இத்தைத்திருநாளில்
கதிரவனை நமஸ்கரித்து
மஞ்சளும் கரும்புமான அலங்காரத்துடன்
ஆண்டவனை உளமுருக வேண்டி
பானை வழிய பொங்கவிட்டு
பொங்கலோ பொங்கலென கொண்டடுவதைப்போல
சந்தோசங்கள்
உறவுகள்
செல்வங்கள்
வாய்ப்புகள்
அனைத்தும் மென்மேலும் பொங்கி வழிய
எனது உளமார்ந்த வாழ்த்துக்கள்!!!!
Friday, January 14, 2011
15-Jan-2011: பொங்கல்!!
Labels:
என் பிதற்றல்கள்
Monday, November 8, 2010
08.Nov.2010: நானாக நான் இல்லை...
பட்டாசு தயாரிக்க குழந்தைகளை
உபயோக படுத்தியதை எதிர்த்து வாங்காமலிருப்பதா? - இல்லை
பட்டாசு தயாரித்த குழந்தையின்
உழைப்பு வீண் போகாமலிருக்க வாங்குவதா? - இல்லை
பட்டாசு வெடிக்க ஆவலாக இருக்கும்
என் குழந்தையின் ஆசைக்காக வாங்குவதா? - இல்லை
பட்டாசு வாங்காது போனால் தவிக்கும்
என் குழந்தையின் தவிப்பை போக்க வாங்குவதா?
வாங்குவதா? வேண்டாமா? புரியவில்லை ...
ஆனால் ...
நானாக நான் இருப்பதொன்றும் அவ்வளவு
எளிதல்ல என்பது மட்டும் புரிந்தது.
Labels:
என் பிதற்றல்கள்
Sunday, November 7, 2010
08.Nov.2010: தீபாவளி(லி??)!!!
தீபாவளி அன்று யார் வீட்டின் முன்
நிறைய பட்டாசு காகிதங்கள்
என்று தெருவில் வேடிக்கை பார்த்தபடி
சென்றனர் இரு சிறுவர்கள்...
தான் வெடித்தது தான் அதிகம்
என்ற சந்தோஷத்தோடு ஒருவன்
அவன் வீட்டினுள் ஓடுகையில்...
இன்னொருவன் முன்னவனை விட சந்தோஷத்தோடு
தனது சாக்குமூட்டையை திறந்தான் -
அந்தக் காகிதங்களை அள்ளுவதற்கு!
Labels:
என் பிதற்றல்கள்
Subscribe to:
Posts (Atom)