புதிய Google கணக்கை எப்படி உருவாக்குவது?

Google கணக்கைப் பயன்படுத்தி Google தயாரிப்புகள் பலவற்றை அணுகலாம். உங்களிடம் Google கணக்கு இருந்தால்:

  • Gmailலைப் பயன்படுத்தி மின்னஞ்சல் அனுப்பலாம் பெறலாம்
  • YouTubeல் உங்களுக்குப் பிடித்த மற்றும் புதிய வீடியோக்களைக் கண்டு ரசிக்கலாம்
  • Google Playயில் இருந்து ஆப்ஸைப் பதிவிறக்கலாம்

படி 1: Google கணக்கின் வகையைத் தேர்வுசெய்யவும்

முக்கியம்: உங்கள் பிசினஸிற்காக Google கணக்கை உருவாக்கும்போது, பிசினஸ் பிரத்தியேகமாக்கல் அம்சத்தை இயக்கலாம். பிசினஸ் கணக்கு, Google Business Profile அமைப்பதை எளிதாக்குகிறது. இது உங்கள் பிசினஸ் தெரிவுநிலையை மேம்படுத்தவும் ஆன்லைன் தகவலை நிர்வகிக்கவும் உதவுகிறது.

Google கணக்கைத் தொடங்கும்போது, உங்கள் தனிப்பட்ட தகவல்கள் சிலவற்றைச் சேர்க்குமாறு கேட்போம். சரியான தகவலை வழங்குவது கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும் எங்கள் சேவைகளை மேலும் பயனுள்ளதாக்கவும் உதவும்.

  1. Google கணக்கு உள்நுழைவுப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. கணக்கை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கீழ் தோன்றும் மெனுவில், இந்தக் கணக்கின் வகையைத் தேர்ந்தெடுக்கவும்:
      • எனது தனிப்பட்ட உபயோகத்திற்கு
      • எனது பிள்ளையின் உபயோகத்திற்கு
      • எனது பிசினஸ் உபயோகத்திற்கு
  3. உங்கள் பெயரை டைப் செய்யவும்.
    • உங்கள் பிறந்தநாளையும் பாலினத்தையும் சேர்க்கும்படி கேட்கப்படும்.
  4. "பயனர்பெயர்" புலத்தில் பயனர்பெயரை டைப் செய்யவும்.
  5. உங்கள் கடவுச்சொல்லை டைப் செய்து உறுதிப்படுத்தவும்.
    • உதவிக்குறிப்பு: மொபைலில் கடவுச்சொல்லை டைப் செய்யும்போது முதல் எழுத்தில் பேரெழுத்து சிற்றெழுத்து வித்தியாசம் இருக்காது.
  6. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
    • விரும்பினால், உங்கள் கணக்கிற்கான மொபைல் எண்ணைச் சேர்த்து உறுதிப்படுத்தவும்.
  7. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

நான் விரும்பும் புதிய பயனர்பெயரை வேறொருவர் பயன்படுத்தினால் என்ன செய்வது?

பின்வரும் சூழல்களில், நீங்கள் பயன்படுத்த விரும்பும் பயனர்பெயரில் Google கணக்கை உருவாக்க முடியாது:

  • ஏற்கெனவே பயன்பாட்டில் இருப்பது.
  • ஏற்கெனவே இருக்கும் பயனர்பெயர் போன்றே கிட்டத்தட்ட இருப்பது.
    • உதவிக்குறிப்பு: example@gmail.com என்ற முகவரி ஏற்கெனவே இருந்தால் examp1e@gmail.com என்பதை நீங்கள் பயன்படுத்த முடியாது.
  • இதற்குமுன் ஒருவர் பயன்படுத்திவிட்டு நீக்கியது.
  • ஸ்பேம் அல்லது தவறான பயன்பாட்டைத் தடுக்க Google ஒதுக்கியது.

Gmail கணக்கும் Google கணக்கும் ஒன்றா?

Gmail மற்றும் Google கணக்குகள் வெவ்வேறானவை. உங்களிடம் Google கணக்கு இருந்தால், நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்றும் தரவைச் சேமிக்கக்கூடிய பல Google சேவைகளில் Gmail கணக்கும் ஒன்றாகும். உங்கள் Google கணக்கின் மூலம் நீங்கள் பயன்படுத்தக்கூடிய பிற சேவைகள்:

  • YouTube
  • Google Drive
  • Calendar
  • Google Play

ஏற்கெனவே இருக்கும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தலாமா?

Google கணக்கை உருவாக்க உங்களிடம் Gmail முகவரி இருக்க வேண்டிய அவசியமில்லை. Gmail அல்லாத மின்னஞ்சல் முகவரியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

புதிய Gmail முகவரிக்குப் பதிலாக ஏற்கெனவே இருக்கும் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்த:

  1. Google கணக்கு உள்நுழைவுப் பக்கத்திற்குச் செல்லவும்.
  2. கணக்கை உருவாக்கு என்பதைக் கிளிக் செய்யவும்.
    • கீழ் தோன்றும் மெனுவில் இருந்து எனது தனிப்பட்ட உபயோகத்திற்கு என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
  3. உங்கள் அடிப்படைத் தகவல்களை டைப் செய்யவும்.
  4. உங்கள் மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்துதல் என்பதைக் கிளிக் செய்யவும்.
  5. உங்களின் தற்போதைய மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும்.
  6. அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.
  7. ஏற்கெனவே இருக்கும் உங்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்ட குறியீட்டின் மூலம் உங்கள் மின்னஞ்சல் முகவரியை உறுதிசெய்யவும்.
  8. சரிபார் என்பதைக் கிளிக் செய்யவும்.
 

படி 2: மீட்புத் தகவலை வழங்குவதன் மூலம் கணக்கைப் பாதுகாக்கவும்

கடவுச்சொல்லை மறந்துவிட்டாலோ உங்கள் அனுமதி இல்லாமல் வேறொருவர் உங்கள் கணக்கைப் பயன்படுத்தினாலோ நீங்கள் வழங்கும் மீட்புத் தகவல் உங்கள் கணக்கை மீட்டெடுப்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

கணக்கிற்கான அணுகலை இழக்காமல் இருப்பது எப்படி என அறிக.

சிக்கல்களைச் சரிசெய்தல்

என்னிடம் ஏற்கெனவே ஒரு Google கணக்கு இருந்தால் என்ன செய்வது?

Gmail, Maps, YouTube போன்ற ஏதேனும் Google தயாரிப்பில் இதற்கு முன்பு உள்நுழைந்திருந்தால் உங்களிடம் ஏற்கெனவே Google கணக்கு உள்ளது. பிற Google தயாரிப்புகளில் உள்நுழைவதற்கும் நீங்கள் உருவாக்கிய அதே பயனர்பெயரையும் கடவுச்சொல்லையும் பயன்படுத்தலாம்.

உள்நுழைந்துள்ளீர்களா இல்லையா என்பது உங்களுக்கு உறுதியாகத் தெரியாமல் இருந்து உங்களிடம் கணக்கு உள்ளதா என்று பார்க்க விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை டைப் செய்யவும். உங்கள் மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்புடைய Google கணக்கு இல்லையெனில் உங்களுக்கு மெசேஜ் காட்டப்படும்.

ஏற்கெனவே உள்ள Google கணக்கில் நீங்கள் உள்நுழையலாம்.

எனது Google அறிவிப்புகள் எங்கே அனுப்பப்படும்?

கணக்கு தொடர்பான அறிவிப்புகள் இயல்பாகவே உங்களின் புதிய Gmail முகவரிக்கோ, வேறு மின்னஞ்சல் முகவரி மூலம் பதிவு செய்திருந்தால் உங்களின் Google அல்லாத மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பப்படும்.

அறிவிப்புகளைப் பெறுவதற்கான மின்னஞ்சல் முகவரியை மாற்ற உங்கள் தொடர்பு மின்னஞ்சல் முகவரியை மாற்றுங்கள்.

உதவிக்குறிப்பு: உங்களிடமுள்ள Google அல்லாத மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தியும் நீங்கள் Google கணக்கை உருவாக்கலாம்.

நான் விரும்பும் புதிய மின்னஞ்சல் முகவரி ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?

புதிய கணக்கிற்கு இந்த மின்னஞ்சல் முகவரியை உங்களால் தேர்வுசெய்ய முடியாது. இந்த மின்னஞ்சல் முகவரி உங்களுடையதுதான் என்றால், நீங்கள்:

true
Google கணக்கிற்கு வரவேற்கிறோம்!

உங்களிடம் புதிய Google கணக்கு உள்ளதைக் கண்டறிந்துள்ளோம்! உங்கள் Google கணக்கின் சரிபார்ப்புப் பட்டியல் மூலம் உங்கள் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேடல்
தேடலை அழி
தேடலை மூடும்
முதன்மை மெனு
6161504663486098704
true
உதவி மையத்தில் தேடுக
true
true
true
true
true
70975
false
false