•Sunday, January 20, 2013
இந்த இட்லி நல்லெண்ணெய், நெய் வாசனையோட சாப்பிட ரொம்ப நல்லா இருக்கும்... மாவு அரைத்ததும் செய்து விடலாம்...
தேவையான பொருட்கள் :-
உளுத்தம் மாவு - 2 கை
அரிசி - 1 1/2 ஆழாக்கு
மிளகு பொடி - 4 ஸ்பூன்.
சீரக பொடி - 1 ஸ்பூன்
சுக்குபொடி - 1 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 4 டேபிள்ஸ்பூன்
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
முந்திரி - 10
உப்பு - தேவையான அளவு
புளிச்ச தயிர் - 1/2 கப்
செய்முறை :
1. இட்லிக்கு மாவு அரைக்கும் போது, உளுந்து மாவு 2 கை எடுத்துக்கணும்...
2. 2 ஆழாக்கு அரிசியை ரவை மாதிரி மிச்சில அரச்சுக்கணும்..இதுக்கு பேர் தான் அரிசி உடைசல்..இதை வைத்து உப்புமா, தவளை தோசை, காஞ்சீபுரம் இட்லி பண்ணலாம்...
3. அரிசி உடைசலை தண்ணீர் விட்டு களைந்து, உளுந்து மாவில் சேர்க்கணும்...
4. புளிச்ச தயிர் விட்டு நன்றாக கலக்கணும்...
5. நெய்யில் முந்திரி வறுத்து கொட்டனும்...
6. எண்ணெய், நெய், மிளகு பொடி,சீரக பொடி , உப்பு, சுக்கு பொடி எல்லாம் போட்டு கலந்து 1/2 மணி நேரம் மூடி வைக்கவும்...
7. குட்டி, குட்டி டம்ளரில் நெய் தடவி மாவு விட்டு
வேக வைத்து எடுக்கணும்...
கத்தியால் கேக் எடுப்பது போல் எடுத்தால் காஞ்சீபுரம் இட்லி ரெடி..
8. மிளகாய் பொடியுடன் தொட்டுண்டு சாப்பிட சூப்பர் ரா இருக்கும்...
மாவு அரச்சவுடன் 1/2 மணி நேரம் வைத்து உடனே செய்து விடனும்... இந்த இட்லிக்கு கார சட்னி கூட தொட்டுண்டு சாப்பிடலாம்... "அம்மா சமையல்" ல இந்த குறிப்பு சீக்கிரம் தருவதாக சொல்லி இருந்தேன்.. ரொம்ப லேட் ஆகிடுத்து... முயற்சி செய்து பாருங்க..