கைவினை வேலைப்பாடுகளில்
கின்னஸ் சாதனை படைத்திருக்கும் கனகலெக்ஷ்மி ஆச்சிக்கு 83 வயது என்றால் நம்பமுடிகிறதா.
திரைத்துறையிலும் அரசியலிலும் மிகப் ப்ரபலமானவர்கள் இவரது இரு சகோதரர்கள். அவர்களைப்
பற்றிக் கட்டுரையின் கடைசியில் குறிப்பிட்டிருக்கிறேன்.
இவர் தன் கைவேலைப்பாடுகளில் தேர்ந்தெடுத்திருக்கும் நிறங்களின் கலவை என்னை அசத்துகிறது. அதேபோல் பர்ஃபெக்ட் வொர்க்கும் கூட.
க்ரோஷா வேலைப்பாடு,
தஞ்சாவூர் பெயிண்டிங், பென்சில் ட்ராயிங், எம்பிராய்டரி , பூக்கள் தயாரிப்பு, ஆயில்
மற்றும் கான்வாஸ் பெயிண்டிங் என்று அனைத்துத் துறையிலும் தனது கைவினைப் பொருட்களைச்
செய்துள்ளார்.
டிவியில் தினம் மூன்று – ஏழெட்டு மணி நேரம் தகாத உறவுகளையும் உறவு உணர்வுச்
சண்டைகளையும் வன்முறை எண்ணங்களையும் கிளப்பும் சீரியல்களை இன்றைய பெரியோர்கள் பார்த்து
உறவுகளிடம் குதர்க்கமாக நடந்து கொண்டிருக்க இவரோ இந்த வயதிலும் தன்னம்பிக்கையோடும்
மலர்ச்சியோடும் தான் கைக்கொண்ட கைவினை வேலைப்பாடுகளில் மனதைச் செலுத்தி விதம் விதமான
பொருட்களைப் படைத்துக் கொண்டிருக்கிறார்.
இன்றைய பெரியவர்களில் விதிவிலக்காக இருக்கும்
இவருக்கு முதலில் ஒரு சிரம் தாழ்ந்த வணக்கம். இனி இவர்பற்றிய விவரங்கள்.