Play இன்ஸ்டண்ட் ஆப்ஸைப் பயன்படுத்துதல்

Google Play இன்ஸ்டண்ட்டைப் பயன்படுத்தி, Play Storeரிலிருந்து ஆப்ஸை உங்கள் சாதனத்தில் நிறுவாமலேயே பயன்படுத்தலாம்.

இன்ஸ்டண்ட் ஆப்ஸைப் பயன்படுத்துதல் 

Play இன்ஸ்டண்ட் ஆப்ஸ் செயல்படும் விதம்

நீங்கள் இணைப்பைத் தட்டும்போது, அதைத் திறக்கக்கூடிய ஆப்ஸ் ஏதேனும் உள்ளதா என Google Play பார்க்கும். உங்கள் சாதனத்தில் ஆப்ஸ் நிறுவப்படவில்லை என்றால் இது இன்ஸ்டண்ட் ஆப்ஸில் (கிடைத்தால்) இணைப்பைத் திறக்கும். 
தற்போதைய செயலைச் செயல்படுத்துவதற்குத் தேவையான ஆப்ஸ் பகுதிகளை மட்டுமே இன்ஸ்டண்ட் ஆப்ஸ் ஏற்றும். ஆப்ஸின் பகுதிகளும் அவை சேமிக்கும் ஏதேனும் தரவும் சாதனத்தில் தற்காலிகமாகவே சேர்க்கப்படும். அந்தத் தரவை அகற்ற, கீழேயுள்ள “குறிப்பிட்ட இன்ஸ்டண்ட் ஆப்ஸுக்கான தரவை அழித்தல்” எனும் பகுதியைப் பாருங்கள். 
குறிப்பு: எப்போது வேண்டுமானாலும் நீங்கள் Play இன்ஸ்டண்ட் ஆப்ஸை முடக்கலாம். மேலே “இன்ஸ்டண்ட் ஆப்ஸை இயக்குதல் அல்லது முடக்குதல்” என்பதன் கீழுள்ள வழிமுறைகளைப் பின்பற்றுங்கள். 

நீங்கள் சமீபத்தில் பயன்படுத்திய இன்ஸ்டண்ட் ஆப்ஸைப் பார்த்தல்

எந்த இன்ஸ்டண்ட் ஆப்ஸை நீங்கள் சமீபத்தில் பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதைப் பார்க்கலாம்:
  1. சாதனத்தில், அமைப்புகள் ஆப்ஸை அமைப்புகள் திறக்கவும்.
  2. Google Google தேடல்அதன் பிறகுஇன்ஸ்டண்ட் ஆப்ஸ் என்பதற்குச் செல்லவும்.
  3. ஏதேனுமொரு ஆப்ஸ் மீது தட்டி, அதன் பயன்பாடு குறித்த கூடுதல் விவரங்களைப் பார்க்கலாம். நீங்கள் பயன்படுத்திய இன்ஸ்டண்ட் ஆப்ஸ் உங்கள் மொபைலின் மேலோட்டப் பார்வை மெனுவில் உள்ள சமீபத்திய ஆப்ஸ் பட்டியலிலும் காட்டப்படும்.

ஆப்ஸை நிறுவுதல்

உங்கள் சாதனத்தில் இன்ஸ்டண்ட் ஆப்ஸை நிறுவாமலேயே பயன்படுத்தலாம். ஆப்ஸைத் தொடர்ந்தோ ஆஃப்லைனிலோ பயன்படுத்த விரும்பினால் நீங்கள் அதை நிறுவலாம். அந்த ஆப்ஸை Play Storeரில் கண்டறியுங்கள் அல்லது இன்ஸ்டண்ட் ஆப்ஸ் மெனுவில் பாருங்கள்:  

Google Play Store மூலம் நிறுவுதல்

  1. Google Play Store ஆப்ஸை Google Play திறக்கவும்.
    • குறிப்பு: play.google.com தளத்திற்கும் செல்லலாம். 
  2. ஆப்ஸைத் தேடவும். 
  3. அதைத் தேர்ந்தெடுக்கவும்.
  4. நிறுவு என்பதைத் தட்டவும்.
  5. திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் சாதனத்தில் ஆப்ஸை நிறுவவும்.  

இன்ஸ்டண்ட் ஆப்ஸ் மெனுவிலிருந்து நிறுவுதல்

  1. சாதனத்தில், அமைப்புகள் ஆப்ஸை அமைப்புகள் திறக்கவும்.
  2. Google Google தேடல்அதன் பிறகுஇன்ஸ்டண்ட் ஆப்ஸ் என்பதற்குச் செல்லவும்.
  3. நிறுவ விரும்பும் ஆப்ஸைத் தட்டவும். 
  4. நிறுவு என்பதைத் தட்டவும். 
  5. திரையில் தோன்றும் வழிமுறைகளைப் பின்பற்றி உங்கள் சாதனத்தில் ஆப்ஸை நிறுவவும். 

குறிப்பிட்ட இன்ஸ்டண்ட் ஆப்ஸின் தரவை அழித்தல்

நீங்கள் பயன்படுத்திய இன்ஸ்டண்ட் ஆப்ஸுக்கான தரவை அழிக்கலாம்:

  1. சாதனத்தில், அமைப்புகள் ஆப்ஸை அமைப்புகள் திறக்கவும்.
  2. Google Google தேடல்அதன் பிறகுஇன்ஸ்டண்ட் ஆப்ஸ் என்பதற்குச் செல்லவும்.
  3. அமைப்பை மாற்ற விரும்பும் இன்ஸ்டண்ட் ஆப்ஸைத் தட்டவும்.
  4. ஆப்ஸ் தரவை அழி என்பதைத் தட்டவும். 

உதவிக்குறிப்பு: உங்கள் Google கணக்குடன் இணைத்துள்ள ஆப்ஸை நிர்வகிக்க உங்கள் கணக்குப் பக்கத்திற்கும் செல்ல நீங்கள் விரும்பக்கூடும். கவனத்திற்கு: டெவெலப்பருடன் நீங்கள் பகிரும் எந்தவொரு தகவலும் டெவெலப்பரின் தனியுரிமைக் கொள்கைக்கு உட்பட்டது. எனவே இந்தத் தகவல்களை நிர்வகிக்க விரும்பினால் டெவெலப்பரைத் தொடர்புகொள்ளுங்கள். 

இன்ஸ்டண்ட் ஆப்ஸுக்கான அனுமதிகளை நிர்வகித்தல்

நிறுவப்பட்ட ஆப்ஸ் போலவே இன்ஸ்டண்ட் ஆப்ஸுக்கான தகவல்கள் தொடர்பான அனுமதிகளையும் அணுகலையும் நீங்கள் தொடர்ந்து கட்டுப்படுத்தலாம். அனுமதிகளை எப்படி நிர்வகிப்பது என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள். 

இன்ஸ்டண்ட் ஆப்ஸுக்கான உதவி

Play இன்ஸ்டண்ட் ஆப்ஸ் தொடர்பாகச் சிக்கல்கள் இருந்தால், உதவியைப் பெற்று சிக்கலைப் பிழையறிந்து திருத்துங்கள்.
 

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
16039818567724963366
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
84680
false
false