Tuesday, April 17, 2012

பிறந்தநாள் வாழ்த்துக்கள். உமா கணேஷ் ...








கருக்கலில் ஒரு பல்  
சிரிக்கிறது 
தெருக்களில் முதல் வந்த 
விடிவெள்ளி 
மாலையில் விரிந்த மென் 
வடிவல்லி 
விடியல்வரை வெண் பனி 
சுமக்கிறது 
வெண்பனி தின்ற மகன்  
பரிதியவன் 
சுட்டெரிக்கும் வெயில் 
வெள்ளொளியும் 
கண்ணொளி வீசும் உம்மிடம் 
தோற்கிறது 
தினம் தினம் போரிட்டு 
பார்க்கிறது 
மறைவான இடம் தேடி 
ஒளிகிறது 
கதிரவன் தோற்கடிக்கும் 
பெண்ணிலவே 
நட்பூட்டி வளர்கின்ற 
வெண்ணிலவே 

பிறந்தநாள் வாழ்த்துக்கள். உமா கணேஷ் ...