எனது 24 நூல்கள்
131 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
131 லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 8 மே, 2020
செவ்வாய், 24 மார்ச், 2020
பொங்கி மரவையும் டொப்பி மரவையும் சிலோன் மரவையும்.
1366* மரவைகள் என்பவை மரத்தால் செய்யப்படும் பௌல், பேஸின் , தாம்பாளம் போன்றவை. இவை விருந்தினர் வந்தால் குளிர்பானம் கொடுக்க, பலகாரம் எடுத்து வைக்க உபயோகப்படுகின்றன.
காரைக்குடியில் பெரும்பாலும் மாலை வேளைகளில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்குப் பலகாரத்தை இதிலேயே வழங்குவார்கள். எங்கள் ஆயா வீட்டில் அடுப்படியில் இருக்கும் மர அலமாரியின் மேல் நிறைய மரவைகள் இருக்கும்.
நாங்கள் விடுமுறைக்குச் சென்றிருக்கும்போது மாலை மூன்றரை மணிக்குப் பலகாரமும் ஓவல் அல்லது காஃபியும் கொடுப்பார்கள். பலகாரத்தை இந்த மரவைகளில்வைத்துக் கொடுப்பார்கள். பொதுவாக முறுக்குவடை, மனகோலம், டயர்முறுக்கு, அதிரசம், தேன்குழல் , மாவுருண்டை,சீப்புச்சீடை, சீடைக்காய், போன்ற உலர்ந்தவகை பலகாரங்களே கொடுக்கப்படும். அதனால் மரத்தினால் ஆன இந்த மரவையில் மேலே குறிப்பிட்டவற்றில் ஒரு இனிப்பும், ஒரு உப்பும் வைத்துக்கொடுப்பார்கள். மிகச் சுவையாக இருக்கும் :)
இவற்றுள் தொப்பி போல்/ கப் போல் இருப்பது 1367*டொப்பி மரவை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)