொண்டு ஓடிவிட்டார்களாம் தொழிலாளர்கள். சம்பள உயர்வை கொடுத்துவிட்டு பிலிமை வாங்கிக்கோ என்றார்களாம். அடித்து பிடித்துக் கொண்டு புகார் சொல்ல சங்கங்களுக்கு ஓடிவந்தால், அங்கே இவருடைய பிரச்சனையை காதில் வாங்கக் கூட ஆள் இல்லாமல் போனது.

நேற்று மட்டும் சுமார் 45 படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அஜீத், விஜய், விக்ரம், சூர்யா படங்களும் இதில் அடக்கம். முந்தைய ஆட்சியில் ரிங் மாஸ்டர் போல எல்லாவற்றையும் கட்டுப்படுத்தக் கூடிய தலைமை இருந்தது.

இப்போது இல்லையே என்று வேதனைப்படுகிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க, முந்தைய ஆட்சி போல சினிமா மீதே எந்நேரமும் கண் வைத்திருக்க விரும்பவில்லை புதிய அரசு. அதுகூட நியாயம்தான் என்றாலும், ஆட்சி மாற்றத்தை விரும்பி வாக்களித்தது சினிமாக்காரர்களும்தான்!

அந்த வகையிலாவது இதில் உடனடியாக தலையிட வேண்டும் முதல்வர் ஜெயலலிதா. அப்படி தலையிட்டால்தான் பெரிய அளவில் தொழில் முடக்கம் ஏற்படுவதை தடுக்க முடியும்

Arrested, ramdev. பாபா ராம்தேவ் உண்ணாவிரதத்தில் கைது? 144 தடை உத்தரவு

கறுப்பு பணம், ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப் போராட்டம் துவங்கிய பாபா ராம்தேவ் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து பாபா ஆதரவாளர்களுக்கும் போலீசாரிடை‌‌யே கைகலப்பு ஏற்பட்டது இதனையடுத்து கண்ணீர்புகைகுண்டு வீச்சு நடந்தது. தொடர்ந்து போராட்டத்திற்கான அனுமதியை ரத்து செய்யப்பட்டது மட்டுமல்லாது மைதான்தை சுற்றிலும் 144 தடை உத்தரவு பிறப்‌பிக்கப்பட்டுள்ளது.
ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அன்னிய நாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டுக் கொண்டு வர வலியுறுத்தியும், யோகா குரு பாபா ராம்தேவ், சாகும் வரைஉண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்தார். இந்த போராட்டம் நடந்தால், பிரச்னை ஏற்படும் எனக் கருதிய மத்திய அரசு, உண்ணாவிரதத்தை வாபஸ் பெற வைக்க, கடும் முயற்சிகளை மேற்கொண்டது. மூத்த மத்திய அமைச்சர்கள், பாபா ராம்தேவுடன் பேச்சு நடத்தினர். மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததை அடுத்து, நேற்று காலை முதல், உண்ணாவிரதப் போராட்டத்தை ராம்தேவ் துவக்கினார்.

உண்ணாவிரதப் போராட்டத்துக்காக, டில்லி ராம்லீலா மைதானம் முழுவதும், வெல்வெட் துணியால் வேயப்பட்ட பிரமாண்ட பந்தல் போடப்பட்டிருந்தது. நேற்று அதிகாலை முதல், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள், உண்ணாவிரதப் பந்தலில் குவியத் துவங்கினர். ராம்தேவ், காலை 5 மணிக்கு தன் சிஷ்யர்களுடன் மேடைக்கு வந்தார். அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதன் பின், இரண்டு மணி நேரம், பூஜா மற்றும் யோகா பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பஜனை மற்றும் தேசபக்திப் பாடல்கள் இசைக்கப்பட்டன. ராம்தேவ், காலை 7 மணிக்கு உண்ணாவிரதத்தை துவக்கினார். உண்ணாவிரத மேடையில் இந்து, முஸ்லிம், சீக்கிய மதத் தலைவர்கள் ராம்தேவுடன் அமர்ந்திருந்தனர். வந்திருந்த அனைவருமே, எழுச்சியுடன் காணப்பட்டனர். "ஊழலை ஒழிக்க வேண்டும்,கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோஷமிட்டனர்.

சதி: உண்ணாவிரதத்தை துவக்கி வைத்து பாபா ராம்தேவ் பேசியதாவது: ஊழலுக்கு எதிராக என் இயக்கத்தின் மூலம், எந்த அரசியல் குறிக்கோளையும் நிறைவேற்ற, நான் முற்படவில்லை. இந்த இயக்கம் எந்த அரசுக்கும் எதிரானது அல்ல. இந்திய மக்களின் 4 லட்சம் கோடி ரூபாய், அன்னிய வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பணத்தை, மத்திய அரசு திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலுக்கு எதிராக, நான் குரல் கொடுத்தால், என் மீதே ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். என் பெயரில், இந்த நாட்டிலோ அல்லது வெளிநாடுகளிலோ, ஒரு அங்குல நிலம் கூட வாங்கவில்லை. என் பெயரில் எந்த வங்கியிலும் கணக்கு கிடையாது. நமது கோரிக்கைகளில் சிலவற்றை அரசு ஏற்றுக்கொண்டு விட்டது; மேலும் சில கோரிக்கைகள் குறித்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் வரை, என் போராட்டம் தொடரும். என் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறுவோருக்கு சவால் விடுகிறேன். அவர்கள் குற்றச்சாட்டுகளை நிரூபித்து விட்டால், இந்த இயக்கத்தை கலைத்து விடுகிறேன். எனக்கு எதிராக சதி நடந்து வருகிறது. அது என்ன என்பதை தற்போது கூற மாட்டேன். நேரம் வரும்போது கூறுவேன். நம்மை பொறுத்தவரை, முயன்றால் முடியாதது எதுவும் இல்லை.இவ்வாறு ராம்தேவ் பேசினார்.

ராம் தேவ் கைது: மத்திய அரசுடன் உடன்பாடு ஏற்படாததால் ராம் தேவ் தொடர்ந்து உண்ணாவரதத்ததில் ஈடுபட்டார்.இந்நிலையில் நள்ளிரவில் மைதானத்தை சுற்றி போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து போலீசாருக்கும் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கல்வீசப்பட்டது. இதனையடுத்து கண்ணீர் புகை குண்டு வீசசுநடந்தது. போராட்டத்திற்கான அனுமதியும் ரத்து ‌செய்யப்பட்டது.தொடர்ந்துகைது செய்யப்பட்ட பாபாராம் தேவ் டில்லிக்கு வெளியே விடப்பட்டதாக தெரிகிறது. மைதானத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மைதானத்தை சுற்றிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மைதானத்திற்கு வரும் அனைத்து வழிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. உண்ணாவிரத பந்தல்கள் கலைக்கப்பட்டு விட்டது.ஆதரவாளர்கள் அமைதிகாக்கும் படி பாபா ராம் தேவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.‌யோகா பயிற்று வி்ப்பதற்காகமட்டுமே மைதானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. உண்ணாவிரத போராட்டத்திற்காக அனுமதி வழங்க வில்லை என மாநில அரசுதெரிவித்துள்ளது. பாபாராம் தேவ்கைது செய்யப்படவில்லை. அவர் பத்திரமாக பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார் என போலீசார் தெரிவித்துள்ளனர்.அதே சமயம் பாபா ராம் ‌தேவ் மீண்டும் ஹரித்துவார் நகருக்கே அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்றும் கூறப்படு்கிறது. தற்பேதாதைய நிலவரப்படி பாபா ராம்தேவ் தலைநகர் டில்லியில் இல்லை என்பது மட்டும் உறுதியாக தெரியவரு்கிறது.

பாபா ராம்தேவ் கோரிக்கைகள் என்ன?

கீழ்காணும் கோரிக்கைகளை வலியுறுத்தி தான், பாபா ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளார்.

1. வெளிநாடுகளில் கறுப்பு பணத்தை பதுக்கி வைப்பதை, தேசிய குற்றம் என அறிவிக்க வேண்டும்.

2. வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை, தேசிய சொத்தாக அறிவிக்க வேண்டும்.

3. ஊழலில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை விதிக்க வேண்டும்.

4. அன்னா ஹசாரே வலியுறுத்தும் லோக்பால் மசோதாவை சட்டமாக்க வேண்டும்.

5. ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதற்காக, விரைவு கோர்ட்டுகளை அமைக்க வேண்டும்.

6. கறுப்பு பணம் பதுக்கி வைக்கப்படுவதை தடுக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதை வாபஸ் பெற வேண்டும்.

7. இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட தொழில் முறை படிப்புகள், இந்திய மொழிகளில் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

8. நாட்டில், நிலையான அரசியல் சூழ்நிலை நிலவ வேண்டுமெனில், பிரதமரை, மக்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும்.

9. அனைத்து தரப்பு மக்களும், தங்களின் வருவாய் பற்றிய விவரங்களை கட்டாயமாக தெரிவிக்க, உத்தரவிட வேண்டும்.

10. வருமான வரி தொடர்பான விவரங்களை, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும்.

11. உணவுப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை, அதிகரிக்க வேண்டும்.

12. அனைத்து தொழிலாளர்களுக்கும் ஒரே மாதிரியான கூலி நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.

13. விவசாயிகளை கட்டாயப்படுத்தி, நிலம் கையகப்படுத்தும் நடைமுறையை கைவிட வேண்டும்.

14. இந்தி மற்றும் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

உண்ணாவிரத துளிகள்

* உண்ணாவிரதப் பந்தலின் நுழைவு வாயிலில், அதில் பங்கு பெறுவோருக்கு விண்ணப்ப சீட்டு வழங்கப்படுகிறது. உண்ணாவிரதத்தின் போது உடல் நலம் பாதிக்கப்பட்டால், உறவினர்களிடம் தகவல் தெரிவிப்பதற்கு, அவர்களுடைய முகவரி போன்றவை பதிவு செய்யப்படுகிறது.

* உண்ணாவிரதத்தில் கலந்து கொள்வோரிடம், இந்தியாவை ஊழலற்ற தேசமாக மாற்ற உறுதுணையாக இருப்பேன் என்ற உறுதிமொழியில் கையெழுத்து வாங்கப்படுகிறது.

* உண்ணாவிரத பந்தலில் அனுமதிப்பதற்காக, அனைத்து மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கும், தனித் தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.

* காலை 10 மணிக்கு வட மாநில கவுன்டர்களில், மக்களின் கூட்டம் அலைமோதியது.

* தமிழகம், ஆந்திரா, கேரளா கவுன்டர்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

* குடிநீருக்காக, இரண்டு ஆழ்துளை கிணறுகள் மைதானத்தில் அமைக்கப்பட்டிருந்தன. தினமும், ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

* உண்ணாவிரத பந்தலில் 1,300 கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

* டில்லியில் வெப்பம் அதிகமாக இருப்பதால், பந்தலில் 500 கூலர்கள் வைக்கப்பட்டுள்ளன.

* மேடையில் குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது.

* அவசர சிகிச்சைக்காக தனி மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.

* உண்ணாவிரதம் இருப்பவர்கள் சோர்வடையாமல் இருப்பதற்காக, அவ்வப்போது, பாபா ராம்தேவ், நகைச்சுவையாக பேசினார்.

* உண்ணாவிரத மேடையில், ஒருவர் பத்து லட்ச ரூபாய் நன்கொடை அளித்தார். "இது கறுப்பு பணம் அல்ல'என, ராம்தேவ் கூறியதும், பெரும் சிரிப்பலை எழுந்தது.

- நமது டில்லி நிருபர் -