Thursday, 28 July 2011 | By: Menaga Sathia

வெங்காய சமோசா /Onion Samossa


Hi Friends, See My Guest Post  at Nithu's Kitchen......

சின்ன வயசுல இந்த வெங்காய சமோசாவை சாப்பிட்டது.அதோட இந்த சமோசாவை மறந்தேபோய்ட்டேன்.ஒரு நாள் எங்க அண்ணி வெங்காய சமோசா உங்க அண்ணன் செய்து கொடுத்தார் சாப்பிட்டோம்னு சொன்னாங்க.விடுவோமா உடனே அதை எப்படி செய்றதுன்னு அண்ணியிடம் கேட்டு  செய்து சாப்பிட்டாச்சு.என் பொண்ணுக்கு ரொம்ப பிடித்துவிட்டது.

தே.பொருட்கள்

சமோசா ஷீட் - 5
எண்ணெய் - பொரிப்பதற்க்கு

ஸ்டப்பிங் செய்ய
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
கொத்தமல்லித்தழை - (சிறிது பொடியாக நறுக்கியது)
அவல் - 1 கைப்பிடி
ஆம்சூர் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு-தேவைக்கு

செய்முறை
*ஸ்டப்பிங் செய்ய கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாக கலக்கவும்.

*உப்பு+வெங்காயத்தின் ஈரத்திலேயே அவல் ஊறிவிடும்.

*சமோசா ஷீட்டை (பெரிதாக இருக்கும் )2ஆக கட் செய்து,ஒரு ஷீட்டில் ஸ்டப்பிங்கை வைத்து சமோசாவாக மடித்து பொரித்தெடுக்கவும்.

பி.கு
*சமோசா ஷூட் இல்லையெனில் மைதா+உப்பு+வெண்ணெய் சேர்த்து கெட்டியாக பிசைந்து,சப்பாத்தி போல் மெலிதாக தேய்த்து ஸ்டப்பிங் வைத்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
Tuesday, 26 July 2011 | By: Menaga Sathia

உருளைக்கிழங்கு தேங்காய்ப்பால் வறுவல்/ Potato Varuval With Coconut Milk

தே.பொருட்கள்

உருளைக்கிழங்கு - 3 பெரியது
நீளவாக்கில் அரிந்த வெங்காயம் - 1
கீறிய பச்சை மிளகாய் - 2
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 1 கப்
காஷ்மிரி மிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
சோம்பு - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை

*உருளையை தோல்சீவி நடுத்தர துண்டுகளாக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப் போட்டு தாளித்து வெங்காயம்+பச்சை மிளகாய்+இஞ்சி பூண்டு விழுது+மிளகாய்தூள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் உப்பு+தேங்காய்ப்பால்+உருளை சேர்த்து வேகவைத்து  நன்கு சுருள கிளறி இறக்கவும்.
Monday, 25 July 2011 | By: Menaga Sathia

வெஜ் ஸ்டாக் செய்வது எப்படி??/ Homemade Veg Stock

 வெஜ்க்கு பதில் சிக்கன் ஸ்டாக் செய்ய சிக்கன் எலும்பு,தோல்,தேவையில்லாத சிக்கன் சதைப் பகுதிகள் சேர்த்து செய்யலாம்.நன்றி அன்னு!!

தே.பொருட்கள்
பூண்டுப்பல் -10
துருவிய இஞ்சி -1 டேபிள்ஸ்பூன்
நறுக்கிய வெங்காயம் - 1/2 கப்
சோம்பு,தனியா,மிளகு- தலா 1 டேபிள்ஸ்பூன்
கறுப்பு ஏலக்காய் - 2
பிரியாணி இலை- 1
பச்சை மிளகாய் - 6
கிராம்பு- 4
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
உப்பு - தேவைக்கு
காய்கறி - 1 1 /2 கப்

செய்முறை

*குக்கரில் எண்ணெய் விட்டு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு தாளித்து உப்பு+காய்கறி+நீர் சேர்த்து 4-5 விசில் வரை வேகவைக்கவும்.

*பின் ப்ரெஷர் அடங்கியதும் நீரை வடிகட்டி சூப்,பிரியாணி செய்ய பயன்படுத்தவும்.

பி.கு
கேரட்,பீன்ஸ்,பட்டானி,காலிபிளவர்,தர்பூசணி வெள்ளை பகுதி,அஸ்பாரகஸ் தண்டுபகுதி முதலிய காய்கள் சேர்த்து செய்துள்ளேன்.
Thursday, 21 July 2011 | By: Menaga Sathia

வெங்காய கோசு / Vengaya kosu

திருமதி.சோலை அவர்களின் குறிப்பில் பார்த்து செய்தது.இட்லி,தோசைக்கு செம காம்பினேஷன்!!
தே.பொருட்கள்
வெங்காயம் - 4 பெரியது
தக்காளி - 1
உருளைக்கிழங்கு - 1 சிறியது
எண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கு

அரைக்க
தேங்காய்த்துறுவல் - 4 டேபிள்ஸ்பூன்
காய்ந்த மிளகாய் -6
பொட்டுக்கடலை - 2 டேபிள்ஸ்பூன்(அ)முந்திரி - 6

தாளிக்க
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு - 2
சோம்பு - 1 டீஸ்பூன்

செய்முறை
*அரைக்க கொடுத்துள்ளவைகளை நைசாக அரைக்கவும்.வெங்காயம்+தக்காளி+உருளையை தோல் சீவி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்.

*குக்கரில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+உருளை+உப்பு சேர்த்து வதக்கவும்.

*பின் தேங்காய் விழுது+3 கப் நீர் விட்டு 1 விசில் வரை வேகவைத்து எடுக்கவும்.

பி.கு
கடாயில் செய்வதாக இருந்தால் உருளை வெந்த பிறகுதான் தேங்காய் விழுதை சேர்க்கவேண்டும்.
Monday, 18 July 2011 | By: Menaga Sathia

ஒட்ஸ் வாங்கிபாத்/ Oats Vangibath

தே.பொருட்கள்

ஒட்ஸ் - 1 கப்
பொடியாக அரிந்த கத்திரிக்காய் -1/2 கப்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 சிறியது
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன்
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவைக்கு

வறுத்து பொடிக்க
தனியா - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
கொப்பரைத்துறுவல் - 1 டேபிள்ஸ்பூன்
மிளகு,சீரகம் - தலா 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/4 டீஸ்பூன் குறைவாக
கிராம்பு,பட்டை-தலா 1

செய்முறை
*ஒட்ஸை எலுமிச்சை சாறு+தண்ணீர் சேர்த்து லேசாக பிசிறி வைக்கவும்.சிறிது நேரத்தில் உதிரியாகிவிடும்.

*வறுத்து பொடிக்க கொடுத்துள்ளவைகளை வெறும் கடாயில் வறுத்து பொடிக்கவும்.

*கடாயில் எண்ணெய் விட்டு கடுகு+உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்து வெங்காயம்+கத்திரிக்காய்+மஞ்சள்தூள்+உப்பு சேர்த்து சிறுதீயில் வதக்கவும்.

*கத்திரிக்காய் வெந்ததும் பொடித்த பொடி+ஒட்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

Wednesday, 13 July 2011 | By: Menaga Sathia

வெண்பொங்கல்&பாம்பே(கடலைமாவு)சாம்பார்/ Venpongal &Bombay(Besan)Sambhar

பொங்கல் செய்ய தே.பொருட்கள்
பச்சரிசி - 1 கப்
பாசிப்பருப்பு  - 3/4 கப்
பால் - 1 1/2 கப்
தண்ணீர் - 2 1/2 கப்
உப்பு - தேவைக்கு

தாளிக்க
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயம் - 1/4 டீஸ்பூன்
முந்திரி - தேவைக்கு
பொடியாக நறுக்கிய இஞ்சி -1டீஸ்பூன்
மிளகு -1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்

செய்முறை
*பருப்பு+அரிசி+உப்பு+பால்+தண்ணீர் சேர்த்து குக்கரில் நன்கு குழைய வேகவைக்கவும்.

*பின் தாளிக்க கொடுத்துள்ளவைகளை தாளித்து சேர்த்து நன்கு கலக்கி வைக்கவும்.

கடலைமாவு சாம்பார் செய்ய தே.பொருட்கள்
கடலைமாவு - 3 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி -தலா 1 சிறியது
கீறிய பச்சை மிளகாய் - 2
மஞ்சள்தூள் -1/4 டீஸ்பூன்
சாம்பார் பொடி - 1/2 டீஸ்பூன்
புளிபேஸ்ட் - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை -சிறிது
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

தாளிக்க
கடுகு,உளுத்தம்பருப்பு - தலா 1/2 டீஸ்பூன்
சீரகம் -1/4 டீஸ்பூன்
பெருங்காயம் -1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை
*கடலைமாவை வெறும் கடாயில் லேசாக வறுத்து ஆறவைத்து மஞ்சள்தூள்+1 1/2 கப் நீர் விட்டு கட்டியில்லாமல் கரைக்கவும்.

*பாத்திரத்தில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ளவைகளைப்போட்டு தாளித்து வெங்காயம்+தக்காளி+பச்சை மிளகாய் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்கவும்.

*பின் புளியை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி+உப்பு+சாம்பார் பொடி சேர்த்து கொதிக்கவிடவும்.

*நன்கு கொதித்ததும் கரைத்துவைத்த கடலைமாவை ஊற்றி கட்டியில்லாமல் கலக்கி 5-6 நிமிடங்கள் கொதிக்கவிடவும்.

*சிறிதளவு கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.

*இந்த சாம்பார் சப்பாத்தி,பூரிக்கும் நன்றாகயிருக்கும்.
Monday, 11 July 2011 | By: Menaga Sathia

சுர்ரோஸ் /Churrose - Spanish Fritters

தே.பொருட்கள்

மைதா - 1 கப்
ஐசிங் சுகர் - மேலே தூவ
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை
*ஒரு பாத்திரத்தில் தேவையானளவு நீர்+உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

*கொதி நீரை மைதா மாவில் ஊற்றி மரக்கரண்டியால் கெட்டியாக பிசையவும்.

*முறுக்கு 1 ஸ்டார் அச்சில் மாவை கொஞ்சமா போட்டு எண்ணெயில் நேரடியாக நீளமாக பிழிந்து பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

*பின் அதன்மேல் ஐசிங் சுகர் தூவி சூடாக சாப்பிட சூப்பராகயிருக்கும்.

Sending to Priyas Flavours of Spain started by simply.food
Thursday, 7 July 2011 | By: Menaga Sathia

ஷாஹி துக்கடா / Shahi Tukda

தே.பொருட்கள்
ப்ரெட் - 5
சர்க்கரை - 1 கப்
தன்ணீர் - 1/2 கப்
பால் - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
நெய்யில் வறுத்த முந்திரி,திராட்சை = தேவைக்கு
நெய் - பொரிக்க தேவையானளவு

செய்முறை
*ப்ரெட்டின் ஓரங்களை கட் செய்து 2ஆக கட் செய்யவும்.

*பாலில் ஏலக்காய்த்தூள் சேர்த்து சுண்டக் காய்ச்சவும்.

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை+தண்ணீர் சேர்த்து 1 கம்பிபதம் வரை காய்ச்சி எடுக்கவும்.

*நெய்யில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

 *பொரித்த ப்ரெட் துண்டகளை சர்க்கரை பாகில் போட்டு எடுக்கவும்.
*சர்க்கரை பாகில் நனைத்த ப்ரெட் துண்டுகள்
*பரிமாறும் போது ப்ரெட் துண்டுகளை வைத்து அதன் மேல் பாலை ஊற்றி வறுத்த முந்திரி திராட்சைகளை சேர்த்து பரிமாறவும்.
Tuesday, 5 July 2011 | By: Menaga Sathia

கத்திரிக்காய் வறுவல்- 2 / Eggplant Fry - 2

தே.பொருட்கள்

பெரிய கத்திரிக்காய் - 1
சிக்கன் 65 மசாலா - 2 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 1/2 டீஸ்பூன்
உப்பு+எண்ணெய் = தேவைக்கு

செய்முறை

*கத்திரிக்காயை சிறிது தடிமனாக வட்டமாக நறுக்கவும்.

*ஒரு பவுலில் சிக்கன் மசாலா+எலுமிச்சை சாறு+உப்பு+இஞ்சி பூண்டு விழுது+எண்ணெய் 2 டீஸ்பூன் என் அனைத்தையும் ஒன்றாக கலந்து கத்திரிக்காயில் தடவி 10 நிமிடம் வைக்கவும்.

*நான் ஸ்டிக் கடாயில் சிறுதீயில் 2புறமும் வேகவைத்து எடுக்கவும்.ஏற்கனவே எண்ணெய் சேர்த்து பிசைந்திருப்பதால் தேவையானால் மட்டும் எண்ணெய் விட்டு வேகவைக்கவும்.

*சாம்பார்,தயிர்,ரசம் சாதமுடன் சாப்பிட நன்றாகயிருக்கும். 

Friday, 1 July 2011 | By: Menaga Sathia

பாசிப்பருப்பு பாயாசம் / Moong Dhal Payasam

தே.பொருட்கள்

பாசிப்பருப்பு - 1 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
ஜவ்வரிசி - 1 டேபிள்ஸ்பூன்
வெல்லம் - 3/4 கப்
சுண்டக் காய்ச்சிய பால் - 1/2 கப்
ஏலக்காய்த்தூள் -1/4 டீஸ்பூன்
முந்திரி,திராட்சை - தேவைக்கு
பொடியாக நறுக்கிய தேங்காய்ப்பல் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்

செய்முறை

*பாசிப்பருப்பை வெறும் கடாயில் லேசாக வாசனை வரும்வரை வறுக்கவும்.ஜவ்வரிசியையும் லேசாக வறுக்கவும்.

*பாத்திரத்தில் கடலைப்பருப்பை வேகவைக்கவும்.3/4 பதம் வெந்ததும் வறுத்த பாசிப்பருப்பை அதனுடன் சேர்த்து வேகவைக்கவும்.

*பாசிப்பருப்பு 1/2 பதம் வெந்ததும் ஜவ்வரிசியை சேர்த்து வேகவைக்கவும்.

*வெல்லத்தை சிறிது தண்ணீரில் கரைத்து மண்ணில்லாமல் வடிக்கட்டி வைக்கவும்.கடாயில் நெய் விட்டு தேங்காய்ப்பல்+முந்திரி திராட்சையை வறுக்கவும்.

*ஜவ்வரிசி வெந்ததும் வெல்லம்+பால்+ஏலக்காய்த்தூள் சேர்த்து சிறிது நேரம் கொதிக்கவிட்டு இறக்கி வறுத்த தேங்காய்ப்பல் முந்திரிகளை சேர்க்கவும்.

01 09 10