எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
FACEBOOK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
FACEBOOK லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 ஜூலை, 2021

மண்ணின் மணமும் உலகின் அன்பும்.

 2901. நாம் நடத்திய கூட்டத்தில் கேட்டது. மீண்டும் கேட்டேன். மீண்டும் , மீண்டும் கேட்கலாம். அவ்வளவு அருமை. வாசிப்பு விருப்பம் , எழுத்து விருப்பம் உள்ளவர்களுக்கு அவ்வளவு தகவல் இருக்கிறது இதில் 

இத் தருணத்தில் உங்களிடம் சொல்ல சில செய்திகள்இந்த மண்ணை மக்களை - குறிப்பாக நகரத்தார் வாழ்வியலை நீங்கள் எழுத வேண்டும். பெருமிதங்களை மட்டுமல்ல, சிறப்புகள் என்கிற போது குறைகளும் இருக்கும் தானே.. இவைகள் அடங்கிய எழுத்தாக இருக்க வேண்டும். சுஜாதா சொன்னது தான். எவருடைய மனமும் நோகாமல் என்றல்ல.வடிவம் நாவலாக இருக்கலாம். அவசரமாக செய்ய வேண்டும் என்பதில்லை.சொல்ல வந்த செய்தி, அதன் நம்பகத்தன்மைக்கான தேடல், நேர்சந்திப்பில் தகவலை திரட்டுவது என நிதானத் தோடு செய்யலாம் . ரத்தமும் சதையும் மான உண்மை மனிதர்களின் நடமாட்டம், பேச்சு இவைகளை உங்களால் சிறப்பாக கொண்டு வர முடியும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. எத்தனையோ வாழ்வியலை இலக்கிய உலகம் பதிவு செய்திருக்கிறது. இந்த வாழ்வை நீங்கள் மட்டுமே பதிவு செய்ய முடியும். வேறு வகையில் பதிவுகள் நிரம்ப இருக்கிறது.

ஆனால் நாவலாக, நான்குறிப்பிட்ட தன்மையோடு இல்லை.

என் வாசிப்பு கவனத்திற்கு வந்தவரை .

இது என்னுடைய அன்பான விருப்பம் - வேண்டுகோள்.

முடிவு உங்களுடையது.

நன்றி மேடம்.

 ஜீவ சிந்தன்.

ஞாயிறு, 4 ஜூலை, 2021

சில்வர் ஃபிஷும் ஜீவநதியும்.

 2861. இந்தப் பெரும் மௌனத்தை அவள்தான் உடைக்க வேண்டி இருந்தது. முன்னைப் போல எதுவும் மாறிவிடவில்லையென்றாலும் அந்தச் சோம்பலை, முயற்சியி்ன்மையைச் சாடிக் கொண்டிருந்தாள் அவள். நீரோடிப் பொருக்குத் தட்டிய சுவர் உதிர்ந்தது. தவ்விக் குதித்தோடியது மூலைச்சிலந்தி. முடங்கிக் கிடந்த பூனைகள் வெளிறி வெளியேறின. அடைய இடமில்லாமல் திகைத்தது ஆமை. கிரணக் கீற்றுகளால் அறையைத் துண்டாடிக் கொண்டிருந்தது நிலா. நிம்மதி இன்மையுடன் எங்கிருந்தோ சலம்பிக்கொண்டிருந்தது சாமக்கோழி. புரண்டு புரண்டு உறக்கம் தொலைத்து ஓடிக்கொண்டிருந்தது பக்கத்து வாய்க்கால். சில நாகங்கள், நட்டுவாக்கிளிகள், தேள்கள் நிசப்தமாய் ஊர்ந்துகொண்டிருந்தன. கண்ணுக்குத் தெரியா உலகமொன்றில் லயித்தபடி மூளைப்பாதையில் உறைந்து கிடந்தாள் இவள். வெளிச்சம் துப்பும் பகலின் நினைவு கண்ணைக் கூசச் செய்கிறது. விடிவதற்கு இன்னும் வெகுநேரம் இருக்கிறது. மாய உறக்கம் விழிப்புடன் இருக்கிறது. எழுந்திருக்கத்தான் வேண்டும் இன்னும் பிரகாசமாய், பெருநெருப்பாய். !

2862.ரிக்வெஸ்ட் கொடுக்குற அன்புத்தோழமைகளுக்கு ஒரு அறிவிப்பு. 

கதை, கவிதை, கட்டுரைகளோடு கோலம், சமையல் ஃபோட்டோக்கள் எல்லாம் பகிர்வேன். 

அப்புறம் வந்துட்டமேன்னு நொந்து நூடுல்ஸாகக் கூடாது. 

பாருங்க இப்பக்கூட நான் ஒரு FOODIE ன்னு நிரூபிக்கிறேன். 😉 ) 

அப்புறம் உங்க அதிர்ஷ்டம் 😂😂🤣🤣🤣🤣🤣🤣

2863.நடைவண்டி 


2864.இது என்ன & எங்கே இருக்குன்னு சொல்லுங்க.

வியாழன், 21 ஜனவரி, 2021

தாய் மரமும் இரு புது வலைப்பூக்களும்.

 2841. என் இருபத்திஒன்பதாவது மின்னூல் “தாய்மரம்”,அமேஸானில் விற்பனைக்கு உள்ளது. 


விலை ரூ. 50/- மட்டுமே

https://www.amazon.in/dp/B08RS5BFP1 

செல்ஃபோனில் கூட டவுன்லோட் செய்து படிக்கலாம். வாங்கியும் பரிசளிக்கலாம்.( ஈமெயில் ஐடிக்கோ, ஃபோன் நம்பருக்கோ பரிசாக அனுப்ப முடியும் )

தாய்மையும் பெண்மையும் சுயம் உரைக்கும் கவிதைகள்

2842. ஏகப்பட்ட தம்பிங்க இருக்காங்க.. பொங்கல் சீர் இன்னும் வரலையே.

2843. பரந்த மனப்பான்மையுள்ளவர்கள் குற்றம் பார்க்க மாட்டார்கள்.

வியாழன், 31 டிசம்பர், 2020

புதன், 14 அக்டோபர், 2020

பிஸ்கட் வியாபாரமும் பெர்பெண்டிகுலர் திங்கிங்கும்.

 2781. சில இடங்களிலாவது சுயம் துலங்க நாம் நாமாகத்தான் இருக்க வேண்டும். சார்பு என்றைக்கும் மதிப்புத் தராது.

2782. அடுத்தவர்களின் நம்பிக்கையை மதித்துப் புண்படுத்தாமல் இருப்பதே ஆகச்சிறந்த குணம்.

2783. கண்ணாலமாம் கண்ணாலம்


2784. நாற்பது வருஷப் பாரம்பரியத்தைப் பத்து வருஷம் முன்னே உடைக்காம இருந்தா இன்னிக்கும் மார்க்கெட்ல கோலோச்சலாம். 

கட்டம் கட்டமா என்னிக்கு டிசைன் மாறிச்சோ அன்னிக்கே நான் மில்க் பிக்கீஸ் சாப்பிடுறத வெறுத்துட்டேன். 

பாக்கிங் & மூவிங் வசதிக்காக பார்பாரா டிசைன் மாத்துறது, ரெண்டரை நிமிஷம் ப்ரமோ ஆட் போடுறது 

இதெல்லாம் விட்டுட்டு பொதுமக்கள்கிட்டே சர்வே பண்ணி டிஸைனை பழையபடி ஆக்குங்க. பிஸ்குட் வெபாரம் பிச்சிக்கிட்டு ஓடும்.

வியாழன், 30 ஜூலை, 2020

பிறந்தநாள் வாழ்த்துக்களும் ஃபோரம் மாலும்.

2721. ப்லாகர் டாஷ்போர்ட், ஃபேஸ்புக் ஹோம்பேஜ் இதெல்லாம் மாத்துறேன் மாத்துறேன்னு ஏன் அப்பப்போ குடைச்சல் குடுக்குறாங்க. இருக்கதே நல்லாத்தானே இருக்கு. எழுதவே நேரம் கிடைக்கலியாம். இது வேற இம்சை

2722. நாளும் கிழமையும் நலிந்தோருக்கு இல்லை. விடுமுறை நாளும் வலைப்பதிவருக்கு இல்லை. 

2723. விவசாயக் கடனை தள்ளுபடி செய்யலாம். அது இயற்கைப் பேரிடரினால் மீளமுடியாதது.

கல்விக்கடனைக் கட்டாமல் இருப்பது நியாயமா? பெற்று வளர்த்த பெற்றோரைப் புறக்கணிப்பது போன்றது அது.

வீட்டுக்கடனை வட்டியோடு மூன்று மாதம் தள்ளுபடி செய்யச் சொல்வதும் சரிதானா? அந்தப் பணமே பலர் போட்ட டெபாசிட்டிலிருந்து கடன் கொடுப்பதுதான். அப்போ அவர்களுக்கும் ( ஏற்கனவே 5.5 பர்சண்ட் ஆகக் குறைந்து விட்டது வட்டி ) மூன்று மாதம் வட்டி தர முடியாது என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்களா ?

வங்கிகளை திவாலாக்கி விடாதீர்கள். ஏற்கனவே நன்றாக சேவை செய்த பல வங்கிகள் மெர்ஜ் ஆகிவிட்டன.

திங்கள், 13 ஜூலை, 2020

கனவான் பாக்ஸர்ஸும் மிடில்க்ளாஸ் முதியவர்களும்.

2701.மகிழமரமொன்று காவலாய் நிற்கிறது. வீசும் காற்றில் உயர்ந்து வளைந்து ஆடும்போதுதான் கவனித்தேன். அதேபோல் இன்னும் சிலவும் சாலை எங்கும். வாசனையாய் நிரம்பிக் கிடக்கிறது மனிதம் தீண்டாத காற்று.

2702. திரும்பவும் ஒரு தாது வருடப் பஞ்சத்தை எதிர்பார்க்கலாம். உத்தரகாண்டில் வெள்ளம். அடுத்து இங்கே பயிர்பச்சை எல்லாம் தண்ணீரின்றிக் காயும். ஹ்ம்ம். அரிசி விலை உயர்வு. சாதாரணத் தக்காளி 60 ரூபாய் கிலோ, காய்கறி வாங்கவே சம்பளம் பத்தாது போல. கிலோ கணக்கில் வாங்கிப் பொறித்தவர்கள் இப்போ கிராம் கணக்கில் சுருக்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்த தலைமுறை காய்கறி மாத்திரை சாப்பிடுவார்கள்...

2703. சீட்டு விளையாட்டைவிட சுவாரஸ்யம் தீராமலே இருக்கிறது முகநூல் விளையாட்டு

2704. The wise man seeks little joys, knowing that life is long and that his quota of great joys is distinctly limited. -William Feather.

2705. இன்பாக்ஸ் மைண்ட்வாய்ஸ் நு நினைச்சு சிலர் அவுட்பாக்ஸிலேயே பாக்ஸிங் போடுறாங்க.

#கனவான்_பாக்ஸர்ஸ் 

சனி, 27 ஜூன், 2020

வாரா வாரம் ஆரவாரம்.

2681. ஆதிசங்கரர் கனகதாரா ஸ்தோத்திரம் பாடி லெக்ஷ்மி தங்க நெல்லிகனி பொழிந்த கதையும், பட்டினத்தார் கதையும், சபரியின் கதையும் என்றுமே அலுப்பதில்லை. துறவு என்பது அவ்வளவு எளிதானதுதானா ? அதிலும் சபரியின் பக்தி பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லை..

2682. தத்வமஸியாக இருக்க விரும்புகிறோம்.. நிஜத்தில்.. நாமும் காமக் க்ரோத லோப மத மாச்சர்யங்களில் சிக்கிச் சீரழிகிறோம். தெய்வதத்தை உணர்கிறோம். ஆனால் அதாகவே மாற எத்தனை கல்பகோடி காலமோ.. எத்தனை பிறவியோ..

2683. பள்ளியில் தவறு செய்தால் முட்டி போடுவோம். பிரார்த்தனையின் போது முட்டி போடுவோம். இங்கே ப்ராணனை எடுக்க முட்டி போட்ட காட்சி கொடூரம். கொரோனா அவலங்களை திசைதிருப்ப ஒரு உயிரை பலியாக்கிட்டாங்களா ? இரவு முழுதும் தூக்கமில்லை. என்ன வாழ்க்கை இது. ? எங்கோ தொடங்கி எங்கோ முடியுது.

2684. நட்டநடு ரோட்டுல நாலு பாவிங்க கழுத்துமேல முட்டிய வச்சு கொல்ற வீடியோ.. பதறுது பாவிகளா. என்னாலயும் மூச்சுவிட முடில.. அப்பிடி என்ன கொலவெறி..

2685. ஒரு ஆட்டுக்குட்டி மாதிரி அந்தாள் செத்துப் போனான் . இப்ப நெனைச்சாக்கூட விதிர்விதிர்க்குது. ஒரு மாதிரி குழப்பமா இருக்கு. எந்த உறுத்தலுமில்லாம ஒருத்தன் மேல எப்பிடி முட்டி போட முடியும். அந்த முழங்காலை எல்லாம் வெட்டி எறியணும்னு கூட அன்னிக்குக் கோவம் வந்தது.

செவ்வாய், 9 ஜூன், 2020

நடைவழிப் பயணமும் நாணலும்.

2661.ஜன்னல் வழியாக யாரையாவது பார்த்தால் வேற்றுகிரகவாசிகளைப் பார்ப்பதுபோல் புதிதாயிருக்கிறது

2662. நமக்கு இருக்கும் உடல் உபாதைகள், சிற்சில பிரச்சனைகளோடும் கொரோனாவால் அவதிக்குள்ளாகி அன்றாடக் கடமைகளை நடத்த சிரமப்படுபவர்களைத்  தொலைக்காட்சியில் பார்க்கும்போது, ( முடிந்தபோது முடிந்ததை பக்கத்தில் இருக்கும் சிலருக்கு கொடுத்து உதவினாலும் ) நாம் வீட்டில் சமைத்துச்  சாப்பிடுவது கூட ஏதோ குற்றம்போல் மனதைச் சங்கடப்படுத்துகிறது..

2663. என்னன்னவோ குறிக்கோள்களுடன் இருந்து , அடையாளமற்ற இல்லத்தரசியாகி பிள்ளைகள் வளர்ந்தபின் ஏற்பட்ட விரக்தி, வெறுமையைக் களையவே எழுத வந்தேன். நதியின் போக்கில் நானொரு நாணல். உங்கள் நடைவழிப் பயணத்தில் தென்பட்ட கோபுரங்களுக்கருகில் நானொரு குடில். சாதிக்க வயது ஒரு தடையல்ல என்பதை அறிவேன். இருக்கும்வரை இன்னும் சிறப்பாய்க் கொடுக்க முயல்வேன்.

2664. விசிறிகள் பலவகை..

ஞாயிறு, 31 மே, 2020

செவிலித் தாயருக்கும் வங்கி ஊழியருக்கும் வந்தனங்கள்.

2641.குழந்தைகள் கூட சத்தம் கொடுப்பதில்லை. ஒரு கொடுமையான கனவுக்குள் அகப்பட்டது போல் சமைந்துகிடக்கின்றன கட்டிடங்கள்.

2642. ஃபேரி டேல்ஸில் வரும் உறைந்த நகரம்போல் வெய்யில் உறைந்திருக்கிறது நகரத்தின் மேல். சூரியச் சிலந்தியின் இழைகளுக்குள் மாட்டிய பூச்சிகளாய் ஒடுங்கிக் கிடக்கிறோம்.

2643. சிறிதாவது வெளியே வரலாம் என நினைக்கும்போதெல்லாம் அச்சத்தின் பிடியை இறுக்குகிறது கொரோனா.

2644. அடுத்தடுத்து சீனாவிலும் சிங்கையிலும் இரண்டாம் கட்டத் தாக்குதல்.

2645. வங்கி அலுவலர்களும் தினமும் வங்கி செல்ல வேண்டியிருக்கிறது. ஜூன் மாதமே என்றாலும் பள்ளிக் குழந்தைகளை எந்தவித பயமுமில்லாமல்  அனுப்ப மனம் இடம் கொடுக்குமா என்பதும் மிகப் பெரும் கேள்விக்குறி.

சனி, 16 மே, 2020

கிருமிகளும் கொரோனா போராளியும்.

2621. கண்கள் புத்தகத்தை வாசிக்கும்போது மனது வேறொன்றை யோசித்துக் கொண்டிருக்கிறது

2622. ஒரு வாரம் முழுக்க லாப்டாப்பையும் செல்ஃபோனையும் மாற்றி மாற்றி முறைத்துப் பார்த்தபடி அசையாமல் எழுதியோ வாசித்தோ வந்திருக்கிறேன். உள்ளே இரு என்றதும் வெளியே குதிக்கத் துடிக்கிறதே இதயம்.

2623. தேன்சிட்டுகள், மைனாக்கள், தும்பிகள், வண்ணத்துப்பூச்சிகள், காகங்கள், கோழிகள் பொன் வெய்யிலில் செம்மாந்து திரிகின்றன. கம்பித் தடுப்புக்குள் வந்து என் கண்ணிமைகளையும் படபடத்துப் பறக்க வைக்கிறது வெய்யில்

2624. நம்மைச் சார்ந்தோரின் துயரம் நம்மையும் தாக்கி விடுகிறதே

2625. பூமி புதிதாகிக் கொண்டிருக்கிறது. மனதுதான் நோய்க்கூடமாகி விட்டது

வெள்ளி, 8 மே, 2020

ஓங்காரக் கூவலும் அடிபட்ட புறாக்களும்.

2601.  கண்ணையும் கருத்தையும் கவர்ந்த சில கோலங்கள் 


2602. woww..Azadji kalakkureengka.. எனர்ஜிடிக்கா இருக்கு. ட்ரெட்மில்லைக் கொடுத்தாச்சு, வாக்கிங் போக யோசனை. சோ நானும் யோகாவைத் தொடரப் போறேன்.

திங்கள், 4 மே, 2020

பதினைந்து லட்சமும் பரிவட்டமும்.

2581. எவை பற்றியும் கருத்துக் கூறாமலிருப்பது அறியாமையால் அல்ல. அவை பற்றிய சர்ச்சைகளையும், பயங்களையும் அநாவசியமாக உண்டாக்க வேண்டாம் என்றுதான். மௌனத்துக்கும் மொழி உண்டு. அதன் பெயர் கருணை.

2582. திருப்பூட்டும் தாம்பாளம்.


2583. பதினைஞ்சு லட்சம் வரப்போகுதுங்க..

அப்பிடியா.. எங்க ?

என் ப்லாகுலங்க. பேஜஸ் வியூ.

ஏதோ உன் புக்கு ஏதும் பரிசு வாங்கிருச்சோன்னு நினைச்சேன்.

ஙே !!!

ஞாயிறு, 26 ஏப்ரல், 2020

குறவஞ்சியும் காய்கறித் தோரணமும்.

2561.CITY OF FLORENCE

2562. டிடிஸி


2563. நாம பெரிய ஃபோட்டோகிராஃபர்ல.. நம்ம கோச்ல உக்காந்து வானவில்லைக்கூடப் படம் பிடிப்பம்ல.. :)

வியாழன், 19 மார்ச், 2020

புஸ்தகாவும் ராயல்டியும்.

2521. காரைக்குடி கம்பன் மண்டபத்தில் நடக்கும் புக்ஃபேரில் ஸ்டால் வாடகை பதினோரு நாளுக்கு 4,500 ரூபாய். (ஷெல்ஃபுகள் உட்பட). இதுபோக புத்தகங்கள் கொண்டு வரும் எடுத்துச் செல்லும் பயணச் செலவுகள், இரு ஊழியருக்கான பயணப்படி, உணவு, தங்கும் செலவுகள் தனி. பத்து பர்சண்ட் புக் வாங்குபவர்களுக்குத் தள்ளுபடி.

பத்து நாளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு விற்றால் இருபதாயிரம் லாபம். இதில்தான் மேற்கூறிய செலவுகள் அடங்கும். பத்து நாள் உழைப்பிற்கு ஐயாயிரம் கிடைத்தால் எதேஷ்டம். ( கடை போட்டவருக்கு).

ராயல்டி பற்றிய பதிவுகள் அடிக்கடி கண்ணில் படும். சொல்லப் போனா பதிப்பாளர், எழுத்தாளர், விற்பனையாளர்களில் வெகு சிலரைத் தவிர மற்றையோருக்கு வேறு தொழிலோ உத்யோகமோதான் வாழ்வை நன்முறையில் கொண்டு செல்ல உதவும்.

2522. அதீத மனப்பிறழ்வில் இருப்பவர்களும், வரட்டுத்தனமாக வறுமையில் தங்களை ஆழ்த்திக்கொண்டவர்களும் எழுதுவதுதான் சிறந்த எழுத்து என கொண்டாடப்படுகிறது. என்ன அளவுகோலோ..

பித்துப் பிடிச்சு உளறணும் அல்லது பிரக்ஞை தவறித் திட்டணும். தட்ஸால்

அதே போல் முறை தவறிய உறவுகளைப் பத்தி எழுதணும். இல்லாட்டா இரட்டை அர்த்தத்துல எழுதணும்.

செவ்வாய், 3 மார்ச், 2020

செடிக்கன்னியும் சுயமோகமும்.

2501. Be benevolent in sharing knowledge and it comes back to you in multitudes.

--Mr. Kiruba Shankar, CEO, Business Blogging.

2502. ரெண்டு நாளா க்ரூப் க்ரூப்பா போறேன்.. அட அட அட என்ன பாசம் ரெண்டு மூணு பேர் ஒரே க்ரூப்புல நம்மள கோர்த்து விட்டிருக்காங்கப்பா..
அது சரி அப்ப நம்ம புக் போட்டுருக்கோம்கிறதையும் சொல்லணுமில்ல.. அது ரெண்டு மூணு தரம் ஒரே க்ரூப்புல வந்தா கண்டுக்காதீங்க..
இனிமே புதுசா என்ன எந்த க்ரூப்ல சேர்த்தாலும் ஒரு தரம் மட்டும் சேருங்க.:))

நன்றி நன்றி க்ரூப் மக்காஸ்.
நாமளும் கொலைவெறியோட க்ரூப் க்ரூப்பா போஸ்ட் போட வழி செய்ததுக்கு

2503. பதிவர் சந்திப்புக்கு போவாக.. ஃபேஸ்புக் மீட்டுக்கு போவாக.. என்னோட புக் ரிலீஸுக்கு மட்டும் வரமாட்டாக.. இப்படி போனில் மது என் கூட டிஷ்யூம்.

2504. பொங்கல் வந்திரிச்சு. இன்னும் கரும்பு, பனங்கிழங்கு, பலாக்காய் வரணும்.
#பொங்கல்_சந்தை

திங்கள், 27 ஜனவரி, 2020

மூன்று சகோதரர்களும் மூன்று பிரபலங்களின் பொன்மொழியும்.

2481. This susu boy resembles the Manneken Pis.

குழந்தைகள் பிறந்தபோது அம்மா குழந்தைகளுக்குக் கொடுத்த விளையாட்டுச் சாமான்களோடு இருந்தது.

கதவைத் திறந்தால் ரொட்டேட் ஆகுது. இந்த பொம்மை நிற்கும் மேடைக்குக் கீழே நீர் நிரப்பும்படி இருக்கு..

ஞாயிறு, 12 ஜனவரி, 2020

வள்ளுவர் அறிவகம் இராம்மோகன் ஐயாவும் காந்திய சிந்தனையாளர் ம. பா. குருசாமி ஐயாவும்.

2461. மரப்பாச்சி இலக்கிய வட்டம் மாதாந்திரக் கூடுகை

2462. அழைப்பிதழ் வந்தும் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. கானாடுகாத்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நண்பர் நலந்தா ஜம்புலிங்கம் அவர்களின் முகநூல் பக்கத்தில் இருந்து பகிர்கிறேன்.
Related Posts Plugin for WordPress, Blogger...